துடிக்குது புஜம்,ஜெயிப்பது நிஜம்| Dinamalar

துடிக்குது புஜம்,ஜெயிப்பது நிஜம்

Updated : ஜன 20, 2017 | Added : ஜன 20, 2017 | கருத்துகள் (55)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

துடிக்குது புஜம்,ஜெயிப்பது நிஜம்

ஒட்டுமொத்த பார்வையையும் இன்றைக்கு தமிழக இளைஞர்கள் மீதுதான்.எழுந்தது பார் யுகப்புரட்சி என்று மீசைக்கவிஞன் பாரதி பாடியது போல ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக ஒரே குரலில் ஒட்டு மொத்த தமிழக இளைஞர்களும் எழுச்சி கொண்டு நிற்பதை பார்த்து மிரண்டு போயிருக்கிறது அதிகாரவட்டம்.

சென்னை கடற்கரை இரண்டாவது முறையாக சுனாமி எனும் பேரலையை சந்தித்தது, இந்த சுனாமிக்கு காரணம் மாணவர்கள்தான்.ஒரே ஒரு விஷயம் இந்த சுனாமி அழிக்க வரவில்லை அழிவின் விளிம்பில் இருக்கும் ஜல்லிக்கட்டை மீட்க வந்ததாகும்.

போலீசாரை வேடிக்கை பார்க்கவைத்துவிட்டு மாணவர்களே போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் பார்த்துக்கொண்டனர்,போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கு குடிதண்ணீர்,உணவு போன்றவைகளை வாங்கிவந்து கொடுத்தனர்.விடிய விடிய குளிரில் வாடியபடி போராடிய இளைஞர்களுக்கு புத்தம் புது போர்வைகளை கொண்டுவந்து கொடுத்தனர்.எவ்வளவு உணவு வேண்டும் எங்கு கொண்டுவந்து கொடுக்கவேண்டும் சொல்லுங்கள் காத்திருக்கிறோம் என சமூக வலைதளங்களில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் தகவல் கொடுத்தவண்ணம் இருந்தனர்.

பத்து இளைஞர்கள் கூடினாலே அடுத்து என்ன நடக்குமோ என பதறிப்போகும் இன்றைய சூழ்நிலையில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் கூடிய போதும் ஒரு பிரச்னை இல்லை.ஒரு வம்பு தும்பு இல்லை.மாணவர்களுக்கு இணையாக பல ஆயிரக்கணக்கான மாணவியரும் கூடினர்.இரவாகிவிட்டது பாதுகாப்பு தேவை நீங்கள் வீட்டிற்கு செல்லுங்கள் என்று சொன்னபோதும் வீட்டைவிட நீங்கள்தரும் பாதுகாப்பு மேலானது என்று சொல்லி இருந்த இடத்தைவிட்டு உணவிற்கும் தண்ணீருக்கும் கூட அசையாமல் இருந்த மாணவியர்கள் பங்கு ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு மிக பலமானது.

எங்களுக்கு யாருடைய தலைமையும் வேண்டியது இல்லை எங்களை யாரும் வழிநடத்தவும் வேண்டியது இல்லை உங்களை நம்பி வீணானது போதும் இனி எங்கள் வழியை நாங்களே பார்த்துக் கொள்வோம் எங்கள் ஜல்லிக்கட்டை நாங்கள் மீட்டு எடுப்போம் எங்கள் கலாச்சாரத்தை விட்டுத்தர மாட்டோம் எங்கள் பண்பாட்டை கூறுபோட அனுமதிக்கமாட்டோம் எங்கள் குரலும் ஒன்றுதான் எங்கள் குமுறுலும் ஓன்றுதான்,என்று சொன்னது மட்டுமில்லை பெரிய பெரிய அரசியல்கட்சி தலைவர்கள் வந்தபோதும் அப்படியே போய்விடுங்கள் உங்கள் சாயத்தை பூசி எங்களை கரியாக்கிவிடாதீர்கள் என்று கும்பிடுபோட்டு அனுப்பிவைத்தார்கள்.

இன்னோரு மாணவர் பேசும் போது எங்களுக்கு தலைவர் இல்லை என்று நினைக்காதீர்கள் இதோ எங்கள் எதிரே உள்ள விவேகானந்தர் இல்லத்தில் முண்டாசு தலையுடன் கைகட்டி நிற்கிறாரே வீரத்துறவி அவரே எங்கள் தலைவர் அவர் எங்களுக்கு வேண்டிய அளவு தைரியத்தை தன்னம்பிக்கையை தந்துள்ளார் அந்த தன்னம்பிக்கையோடு எங்கள் போராட்டத்தில் வெல்வோம் ஜல்லிக்கட்டை மீட்டெடுப்போம் என்றார்.

எந்த ஒரு போராட்டமும் நேரம் ஆக ஆக நசிந்துபோகும் நலிந்துபோகும் நமுத்துப்போகும் ஆனால் இளைஞர்களின் இந்த போராட்டம் நாளுக்கு நாள் மணிக்கு மணி வலுத்துக்கொண்டே போகிறது என்றால் காரணம் ஒன்றே ஒன்றுதான் அது கொண்ட கொள்கையில் லட்சியத்தில் வைத்துள்ள உறுதிதான்.

சென்னை முதல் கன்னியாகுமரிவரை சொல்லிவைத்தது போல மக்கள் வியக்குமளவிற்கும் அரசியல்வாதிகள் மிரளவைக்கும் அளவிற்கும் கிளர்ந்து எழுந்த இந்த இளைஞர் கூட்டம் ஊழலுக்கும்,லஞ்சத்திற்கும் எதிராக., விவசாயத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தால் நாட்டில் இன்றும் என்றும் சுபிட்சமே.

-எ்ல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in




Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J-Gun - chennai,இந்தியா
01-பிப்-201720:47:22 IST Report Abuse
J-Gun இந்த போராட்டத்துல பேசின RJ BALAJI சொன்னாரு பாருங்க . பொண்ணுங்க வந்து இந்த போராட்டத்துல பையன்க மடியில உக்கார்ந்தாங்களாம் . அது தப்பே இல்லையாம் . ஏன்னா தங்கச்சியாம். அவரு மட்டிலயும் வந்து உக்காந்தங்களாம். அதுவும் தப்பே இல்லையாம். ஏன்னா தங்கச்சியாம். இன்னமே பீச்சுக்கு போனா யாராவது பொண்ணு பையன் மடியில உட்கார்ந்திருந்த அவங்க இரண்டு பெரும் அண்ணா தங்கை. தெரிஞ்சிக்கோங்க.
Rate this:
Share this comment
Cancel
Sambasivam Chinnakkannu - paris,பிரான்ஸ்
01-பிப்-201718:59:18 IST Report Abuse
Sambasivam Chinnakkannu போதும் மீடியாக்களே,,,,,,,,,,,,,,,,,,,,, அதிகமாக புகழ்ந்து ,தூக்கி தலையில் வைத்து கொண்டு ஆடியது போதும் ,,அடுத்த வேலையை பாருங்கள் ,,,
Rate this:
Share this comment
Cancel
R.Srinivasan - chennai,இந்தியா
01-பிப்-201714:41:15 IST Report Abuse
R.Srinivasan இந்த பெண் போராடியது சரி ஆனால் அவர் உபயோகித்த வார்த்தைகள் தவறானது ... ஒரு முதல்வரை தர குறைவாக பேசியதும் இல்லாமல் அதற்கு விளக்கம் கூறும் போது "யார் மனதையும் புண் படுத்த நான் அப்படி பேசவில்லை" என்று கூறுகிறார் . அதே கூட்டத்தில் வேறு யாராவது அந்த பெண்ணை இழிவு படுத்தும் படி கூச்சல் போட்டு விட்டு கடைசியில் யார் மனதையும் புண் படுத்த நான் பேசவில்லை என்று கூறி இருந்தால் அப்போது தெரிந்து இருக்கும் நாவடக்கம் வேண்டும் என்றுஅந்த பெண் கோஷமிட்டது மாண்புமிகு முதல்வரை பற்றி தரக்குறைவாக இருந்ததும்..மாண்புமிகு பிரதமர் அவர்களை கேவலமாக கோஷமிட்டதும்தான்
Rate this:
Share this comment
Cancel
Thulasi Vice-chairman - sholinghur,இந்தியா
31-ஜன-201713:54:38 IST Report Abuse
Thulasi Vice-chairman நோ
Rate this:
Share this comment
Cancel
Ravichandran Narayanaswamy - chennai,இந்தியா
31-ஜன-201713:32:13 IST Report Abuse
Ravichandran Narayanaswamy முடிந்தால் இளைஞர்களை ஊழல் லஞ்சம் காவேரி பிரச்சனை பெண்களுக்கு வயதானவர்களுக்கு பாதுகாப்பின்மை - போன்றவற்றிற்க்கு போராட்டம் நடத்துங்கள் - ஹிந்துக்கள் மற்ற மதத்தினர் திருமணம் செய்தால் ஹிந்துக்கள் தான் மதம் மாறவேண்டும் என்ற எழுதப்படாத சட்டம் இருக்கிறதே - இதை எதிர்த்து போராடுவார்களா - நண்பர் என்று சொல்லிக்கொண்டு அல்லி தர்பார் செய்கிறாரே ஒருத்தர் அவரை எதிர்த்து போராட்டம் செய்வார்களா - மக்கள் பணத்தை தங்களுக்கு வேண்டியவர்களுக்கு ATM பணத்தை திருப்பிவிட்டார்கள் வங்கி துரோகிகள் - அவர்களுக்கு எதிராக போராட்டம் செய்வார்களா - இனி அரசாங்கம் எல்லாவற்றுக்கு ஒரு செக் வைக்கும் - அந்த போராட்டம் வன்முறையில் முடிந்ததாக அரசாங்கமே தீர்ப்பை மாற்றி எழுதிவிட்டது - ஜெய் ஹிந்த்
Rate this:
Share this comment
Cancel
HARI - Chennai,இந்தியா
31-ஜன-201707:48:05 IST Report Abuse
HARI டாஸ்மாக்கை எதிர்த்து போராடுங்க பார்ப்போம் / அதுக்கெல்லாம் வர மாட்டானுங்க
Rate this:
Share this comment
Cancel
Arumugam - Paris,பிரான்ஸ்
31-ஜன-201702:54:44 IST Report Abuse
Arumugam இந்த பெண்ணின் எதிர்காலம் ஒரு கேள்விக்குறிதான். பல பிரச்சனைகள் உருவாகலாம். மீண்டும் யாரும் உசுப்பு ஏத்தாமல் இருந்தால் நல்லது.
Rate this:
Share this comment
Cancel
Karthi - chennai,இந்தியா
30-ஜன-201714:17:54 IST Report Abuse
Karthi இந்த பெண் போராடியது சரி ஆனால் அவர் உபயோகித்த வார்த்தைகள் தவறானது ... ஒரு முதல்வரை தர குறைவாக பேசியதும் இல்லாமல் அதற்கு விளக்கம் கூறும் போது "யார் மனதையும் புண் படுத்த நான் அப்படி பேசவில்லை" என்று கூறுகிறார் . அதே கூட்டத்தில் வேறு யாராவது அந்த பெண்ணை இழிவு படுத்தும் படி கூச்சல் போட்டு விட்டு கடைசியில் யார் மனதையும் புண் படுத்த நான் பேசவில்லை என்று கூறி இருந்தால் அப்போது தெரிந்து இருக்கும் நாவடக்கம் வேண்டும் என்று ...
Rate this:
Share this comment
Cancel
vetrivel palaniappan - Atlanta,யூ.எஸ்.ஏ
30-ஜன-201707:54:55 IST Report Abuse
vetrivel palaniappan இந்த ஜல்லிக்கட்டு போராட்டம் இளைஞ்சர்களுக்கு மட்டுமில்லை, அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும், ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்குமே. இதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டும். நாட்டு மாடினங்கள் அழிவதால் என்ன ஆபத்து, மிருக வதை என்ற பெயரால் வெளி நாட்டு நிறுவனங்கள் எப்படி நம் கலாச்சாரத்தையும், அடையாளத்தையும் அழிப்பதை உணர்ந்து கொள்ள இந்த போராட்டம் மிகவும் உதவி செய்தது. சிந்தித்து பாருங்கள்.
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
30-ஜன-201710:04:54 IST Report Abuse
Pannadai Pandianஜல்லிக்கட்டு தடைப்பட்டிருந்த காலத்தில் நம்பிக்கை இழந்து பல விவசாயிகள் தங்களின் ஜல்லி கட்டு காளைகளை கேரளத்துக்கு அனுப்பி வைத்தனர் என்பது உண்மை. மாடுகளை உழவுக்கும் பாலுக்கும் பயன் படுத்தினால் அழிவில் இருந்து காப்பாற்றலாம்....
Rate this:
Share this comment
Cancel
Sekar Sekaran - Jurong-West,சிங்கப்பூர்
30-ஜன-201706:11:20 IST Report Abuse
Sekar Sekaran பொதுவாகவே கூட்டத்தோடு இருக்கும்போது ஒவ்வோர் தனிமனிதனின் தைரியம் அளவுக்கடந்துதான் இருக்கும். அப்படிதான் இந்த பெண்ணும் கோஷம் போடும்போது கூடவே இருந்த கூட்டமும் கோஷமிட்டதால் இந்த பெண்ணுக்கு தான் ஒரு வீர மங்கை என்று நினைக்க வைத்தது. அதன் பின்னர் கேட்டுப்பாருங்கள்..அய்யய்யயோ..நான் அப்படிப்பட்ட பெண்ணல்ல..அங்கிருந்தவர்கள் என்னை கோஷம் போட சொன்னார்கள் அதனாலேயே போட்டேன் தவிர எவரையும் அவமதிக்கும் எண்ணமில்லை என்பார். நிச்சயம் அவரது வீட்டில் அந்த பெண்ணுக்கு நல்ல திட்டுகள் கிடைத்திருக்கும். அதனை விட நாளை இந்த பெண்ணை மணக்க எவரும் துணிய மாட்டார்கள். இந்த இடத்தில இதோ நானிருக்கின்றேன் என்று பலரும் ஓடோடி வருவார்கள். நிஜத்தை சிந்தியுங்கள்..சும்மா அந்த பெண்ணை உசுப்பேத்தி அவரது வாழ்க்கையில் விளையாடாதீர்கள். இன்னமும் அப்படிப்பட்ட சமூக அமைப்பு நம்மிடையே உருவாகவில்லை. அவரது கோஷம் தான் இந்த போராட்டம் திசை மாறிப்போக காரணமாயிற்று..ஏன்? எதிர்க்கட்சியின் ஊடகங்கள் விடாமல் இதே பெண்ணை முன்னிறுத்தி விளம்பரம் செய்தன..அதாவது தங்களது பதவி அரிப்புக்கு இவரை காட்டி சொரிந்து சுகம் கண்டன. இதே பெண் நல்லபடியாக மாணவி என்கிற நிலையில் இப்படி ஜல்லிக்கட்டுக்கு கோஷம் போட்டிருந்தால் இங்கே ஆஹா ஓஹோஹோ என்று புகழ்வோரில் ஒருவரை கூட காணமுடியாது. அந்த பெண் கோஷமிட்டது மாண்புமிகு முதல்வரை பற்றி தரக்குறைவாக இருந்ததும்..மாண்புமிகு பிரதமர் அவர்களை கேவலமாக கோஷமிட்டதும்தான் இந்த ஊடகங்களுக்கும் இப்போது அவரை புகழ்வோருக்கும் சாதகமாயிற்று. கம்யூனிஸ்ட்கள்..தீவிரவாத கோஷ்டிகள்..மோடி எதிர்ப்பாளர்கள்..திமுக ஆதரவு பேர்வழிகள் என்றுதான் இந்த பெண்ணை உசுப்பேத்தி விடுகின்றார்கள். விடுங்கள் அந்த பெண்ணின் செயல்பாடுகள் எப்படியோ ஒரு அருமையான மாணவர் போராட்டத்தை தவிடுபொடியாக்கி வன்முறைக்கு வித்திட வைத்துவிட்டது..விடாது துரத்தும் கருப்பு போல அந்த பெண்ணை இனியாவது விடுங்கள்..நாளை மனம் திருந்தி நல்ல ஒழுக்கத்தோடு கண்ணியதோடு அரசியலில் நுழைய சந்தர்ப்பத்தை உருவாக்கி கொடுப்போம்..மற்றபடி இந்த மாணவர் அமைப்பை வைத்து கேரளாவிலிருந்து சில தீவிரவாத அமைப்புகளை இங்கே அடையாளம் காணவைத்தது நல்ல சமயமாக அமைந்தது. நல்லதில் சில கெடுதல்கள் இருந்தாலும் சில நண்மைகளும் நடந்தேறிவிட்டது..இனி இப்படி ஒரு கூட்டம் கூட அரசியல் அமைப்புகள் விடுமா என்பதுதான் கேள்விக்குறியே..
Rate this:
Share this comment
Dhanasekaran - kuwait,குவைத்
30-ஜன-201714:06:31 IST Report Abuse
Dhanasekaranசொம்பு சேகர், உங்களுடைய நீண்ட கட்டுரை (கட்டுக்கதை) பார்க்கும்போதே தெரியுது உங்கள் கூட்டம் எவ்வளவு ஆடி போய் உள்ளது என்று......
Rate this:
Share this comment
SPB - Chennai,இந்தியா
31-ஜன-201714:58:26 IST Report Abuse
SPBஅந்த பயம் இருக்கட்டும் சேகர்..... இது ஒவ்வொரு மனிதனுக்குள் இருக்கும் ஆதங்கம்.... விடாது கருப்பு........
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை