Simbu supports jallikattu | ‛இது ஆரம்பம் தான்...' - ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சிம்பு போராட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

‛இது ஆரம்பம் தான்...' - ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சிம்பு போராட்டம்

Added : ஜன 12, 2017 | கருத்துகள் (71)
Advertisement
simbu, str, jallikattu,

சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து நடிகர் சிம்பு, தன் வீட்டு முன்பு குடும்பத்தாருடன் கறுப்பு உடையணிந்து மவுனமான முறையில் போராட்டம் நடத்தினார். அவருடன் சேர்ந்து ஏராளமான ரசிகர்களும் கலந்து கொண்டனர்.
தமிழர் திருநாளான பொங்கல் திருவிழா நெருங்கிவிட்டது. இன்னும் ஒருநாளே உள்ள நிலையில் கடைசிகட்ட முயற்சியாக ஜல்லிக்கட்டுக்காக ஆதரவு வேண்டி மாநிலம் முழுக்க பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றனர். அரசியல் கட்சியினர், மாணவர்கள், திரையுலகினர் என பலரும் போராட்ட களத்தில் குதித்துள்ளனர்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு தொடர்பாக நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த சிம்பு, மிகவும் ஆவேசமாக பேசினார். குறிப்பாக தமிழர்களின் கலாச்சாரத்தின் மீது வைத்ததை பொறுத்து கொள்ள முடியாது. அரசியல் ரீதியாகவும், அமைப்பு ரீதியாகவும் நாம் பிளவுப்பட்டு கிடப்பதை எண்ணி வேதனையாக இருக்கிறது. எங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தி தமிழர்களை அநாதையாக்கிவிட்டார்கள் என்றார். அதோடு அவரவர் வீட்டு முன்பு 10 நிமிடம் எழுந்து நின்று மவுன போராட்டம் நடத்துங்கள் என்றார்.


மவுன போராட்டம் :

அதன்படி நடிகர் சிம்பு இன்று தி.நகரில் உள்ள வீட்டு முன்பு கறுப்பு உடையணிந்து மவுன போராட்டம் நடத்தினார். அவருடன் அவரது அம்மா உஷா, அப்பா டி.ராஜேந்தர் உள்ளிட்ட குடும்பத்தாரும், ஏராளமான ரசிகர்களும் கலந்து கொண்டனர்.


இது ஆரம்பம் தான்... :

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிம்பு... ‛‛தமிழ்நாட்டிற்காக வந்த அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி, என்னாலும் கூட்டம் திரட்ட முடியும் என்பதற்கு இது தான் சாட்சி. சிம்பு படத்தில் மட்டும் தான் ஹீரோ என்று நினைக்க வேண்டாம். என் பின்னால் யாரும் வர வேண்டாம், நீங்கள் முன்னாடி போங்கள் நான் உங்கள் பின்னால் வருவேன். போகும் போது எதையும் எடுத்து கொண்டு போக முடியாது, கொடுத்துவிட்டு போகலாம். இந்தாண்டு ஜல்லிக்கட்டு நடந்தே தீரணும், கண்டிப்பாக நடக்கும், இது ஆரம்ப கட்டம் தான். எனக்கு இந்த மாதிரி ரசிகர்கள் கிடைத்தது மகிழ்ச்சி, தமிழனாக பிறந்தது மகிழ்ச்சி என்று கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (71)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nakkal Nadhamuni - Chennai,இந்தியா
13-ஜன-201717:44:36 IST Report Abuse
Nakkal Nadhamuni எங்கயாவது இந்த கரடி மாடு புடிக்கறேன்னு போய்ட போகுது. டண்டணக்கா, அ டனக்கு நக்கா ....
Rate this:
Share this comment
Cancel
Saravanan M - Tiruppur,இந்தியா
13-ஜன-201709:15:01 IST Report Abuse
Saravanan M மக்களக்காக போராட தமிழன் இருக்கான் . அனால் அரசாங்கம் என்ன பண்ணுது . காசு வாங்கிகிட்டு ஓட்டு போட்டது தான் நம்ம பண்ணிக்கிட்டு இருக்குற பெரிய தப்பு . இனி மேல் திருந்துங்க .
Rate this:
Share this comment
Cancel
Saravanan M - Tiruppur,இந்தியா
13-ஜன-201709:11:48 IST Report Abuse
Saravanan M arumai நண்பரே
Rate this:
Share this comment
Cancel
Ever Jeevan - edinbrough,யுனைடெட் கிங்டம்
13-ஜன-201706:08:31 IST Report Abuse
Ever Jeevan மகிழ்ச்சி மிக்க மகிழ்ச்சி =========== நம் தமிழர்களின் பாரம்பரிய பண்பாடாகிய ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என்று பலதரப்பினர் குரல் கொடுத்த நிலையில் இன்று நடிகர் சிம்பு அவர்கள் வித்தியாசமாக மாலை 5 மணி அளவில் அனைவரும் வீதியில் வந்து பத்து நிமிடம் நில்லுங்கள் என்று வேண்டுகோள் வைக்க பலர் அதை பின்பற்றி வந்து நின்றனர்... .அதை காணும் பொழுது மகிழ்ச்சிதான், அவர் சொன்னதாலும்... நாம் நின்றதாலும் ஜல்லிக்கட்டு நடக்க போகிறதா??? என்றால் .....நிச்சயம் இல்லை ஒரு நடிகரின் வார்த்தைக்கு இவ்வளவு மதிப்பு...சக்தி ....வாழ்த்துக்கள்.... இதை படிக்க நேரிடும் பல நடிகர்களுக்கு என் வேண்டுகோள் தமிழரின் பாரம்பரியத்துக்கும்....பண்பாட்டிற்க்கும் குரல் கொடுக்கும் நீங்கள் கொஞ்சம் தமிழன் வாழ்விற்கும் அவன் முன்னேற்றத்திற்கும் கூட குரல் கொடுங்கள் தயவு செய்து ..., 1 . நம்மில் யாரும் சாலை விதிகளை கடை பிடிப்பதில்லை ...இந்தியாவிலையே தமிழகத்தில்தான் சாலை விபத்தில் இறப்பவர்கள் எண்ணிக்கை அதிகம்.. இதனால் பல குடும்பம் நடுத்தெருவில் நிற்கிறது. நமது நாட்டில் போரில் இறப்பவனை விட ரோட்டில் இறப்பவன்தான் அதிகம் .. சாலை விதிகளை கடைபிடிக்க சொல்லி குரல் கொடுங்கள்..... 2 . நமது தமிழ்நாட்டில் தான் மதுவிற்கு அடிமையாகி பாழாப்போன தமிழ் குடும்பங்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது . நம் தமிழ் இனத்தை காக்க உங்கள் ரசிகர்களுக்கு மது அருந்தாதீர்கள் என்றும் மதுவிற்கு எதிராகவும் குரல் கொடுங்கள்.... 3 . நமது தமிழக்தில் தான் பணத்திற்கு ஓட்டை விற்கும் கேவலம் அரங்கேறுகிறது . நல்ல தலைவர்களை தேர்ந்து எடுக்க நேர்மையாக இருங்கள் என்று குரல் கொடுங்கள்.. 4 . ஒரு தமிழன் தமிழ் நாட்டை விட்டு வெளி மாநிலம் சென்றால் அவனுக்கு பெயர் மதராஸி ஒரு தமிழனின் உழைப்பு உறிஞ்ச படுகிறது.. ஆனால் பல இடங்களில் அவனுக்கு மனிதநேய அங்கீகாரம் கூட கிடைப்பது இல்லை ..அதற்கு எதிராக குரல் கொடுங்கள்.... 5 . மத்திய அரசை விடுங்கள், நம் மாநில அரசே நம் மக்களை புறக்கணிக்கும் நிலை பல பல உள்ளது ..தயவு செய்து அதற்க்கு எதிராக குரல் கொடுங்கள் ..... 6 உங்களுக்கு உள்ள ரசிகர்கள் பத்து பேர் சேர்ந்து ஒரு ஆதரவற்ற குடும்பத்தை தத்து எடுத்தாலே நமது தமிழ் இனம் காக்க படும் ....ஏழ்மை பாதி ஒழிக்கபடும் ..ஏழ்மை ஒழிக்க உங்கள் குரல் கொடுங்கள் 7 நமது ஊரில் தான் காணும் இடத்தில எல்லாம் சிறுநீர் கழிப்பதும்.... வயல் வெளியில் கூட மலம் கழிப்பதும் சர்வ சாதாரணமாக நடக்கிறது தமிழகத்தை தூய்மை மிக்க மாநிலமாக மாற்ற குரல் கொடுங்கள் .... 8 வருடத்தில் ஒரு நாள் நடக்கும் ஜல்லிக்கட்டுக்கு குரல் கொடுக்கும் நீங்கள்.... வருடம் ஒவ்வொரு நாளும் துன்புறும், போராடும் தமிழனுக்காகவும் கொஞ்சம் குரல் கொடுங்கள்.. 9 உங்கள் பேச்சை கேட்டு வெளிநாட்டில் வாழும் தமிழ் நண்பர்கள் கூட 5 மணிக்கு ரோட்டில் நின்றனர் . தயவு செய்து உங்கள் பேச்சுக்கு கூடும் நல்ல உள்ளங்களை நாட்டில் நடக்கும் லஞ்சத்துக்கு எதிராக ....ஊழலுக்கு எதிராக...மதுவிற்கு எதிராக ...ஏழ்மைக்கு எதிராக.. ஒன்று கூட்டுங்கள் உங்கள் குரல் கொடுத்து .... தமிழனும் ....தமிழ் இனமும் காக்க பட்டால்தான் தமிழரின் பாரம்பரியம் காக்க முடியும் . தமிழனை கொன்று விட்டு பாரம்பரியத்தை காப்பது ..வற்றிய குளத்தில் மீன் தேடுவது போல் . இன்று உங்கள் குரல் ஒலித்ததற்கு நன்றிகள் கோடி...நான் குறிப்பிட்ட ஒவ்வொரு விஷத்திற்கு உங்கள் குரல் கொடுத்தால் வெற்றி ....சந்தோசம்....நிம்மதி எல்லாம் வரும் நம்மை தேடி ....தமிழன் தலை நிமிர்ந்து நடப்பான் வருடங்கள் பல தாண்டி ...... (படித்தது பிடித்தால்..உண்மை என உள்ளம் உணர்ந்தால்...பகிருங்கள் தமிழனை காக்க .....)
Rate this:
Share this comment
kuppuswamykesavan - chennai,இந்தியா
13-ஜன-201710:42:47 IST Report Abuse
kuppuswamykesavanஜீவன்ஜீ உள்ளம் நல்ல உள்ளம். உங்களை இறைவன் ஆசிர்வதிக்கட்டும்....
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
13-ஜன-201704:38:31 IST Report Abuse
meenakshisundaram முதல்லே தமிழனை வேஷ்டி கட்டவும் தமிழச்சியை சேலை கட்டவும் சொல்லுவோம்.(செந்தமிழ் நட்டு தமிழச்சியே சேலை கட்ட மறந்திட்டையே -நன்றி வைரமுத்து).பாண்ட் ,ஜீன்ஸ் வேண்டாம்.என் இனிய தமிழ் மக்களே என்று கூவுபவர்கள் இன்று அணிவது ஜீன்ஸ்தான்.தமிழ் கலாச்சாரம் என்று இருந்தால் அதை முழுமையாக கடை பிடிக்க வேண்டாமா?ஏர் பிடித்தவன் இன்று டிராக்டர் ஓட்டுவது என்?
Rate this:
Share this comment
kuppuswamykesavan - chennai,இந்தியா
13-ஜன-201710:56:48 IST Report Abuse
kuppuswamykesavanமாற்றம் ஒன்றே மாறாதது, அதில் தாய் தந்தை உறவு விதி விலக்கு....
Rate this:
Share this comment
Cancel
POLLACHI JEAYASELVAN sanjose USA - SANJOSE,யூ.எஸ்.ஏ
13-ஜன-201704:19:55 IST Report Abuse
POLLACHI  JEAYASELVAN   sanjose USA ஆமாம் ,ஆமாம் சிம்புவை ஆதரித்துவிட்டுத்தான் வேறு வேலை பார்க்க வேண்டும் .போங்கப்பா போக்கத்த.......
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
13-ஜன-201703:18:36 IST Report Abuse
தமிழ்வேல் தானும் செய்யமாட்டார்கள், மற்றவர்களையும் செய்ய விட மாட்டார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
13-ஜன-201703:07:48 IST Report Abuse
Narayan When you people were watching cinema & boozing in Tasmac, Subramanian Swamy was arguing for free in support of Jallikattu & against those multi-million Dollar PeTA Lawyers. He's saying only to respect Court Verdict or wait for Govt Ordinance. Abusing him is un-called for
Rate this:
Share this comment
Cancel
kuppuswamykesavan - chennai,இந்தியா
13-ஜன-201701:44:42 IST Report Abuse
kuppuswamykesavan ஒரு விசயத்தில் , ஒருவர் அதை பாரம்பரியமாக கருதுகிறார், இந்நோருவர் அதை பிற்போக்கான பழமைவாதமாக கருதுகிறார் . ஒருவருக்கு வீரமாக தெரிவது , இந்நோருவருக்கு இம்சையாக தெரிகிறது. எந்த ஒரு செயலும் தனி மனிதர் மற்றும் தேச முன்னேற்றதிற்கு சகல விதமான வளர்ச்சியும் பாதுகாப்பும் தருவதாக இருப்பதுதான் எதிர் கால சந்ததிக்கு நல்ல வாழ்க்கையை அதன் பாதையை அமைத்துக் கொடுக்கும். மாயைக்கும் நிஜத்திற்க்கும் வித்தியாசம் காண்பவரே எதிர்காலத்தில் ஸர்வீவ் செய்ய முடியும்.
Rate this:
Share this comment
Cancel
Devanand Louis - Bangalore,இந்தியா
13-ஜன-201701:25:16 IST Report Abuse
Devanand Louis சிம்பு நடிக்காதே ,நீயோ பீப்பாடலின் பொறுக்கியென்பதை மக்கள் மறக்கவில்லை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை