பஞ்சாப் முதல்வர் மீது ‛ஷூ' வீச்சு; தோல்வி பயம் காரணமா?
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

முக்த்சர் : எதிரணியினரின் தோல்வி பயம் காரணமாகவே தன் மீது ‛ஷூ' வீசப்பட்டதாக பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் குற்றம் சாட்டினார்.


‛ஷூ' வீச்சு:


பஞ்சாபில், முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான, சிரோன்மணி அகாலி தளம் ஆட்சி நடைபெற்று வருகிறது. பஞ்சாப் மாநிலம் முக்த்சர் மாவட்டம், லாம்பியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தின் போது, பஞ்சாப் முதல்வர் பாதல் மீது நேற்று ‛ஷூ' வீச்சு சம்பவம் நடைபெற்றது. இதில் அவரது மூக்குக் கண்ணாடி உடைந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த முதல்வர் பாதல், அங்கிருந்து வெளியேறினார். போலீசார் அந்த இளைஞரை கைது செய்தனர்.


தோல்வி பயம்:


பின்னர் ‛ஷூ' வீச்சு சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த பாதல் கூறியதாவது: என் மீது, 'ஷூ' எறியப்பட்ட சம்பவம், எதிரணியினர், தோல்வியை ஒப்புக் கொண்டதற்கு ஆதாரம். தோல்வி பயத்தால், இத்தகைய மோசமான செயல்பாடுகளில் அவர்கள் ஈடுபடுகின்றனர்; இருப்பினும், அமைதி, பொறுமை, மத நல்லிணக்கத்தோடு, பஞ்சாப் மாநில வளர்ச்சிக்காக பாடுபடுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
12-ஜன-201716:43:14 IST Report Abuse
Endrum Indian அது சரி தான், பதவிக்கு மறுபடியும் வந்தால் போதை மருந்தை ஒழிப்போம் என்று ஒரு தீர்மானம் கொள், அதுவே நாட்டுக்கு செய்யும் நல்ல செயல்.
Rate this:
Share this comment
Cancel
vnatarajan - chennai,இந்தியா
12-ஜன-201714:39:31 IST Report Abuse
vnatarajan நம்நாட்டில் கருத்துக்கூறுவதற்குத்தான் சுதந்திரம் உண்டு ஆனால் செருப்பு போன்ற பொருள்களை அரசியல்வாதிமேல் வீசுவது மிகவும் அநாகரிகம் மீடியாக்களில் தான் பிரபலமாக வரவேண்டும் என்பதற்காகவே எந்த தண்டனைக்கும் பயப்படாமல் ஒரு அசட்டு துணிச்சலுடன் இப்படிப்பட்ட செயல்களை செய்ய அவர்களுடைய மூளை தூண்டுகிறது. இதை செயபவன்தான் தலை குனியவேண்டும் இந்த கலாச்சாரம் உலகின் மற்ற நாடுகளிலும் நடப்பதுதான் மிகவும் வேதனையாக இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
12-ஜன-201714:22:09 IST Report Abuse
Chandramoulli பஞ்சாப் முழுவதும் போதை வஸ்து அதிகம் கிடைக்கிறது . தேர்தல் என்பதால் தடை விதிக்கப்பட்டு உள்ளது . போதை கிடைக்காத ஆத்திரத்தில் நடந்த சம்பவமாக இருக்கும். நமது ஊர் சீமான் , அன்புமணி , வைகோ , மற்றும் டாஸ்மாக் எதிராளிகள் இதற்கும் குரல் கொடுக்கலாமே.
Rate this:
Share this comment
Cancel
kavithakannan - Nagerkoil,இந்தியா
12-ஜன-201714:21:01 IST Report Abuse
kavithakannan ஆமாம் அந்த சூ வீச்சில் போலீசில் பிடிபட்ட நபர் இப்போ என்னானார்? இது போல தான் 96ல் மதுரையில் தேர்தலின் சமயத்தில் முதல்வர் media முன்பு ஒரு செருப்பு வீச்சு நடந்தது? அதாவது ஒரு பழமொழி ஞாபகம் வருது - தோல்வி வரும் பின்னே ஆனா செருப்பு வரும் முன்னே...... அப்படி பார்த்தால் அரசு ஊ ஊ ஊ ஓ ???????????????
Rate this:
Share this comment
Cancel
12-ஜன-201712:07:45 IST Report Abuse
உங்கள் சின்னமா வீச்சு புரோட்டா தான் கேள்வி பட்டு இருக்கிறோம். இப்போது புது ட்ரெண்ட் ஷூ வீச்சு
Rate this:
Share this comment
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
12-ஜன-201708:24:20 IST Report Abuse
A.George Alphonse Nowadays the dirty cultures of throwing shoes and spilling ink on the VVIPs and VIPs are become common and order of the day.The culprits who are all committing such ugly and dirty acts must be punished severely and given an exemplary punishment as such acts should not be committed by any one near future. Such types of barbaric acts must be nipped from the bud itself and a pleasant and good atmosphere must be d at the time of government functions and political gathering of VVIPS and VIPS in states and national level.
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
12-ஜன-201707:34:34 IST Report Abuse
தேச நேசன் விளம்பரத்துக்காக காசு கொடுத்து செருப்பு வீசச்சொல்லும் கேவல கலாச்சாரம் தொடர்கிறது
Rate this:
Share this comment
Cancel
Sriram - Chennai,இந்தியா
12-ஜன-201707:22:04 IST Report Abuse
Sriram நீங்க போதைய கண்ட்ரோல் பண்ணீங்களா ,?அந்த இளைஞன் எப்படி பாதிக்கப்பட்டானோ ?
Rate this:
Share this comment
Cancel
pannadai pandian - wuxi  ( Posted via: Dinamalar Android App )
12-ஜன-201706:37:59 IST Report Abuse
pannadai pandian நீங்கள் வென்றால் மகிழ்ச்சி நல்லதே நடக்கும் ஆனால் இந்த முறை வென்றால் போதை மருந்து மற்றும் நார்காட்டிக் பொருள்களை தீவிரமாக தடை செய்து இளைஞர்களை காப்பாற்றுங்கள் இளைய பஞ்சாப் சமுதாயம் போதையில் மூழ்கி கிடக்கிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்