சபாஷ் இளைஞர்களே; பொது மக்கள் பாராட்டு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சபாஷ் இளைஞர்களே; பொது மக்கள் பாராட்டு

Added : ஜன 20, 2017 | கருத்துகள் (45)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement

சென்னை: ஜல்லிக்கட்டிற்காக அமைதியாக போராட்டம் நடத்தும் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் பொது மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ஜல்லிக்கட்டை வலியுறுத்தியும், பீட்டாவை தடை செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இதில் ஏராளமான இளைஞர்கள் அமைதியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை மெரினா கடற்கரை, மதுரையில் அலங்காநல்லூர் தமுக்கம் மைதானம், திருச்சி, தேனி என அனைத்து மாவட்டங்களிலும் போராட்டம் நடந்து வருகிறது. மெரினா கடற்கரையில் 5வது நாளாக இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரையிலும் கடந்த ஒரு வாரமாக போராட்டம் நடந்து வருகிறது. இந்த போராட்டத்தில் எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை.
மாணவர்கள் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் அமைதியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போக்குவரத்தை சரிசெய்யும் பணியிலும் மாணவர்கள் உதவி வருகின்றனர். போராட்டகளத்தில் குவியும் குப்பைகளையும் மாணவர்களே அப்புறப்படுத்தி வருகின்றனர். அரசியல் கட்சிகளின் போராட்டம் போல் அல்லாமல், மாணவர்களின் போராட்டம் அமைதியாக நடப்பதற்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தால், நாடு முழுவதையும் தமிழகம் நோக்கி பார்க்க வைத்துள்ளனர்.


தொடரும் ஆதரவு:

மெரினா கடற்கரையில் போராட்டம் நடக்கும் இடத்திற்கு ஏராளமானோர் வந்த வண்ணம் உள்ளனர். பேரணியாக, இரு சக்கர வாகனங்களிலும், இளைஞர்கள் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் வந்த வண்ணம் உள்ளனர். மாணவிகளும் மெரினா கடற்கரை நோக்கி வரத்துவங்கியுள்ளனர். இரவு பகலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு அதிகமான மக்கள் கூட்டம் உள்ளது. கடற்கரையில் கட்டுக்கடங்காத மக்கள் கூட்டம் உள்ளது. இதனால் கடற்கரை நோக்கி செல்லும் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு ஆதரவாக அரசு ஊழியர்களும் கலந்து கொண்டனர்.
மதுரை தமுக்கம் மைதானத்திலும் சுமார் 2 லட்சம் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். நாகை மாவட்டம் சீர்காழியில் கொட்டும் மழையிலும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Meenu - Chennai,இந்தியா
21-ஜன-201709:13:47 IST Report Abuse
Meenu இனி எந்த ஒரு அரசியல் கட்சியும் இது எங்கள் கழகத்தால் தான் சாதிக்க முடிந்தது நாங்கள் தான் செய்தோம் முடித்தோம் என்று மேடைகளிலும் தேர்தல் நேரத்திலும் பேசுவதை இந்த போராட்டத்தை பார்த்தாவது நிறுத்திக்கொள்ள வேண்டும். உங்களால் பண்ண முடியாததை மாணவர்கள், இளைஞர்கள் இணைந்தால் சாதிக்க முடியும். நீங்கள் எல்லாம் பணத்துக்காகவும், குவாட்டருக்காகவும், சுகத்துக்காகவும் கட்சி நடத்துறீங்க. ஆனால் மாணவர்கள், இளைஞர்கள் இதில் எதையும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் பட்டம் படித்தவர்கள். துடிப்பு மிக்கவர்கள். இன்றைக்கு உங்களை விட நிறைய விஷயங்கள் தெரிந்து வைத்து இருக்கின்றனர். கட்சியில் இருக்கிற நிறைய கிழங்கள் எழுத படிக்க கூட தெரியாத, கைநாட்டுங்க, சும்மா பீலா உட்டுக்கிட்டு, வெள்ளை வேட்டியும் வெள்ளை சட்டையும் போட்டுக்கிட்டு மக்களை ஏமாத்திக்கிட்டு லஞ்சம் வாங்கிகிட்டு அடுத்த கட்சியை குறை சொல்லிக்கிட்டு இப்படியே பொழப்பு ஓட்டுறாங்க. இன்னைக்குத்தான் நம் நாட்டை பிடித்தது போகுமோ இப்படி செய்வதை விட்டுவிட்டு பொறுப்புகளை இன்றைய இளைய சமுதாயர்களிடம் விட்டுவிடுங்கள். உங்களை விட அவர்கள் நல்லாவே யோசிக்கிறாங்க. இந்த போராட்டத்தை பாருங்க, அமைதியா அறவழியில் எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் பார்த்துக்கொண்டனர். உங்க கட்சிகளையும் உள்ளே விடவில்லை. இந்தியாவில் இப்படி ஒரு பெரிய போராட்டம் அதுவும் அஹிம்சை வழியில் நடந்ததில்லை. இதற்க்கு பலனும் கிடைத்தது. இது ஒரு கின்னஸ் சாதனை. தயவு செய்து கட்சிகளெல்லாம் ஒதுங்கிக்கொள்ளுங்கள். இவர்கள் நாட்டை எப்படி வழி நடத்தி செல்கிறார்கள் என்று வேடிக்கை மட்டும் பாருங்கள். இனி நமது நாடு இளைஞர்களால் தான் ஆளப்பட்ட வேண்டும். அப்பொழுது தான் லஞ்சம் லாவண்யம் எல்லாம் ஒழியும் என்பதில் சந்தேகம் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Meenu - Chennai,இந்தியா
21-ஜன-201709:07:30 IST Report Abuse
Meenu இனி எந்த ஒரு அரசியல் கட்சியும் இது எங்கள் கழகத்தால் தான் சாதிக்க முடிந்தது நாங்கள் தான் செய்தோம் முடித்தோம் என்று மேடைகளிலும் தேர்தல் நேரத்திலும் பேசுவதை இந்த போராட்டத்தை பார்த்தாவது நிறுத்திக்கொள்ள வேண்டும். உங்களால் பண்ண முடியாததை மாணவர்கள், இளைஞர்கள் இணைந்தால் சாதிக்க முடியும். நீங்கள் எல்லாம் பணத்துக்காகவும், குவாட்டருக்காகவும், சுகத்துக்காகவும் கட்சி நடத்துறீங்க. ஆனால் மாணவர்கள், இளைஞர்கள் இதில் எதையும் எதிர்பார்க்கவில்லை. அவர்கள் படித்தவர்கள். துடிப்பு மிக்கவர்கள். கட்சியில் இருக்கிற நிறைய கிழங்கள் எழுத படிக்க கூட தெரியாத, கைநாட்டுங்க, சும்மா பீலா உட்டுக்கிட்டு, வெள்ளை வேட்டியும் வெள்ளை சட்டையும் போட்டுக்கிட்டு மக்களை ஏமாத்திக்கிட்டு லஞ்சம் வாங்கிகிட்டு பொழப்பு ஓட்டுறாங்க. எதனை காலம் தான் இப்படியே நம் நாட்டை பிடித்தது போகுமோ இப்படி செய்வதை விட்டுவிட்டு பொறுப்புகளை இன்றைய இளைய சமுதாயர்களிடம் விட்டுவிடுங்கள். உங்களை விட அவர்கள் நல்லாவே யோசிக்கிறாங்க. இந்த பாராட்டை பாருங்க, அமைதியா அறவழியில் எந்தவித சம்மதமும் நடக்காமல் பார்த்துக்கொண்டனர். கட்சிகளையும் உள்ளே விடவில்லை. இந்தியாவில் இப்படி ஒரு பெரிய போராட்டம் அதுவும் அஹிம்சை வழியில் நடந்ததில்லை. இது ஒரு கின்னஸ் சாதனை. தயவு செய்து கட்சிகளெல்லாம் ஒதுங்கிக்கொள்ளுங்கள். இவர்கள் நாட்டை எப்படி வழி நடத்தி செல்கிறார்கள் என்று வேடிக்கை மட்டும் பாருங்கள். இனி நமது நாடு இளைஞர்களால் தான் ஆளப்பட்ட வேண்டும். அப்பொழுது லஞ்சம் லாவண்யம் எல்லாம் ஒழியும் என்பதில் சந்தேகம் இல்லை.
Rate this:
Share this comment
Cancel
நான் தமிழன் - Zurich,சுவிட்சர்லாந்து
21-ஜன-201708:38:01 IST Report Abuse
நான் தமிழன் தமிழன் உலக நாகரீகத்தின் முன்னோடி என்று நம் இளைஞர்கள் உலகிற்கு நிரூபித்துவிட்டனர்... கத்தியின்றி, ரத்தமின்றி, காரியம் சாதிப்பது எப்படியென்று எங்கள் தமிழ் இளைஞர்களிடமிருந்து பாடம் படியுங்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X