சோர்ந்து போகாத எறும்புகளாவோம்!| Dinamalar

சோர்ந்து போகாத எறும்புகளாவோம்!

Added : ஜன 20, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
சோர்ந்து போகாத எறும்புகளாவோம்!

ஒரு எறும்பு தன் உடலின் எடையைப் போல், 50 மடங்கு எடையைத்தூக்கி நடந்து செல்லும் திறன்வாய்ந்தது. ஒருகிலோ தேனை சேகரிக்க தேனீயானது, நம் பூமிப் பந்தினை மூன்று முறைசுற்றி வருவதற்கான தூரமாக 90ஆயிரம் மைல்கள் பயணப் படுகின்றன. அதற்காகஅவை 40 லட்சம் பூக்களை தேடிச்சென்று தேனெடுக்க வேண்டும். உடல்களைத்துப்போன தேனீக்களோ, மனம்சோர்ந்து போன எறும்புகளோ, வேதனையில் விரக்தி கொண்ட மீன்களோ,வாழ்க்கையில் வெறுப்படைந்தமான்களோ… நாம் பார்த்ததுண்டோ?
அறிவியல் உண்மை
இதைத்தானே 'கடல் தாண்டும் பறவைக்கெல்லாம் இடையில் இளைப்பாற மரங்கள் இல்லை. ஆனாலும் அவை கலங்காமலே கண்டம் தாண்டுதே' என்கின்ற பாடல் வரிகள் நமக்குஉணர்த்துகின்றன. ஒட்டகச்சிவிங்கிகள் உயரமான மரங்களில் உள்ள இலைகளைச் சாப்பிடமுயற்சித்துக் கொண்டே இருந்ததால் தான்,கால ஓட்டத்தில் பரிணாம வளர்ச்சியாய், அவற்றின் கழுத்து நீண்டு நிலைத்திருக்கச் செய்தது. தொடர் உழைப்பும் முயற்சியும் நமக்கு உணர்த்தும் அறிவியல்உண்மை இது.
எது தான் தேவை
உணவே மருந்து என்பது மட்டுமல்ல; உழைப்பே மருந்து என்பதுவும் நம்முன்னோர்கள் நமக்கு வழங்கிச் சென்றுள்ள வாழ்வியலுக்கான சூத்திரம். காடுகளிலும் மேடுகளிலும் உணவிற்காகவும் தன்னை காத்துக் கொள்ளவும் தேடலும் ஓடலுமாக இருந்த ஆதிமனிதனுக்கு, உழைப்பு என்பது அன்றாட வாழ்வியலுக்கு அத்தியாவசியமாய் இருந்தது. அதற்கு அடுத்த காலகட்டத்தில் ஆள்வதற்கும் ஓரிடத்தில் நிலையாய் வாழ்வதற்கும், போர்களே வாழ்வின் பெரும்பகுதியை ஆக்கிரமித்து இருந்த போது உடல்வலிமை என்கின்ற தேவை அடிப்படையில் உழைப்பு கிடைத்து வந்தது. அப்போதெல்லாம்ஆரோக்கிய தேகம் என்பது தனித்தேடலாய் இல்லாமல் உடலோடு இயல்பாய் அமைந்து போனது. இப்படி வேட்டை காலம்,வேளாண் காலம், வேந்தர் காலம்,விஞ்ஞான காலம் என காலங்கள்ஓட ஓட உடல் உழைப்புஎன்பது கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. சக்கரங்களின் கண்டுபிடிப்பே மனிதன் அறிவியலை நோக்கிவைத்த முதல் அடி. காலச்சக்கரம் சுழன்றபோது கண்டுபிடிப்புகளின் வளர்ச்சி மூளை உழைப்பை பெருகச்செய்து உடல் உழைப்பை அருகச்செய்து விட்டது.
இயந்திரங்களின் ஆக்கிரமிப்பு
பக்கத்து தெருவிற்கு செல்லக்கூட வாகனங்களை நாடுவதும், சிறிய படிக்கட்டுகளில் ஏறக்கூட லிப்ட்களை தேடுவதுமாக வாழ்வின் பெரும் பகுதியை இயந்திரங்கள்ஆக்கிரமித்து விட்டது. இன்றும் உழைப்பு உருக்குலையாமல்அப்படியே ஒட்டி இருப்பது, அற்ப உயிர்களாய் நாம் நினைக்கும் அற்புத உயிர்களிடம் தான். புதைக்கின்ற விதையும் முயற்சி கொண்டால் தான் பூமியும், தாழ்திறக்கும் என்கின்ற வைர வரிகள் இதைத்தானே சொல்கின்றன.'கடமையைச்செய்; பலனை எதிர்பார்க்காதே' என இரண்டே வரிகளில் வாழ்வியலுக்கான அற்புதத்தை சொல்லி முடித்துள்ளது பகவத் கீதை. வான்புகழ் வள்ளுவரும் இதை தான் 'ஊழையும்உப்பக்கம் காண்பர்' என… மனம் தளராது உழைப்பவர்கள்விதியையும் மாற்றும் வல்லமை பெற்றவர்கள்என கூறுகிறார்.
'காரணங்கள் சொல்பவர்கள் காரியங்கள் செய்வதில்லை.காரியங்கள் செய்பவர்கள் காரணங்கள் சொல்வதில்லை.
முட்டையை உடைத்து வெளிவரும் கோழிக்குஞ்சு படர கொம்பு தேடி போராடும் கொடிகல்லறையை கர்ப்பப்பையாக்கி புதைத்த பின்னும் வெளிவரும் விதைகள்…' இவையெல்லாம் வெற்றிக்கான முகவரி உழைப்பு என்கிறநம்பிக்கைகளை நமக்குள் நடவு செய்யத்தானே செய்கின்றன.
அற்ப உயிர்களின் அரிய பாடம்
இந்த அவசரயுகத்தில் அசுர வேகத்தில் பயணப்படும்நாம் சிறிய உயிர்களிடம் உள்ள இந்த அரிய பண்புகளைக்கூட அறியவோ,புரியவோ நேரமில்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றோம். உலகச்சாதனை புரிந்த யாரும் ஒரேநாளில் அத்தனை உயரத்தை தாண்டியோ,அத்தனை பளுவினைத் தூக்கியோ அந்த வெற்றியை அடைந்ததில்லை. சிறுபுள்ளியில் தொடங்கிய பயிற்சியும் தொடர் முயற்சியுமே அவரை உயர்த்தி இருக்கும். இயற்கையோடு இயைந்து இருந்த மனிதன் இயந்திரங்களோடு இணைந்து விட்டான். அதோடு தன்னால் முடியும் என்கின்ற நம்பிக்கைகளையும் தொலைத்து விட்டான். இன்றைய இயந்திரமயமாதல், கணினிமயமாதல் போன்றவை தூரத்தை குறைத்து நம் நேரத்தை சேமித்துக் கொடுத்ததோடுஆரோக்கியத்தை சிதைத்து நம் ஆயுளையும் குறைத்துவிட்டது. அன்றுஉழைப்பால் தேகம் மெருகேறியிருந்தது. இன்று இயங்குவதற்கே தயங்கும் மனநிலை ஏற்பட்ட பின்தேகம் துரு ஏறிப் போய்விட்டது.
உடலை உன்னதமாக்குவோம்
ஓடிக் கொண்டிருந்தால் தான் அது நதிதேங்கிக்கிடந்தால் சகதிதானே!உடற்பருமன், சர்க்கரை நோய், மாரடைப்பு என நம் ஆற்றல் மிகுந்த தேகத்தை நோய்களின் கூடாரமாக்கி விட்டோம். கடினஉழைப்பு ஆக்கிரமித்து இருந்த நம் வாழ்வின் பெரும்பகுதியை இன்று மூளைக்கான வேலை ஆக்கிரமித்து உடல் உழைப்பு சிறுபகுதியாய் எஞ்சி நிற்கிறது. உடல்ஆரோக்கியத்தோடு இருந்தால் தான் மூளையின் செயல்பாடுகள் முடுக்கி விடப்படும். இல்லையேல் அறிவின் வளர்ச்சி முடங்கி போய் விடும். உடல்உழைப்பினை ஒதுக்கிவிட்டு அறிவின் வளர்ச்சி என்பது கண்ணிரண்டை விற்று சித்திரம் வாங்கியதுபோலத்தான். அதைத்தான் புத்தரும் நம் உடலை ஆரோக்கியத்தோடு வைத்திருப்பது நம் பணி; அது இல்லையேல் நம்உள்ளத்தை உறுதியாகவும் தூய்மையாகவும் வைத்திருக்க முடியாது என கூறியுள்ளார். இன்றைய துய்ப்புக் கலாசாரத்தில் உழைப்பினை தொலைத்து விடாமல் விழித்துக்கொள்வோம். வெற்றிகள் உழைப்பிலிருந்தே உருவெடுக்கும் என்பதை உணர வேண்டும். துரித உணவுகளைத் தவிர்த்து இயற்கை உணவுகளோடு நமக்கான சின்னச் சின்ன பணிகளை மனநிறைவோடு நாமே செய்யவும் முடிந்த வரை நடைபயிற்சியினை மேற்கொள்ளவும் வேண்டும். உடற்பயிற்சி, தியானம் போன்றவற்றில் ஈடுபடவேண்டும். உடலிலிருந்து உழைப்பினால் வெளியேறும் வியர்வையில் நோய்களும் வெளியேறிப் போகும். வயிற்றுப் பசிக்கான தேடலாக இருந்தாலும் உழைப்பினைவெறும் பிழைப்பிற்காக சலிப்போடு செய்தால் களைப்பு தான் மிஞ்சும். உழைப்புஎதுவாயிருப்பினும் அதை களிப்போடும் சிலிர்ப்போடும்செய்து பார்த்தால் உழைப்பின் உன்னதத்தை உணரமுடியும்.
- எஸ்.மனோரஞ்சிதம்விவசாய அலுவலர்மதுரை, 98427 92877.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
20-ஜன-201713:56:43 IST Report Abuse
A.George Alphonse Work is worship if every one follow this sincerely we all surely and happily lead a healthy and wealthy life forever.Very nice and useful article for this young generation.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X