புத்தக திருவிழாவில் நல்லகண்ணு...| Dinamalar

புத்தக திருவிழாவில் நல்லகண்ணு...

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisementபுத்தக திருவிழாவில் நல்லகண்ணு...

சென்னை புத்தக திருவிழா அமைப்பாளர்கள் முகத்தில் கடந்த இரண்டு நாட்களாகத்தான் புன்னகை தெரிகிறது.

ஆரம்பத்தில் இருந்து பொங்கல் வரை புத்தக திருவிழாவிற்கு வந்தவர்களும், புத்தகம் வாங்கியவர்களும் குறைவே

மக்கள் மத்தியில் பணம் இல்லை என்று அவர்களாகவே காரணத்தையும் தேடிக்கொண்டார்கள்.

புத்தகம் வாங்குவது என்பது செலவு அல்ல புத்திசாலித்தனத்திற்கான முதலீடே என்ற எண்ணத்தோடு மிச்சமிருக்கும் நாட்களிலும் மக்கள் வரவேண்டும்,புத்தகங்கள் வாங்கவேண்டும்.

நான் போயிருந்த போது தொன்னுாற்று இரண்டு வயதான கம்யூ.கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு ஓரு புத்தகஅரங்கில் சாதாரண குடிமகனாக இருந்து புத்தகத்தை தேர்வு செய்து வாங்கிக்கொண்டு இருந்தார்.

அன்றைய தினம் 94 வயதான கி.ராஜநாராயணன் எழுதிய ஐந்து புத்தகங்களை வெளியிட்டு அவர் பேசிய பேச்சும் ரொம்ப உருக்கமாக இருந்தது.

பொங்கல் பண்டிகையானது உழவனுக்கானது ஆனால் நாட்டில் எந்த உழவனும் மகிழ்ச்சியாக இல்லை.முன்பெல்லாம் ராமநாதபுரம் மாவட்டம் வறண்டு போனால் தஞ்சாவூர் மாவட்டம் சென்று பிழைத்துக்கொள்வர், இப்போது தஞ்சாவூர் மாவட்டமே ராமநாதபுரம் மாவட்டம் போல வறண்டு காணப்படுகிறது.விவசாயி எங்கேதான் போவான்.

ஒவ்வொரு நாளும் விவசாயி தற்கொலை செய்து கொள்வதாக வரும் செய்தி கேட்கும் போதெல்லாம் மனம் சொல்லமுடியாத ரணத்திற்கு ஆளாகிறது.

எங்கே விவசாயி சந்தோஷமாக இருக்கிறானோ அங்கேதான் வளம் இருப்பதாக அர்த்தம் அவர்கள் மீது போதுமான அக்கறை செலுத்த மறுப்பதன் காரணமும் விளங்கவில்லை.

பொதுவாக பொங்கல் வாழ்த்து சொல்லவேண்டும் ஆனால் என்னால் பொய்யாக வாழ்த்த முடியவில்லை என்று உருக்கமாக பேசினார்.

இவரது பேச்சில் இருந்த உண்மையும் உருக்கமும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு சென்றடையவேண்டும் என்று சொல்வதைத் தவிர வேறு என்ன சொல்வது.
எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெயந்தன் - Chennai,இந்தியா
15-மார்-201715:39:19 IST Report Abuse
ஜெயந்தன் இன்றைய அரசியல் வானில் ஒரு துருவ நட்சத்திரம்...மற்றவர்கள் எல்லாம் இவர் கால் தூசுக்கு கூட இல்லை அவர் சட்டையில் இருக்கும் தூசுக்கு கூட சமம் இல்லை....
Rate this:
Share this comment
Cancel
SSTHUGLAK - DELTA,இந்தியா
18-ஜன-201711:46:17 IST Report Abuse
SSTHUGLAK நல்லக்கண்ணு ஒரு வாழும் காமராஜர் அவரது பண்பை போற்றுவோம் பாராட்டுவோம்
Rate this:
Share this comment
Cancel
Gopalvenkatesh Sai - Chennai,இந்தியா
17-ஜன-201716:16:59 IST Report Abuse
Gopalvenkatesh Sai great and simple person . country need only like him ofcourse OPS wii fulfil that
Rate this:
Share this comment
Cancel
balakrishnan - coimbatore,இந்தியா
17-ஜன-201709:15:49 IST Report Abuse
balakrishnan இந்த வயதில் அவர் படிப்பில் காட்டும் ஆர்வம் அதிசயமாக இருக்கிறது, மிகவும் எளிமையின் சிகரமாக, இன்றைய இளைஞர்களின் ஒரு எடுத்துக்காட்டாக இருக்கிறார், சந்தோசப்படுவோம்
Rate this:
Share this comment
Cancel
மனிதன் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஜன-201708:55:46 IST Report Abuse
மனிதன் சரியாக சொன்னீர்கள் ஐயா செய்யவேண்டும் என்று நினைப்பவர்களை ஆட்சியில் அமரவைப்பது இல்லை அமருபவர்கள் அதை பற்றி சிந்திப்பது இல்லை அப்படியே சிந்தித்து செயல்பட போனால் அவர்களுக்குள்ளே அதை முடக்கி பணம் மட்டுமே சம்பாரிக்க துடிக்கும் கயவர்களால் அது விவசாயியை போய் சேருவது இல்லை இதுபோலத்தான் விவசாயியின் அவலநிலை தொடர்கிறது என்று விடியுமோ ஏழை விவாசியிகளின் தவிப்பு .....................
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்