டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் சொந்த கிராம கோவிலில் வழிபாடு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் சொந்த கிராம கோவிலில் வழிபாடு

Added : ஜன 16, 2017 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் சொந்த கிராம கோவிலில் வழிபாடு

நாமக்கல்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தன் சொந்த கிராமமான மோகனுாரில் உள்ள கோவிலில், டாடா சன்ஸ் குழுமத்தின் புதிய தலைவர் சந்திரசேகரன் சுவாமியை வழிபட்டார். டாடா சன்ஸ் குழும புதிய தலைவராக, நாமக்கல் மாவட்டம், மோகனுாரை சேர்ந்த சந்திரசேகரன், 54, நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த, 1963ல் பிறந்த அவர், பள்ளிப்படிப்பை மோகனுார், பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு, கோவை, திருச்சியிலும் முடித்தார். கடந்த, 1987ல், டி.சி.எஸ்.,சில், கம்ப்யூட்டர் பொறியாளராக பணியில் சேர்ந்தார்.
மும்பையில், டாடா கன்சல்டன்சி நிறுவனத்தில், தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றி வந்த அவர், தற்போது, டாடா சன்ஸ் குழுமத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தன் சொந்த ஊரான மோகனுாருக்கு நேற்று வந்தார். காவிரிக்கரையோரத்தில் அமைந்துள்ள மதுகரணவேணி சமேத அசலதீபேஸ்வரர் கோவிலில், சுவாமியை வழிபாடு செய்தார்.
தொடர்ந்து, கல்யாண பிரசன்ன வெங்கட் ரமண பெருமாள் கோவிலுக்கு சென்று சுவாமியை வழிபட்டார். அவருடன், அவரது பெற்றோர் நடராஜன் - மீனாட்சி அம்மாள், பெரியப்பா மகன் அஜிதன், பள்ளி ஆசிரியர், கே.எஸ்.நடராஜன், பள்ளி தோழர், டாக்டர் சந்திரமோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். எளிமையாக காணப்பட்ட சந்திரசேகரன், புகைப்படம் எடுக்கவோ, பேட்டி அளிக்கவோ மறுத்து விட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
adalarasan - chennai,இந்தியா
16-ஜன-201723:02:18 IST Report Abuse
adalarasan தமிழர்களுக்கு பெருமை தேடித்தந்தமைக்கு மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
16-ஜன-201717:56:26 IST Report Abuse
Rangiem N Annamalai எளிமை அருமை .தொடரட்டும் .போட்டோ எடுத்து இருந்தால் அது தலைப்பு செய்தி .அனுமதி கொடுக்காததால் எடுக்க வில்லை ."வெள்ளத்தனைய மலர் நீட்டம் "
Rate this:
Share this comment
Cancel
ganapathy - khartoum,சூடான்
16-ஜன-201714:28:01 IST Report Abuse
ganapathy அப்துல் கலாமும் அப்படியே தன்னுடைய ராமேஸ்வரத்தில் உள்ள வீட்டுக்கு சென்று திண்ணையில் அமர்ந்தது அன்னனனுடன் பேசி கொண்டு இருப்பார். அவர்களின் இளமை நாட்களை திரும்ப பெறவேய அவர்கள் தங்கள் சொந்த கிராமத்துக்கு ஊருக்கு வருகின்றனர்...அங்கு அவர்களை உயர் பதவியில் உள்ளவர்களாய் கருதி தொல்லை செய்ய வேண்டாம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X