ஜல்லிக்கட்டுக்கு எதிராக போராடுவோம்-பீட்டா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜல்லிக்கட்டுக்கு எதிராக போராடுவோம்-பீட்டா

Updated : ஜன 21, 2017 | Added : ஜன 21, 2017 | கருத்துகள் (142)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
பீட்டா, கொலை மிரட்டல், கற்பழிப்பு மிரட்டல், ஜல்லிக்கட்டு

சென்னை: ‛ கடந்த, நான்கு நாட்களாக, ‛பீட்டா' உறுப்பினர்களுக்கு கொலை மற்றும் கற்பழிப்பு மிரட்டல்கள் வருகின்றன' என்றும், தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு எதிராக போராடுவோம் என்றும், பீட்டா இயக்குனர் டாக்டர் வி.மணிலால் கூறியுள்ளார். ஆங்கில இணைய தள இதழுக்கு மணிலால் அளித்த பேட்டி வருமாறு:

கே: ஞாயிற்று கிழமை அன்று ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில், அரசு அவசர சட்டம் கொண்டு வர உள்ளது. ‛ஜல்லிக்கட்டை நானே துவக்கி வைப்பேன்' என, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். எனவே, இனிமேல் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது அல்லவா?

ப: எல்லா நேரத்திலும் எங்களுக்கு சட்ட ரீதியான வாய்ப்பு உள்ளது. எங்கள் சட்ட நிபுணர்களுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறோம். அவர்களின் ஆலோசனைபடி செயல்படுவோம்.

கே: சனிக்கிழமை அவசர சட்டத்தை கொண்டு வந்து, ஞாயிற்றுகிழமை ஜல்லிக்கட்டை நடத்தி விட்டால் உங்களால் என் செய்ய முடியும்? வார இறுதி நாட்களில் நீதிமன்றத்திற்கு செல்ல முடியாதே?

ப: சட்டப்படி என்ன செய்ய முடியும் என்பதை பார்ப்போம். அதையும் மீறி ஜல்லிக்கட்டு நடந்து விட்டாலும், தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு எதிராக போராடுவோம். ஜல்லிக்கட்டில், காளைகள் துன்புறுத்தலும் அடங்கும் என்றே, 2014ல் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. அதை மக்களிடம் எடுத்து கூறுவதில் இருந்து எங்களை யாரும் தடுக்க முடியாது.

கே: சென்னை மெரினாவில் போராடும் இளைஞர்கள், ‛ பீட்டாவை தடை செய்ய வேண்டும்' என, கூறுகின்றனர். தமிழகத்தில் உங்கள் அமைப்பை வில்லனாக சித்தரித்துள்ளனர். இது உங்களுக்கு ஆச்சரியத்தை தருகிறதா?

ப: ஆமாம். உண்மைதான். இது எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. பீட்டா அமைப்பு, ஒரு தன்னார்வ அமைப்பு என்பது அனைவருக்கும் தெரியும். நாங்கள் சட்டத்தை இயற்றுவதுஇல்லை; அமல்படுத்துவதும் இல்லை. சட்டப்படி தான் நாங்கள் நடக்கிறோம்.

கே: உங்களுக்கு எதிராக உருவாகியுள்ள எதிர்ப்புக்கு பின்னணியில் சதி ஏதேனும் உள்ளது என்ற சந்தேகம் இருக்கிறதா

ப: உச்சநீதிமன்றம் தடை விதித்த பிறகும், ஜல்லிக்கட்டை நடத்த வேண்டும் என சிலர் மிகவும் தீவிரமாக உள்ளனர். அவர்கள் தான் இந்த வாய்ப்பை பயன்படுத்தி, எளியவர்களை தாக்கியும், எதிர்த்தும் பேசி வருகின்றனர்.

கே: மத்திய அரசு உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறீர்களா?

ப: நாங்கள் சுத்தமானவர்கள். இந்த நாட்டில் பின்பற்றப்படும் சட்டத்தின்படி செயல்படுகிறோம். நாங்கள் எதை பற்றியும் கவலைப்பட தேவையில்லை. விலங்குகளின் நலனுக்காக நாங்கள்போராடும் போது, எதை பற்றி நாங்கள் கவலைப்பட வேண்டும்.

கே: பீட்டா அமைப்பிற்கு தனிப்பட்ட முறையில் மிரட்டல்கள் வந்துள்ளதா?

ப: ஆமாம். ஏராளமான கொலை மிரட்டல் போன் அழைப்புகள் வந்துள்ளன. போனில் ஆங்கிலத்திலும், தமிழிலும் பேசுபவர்கள் ஆபாசமாக பேசுகின்றனர். எங்கள் தலைமை நிர்வாக அதிகாரி பூர்வா ஜோஷிபுராவுக்கு கற்பழிப்பு மிரட்டல் வந்துள்ளது. ஆனால், இது குறித்து நாங்கள் இன்னும் போலீசில் புகார் செய்யவில்லை. நாங்கள் மற்ற பணிகளில் தீவிரமாக உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (142)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bairava - madurai,இந்தியா
27-ஜன-201714:52:00 IST Report Abuse
bairava நண்பர்களே இந்த பீட்டாவின் போராட்டம் கண்களுக்கு விருந்தாக இருக்கும் கவர்ச்சி நடிகைகல் நிருவாண உடையில் வருவார்கள் சன்னி லியோன் ,எமி ஜாக்சன், மூணுஷா எல்லாரும் நல்ல இருக்கும் நடக்கட்டும் ...நடக்கட்டும் ...நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்
Rate this:
Share this comment
Cancel
Boopathy Perumal - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-ஜன-201723:00:02 IST Report Abuse
Boopathy Perumal The world’s largest beef meat exporter country is Brazil followed by India,Australia, USA and UK. Hindu Businessmen are the largest beef suppliers of India.Following are the four largest beef exporters who are Hindus. 1) Al-Kabeer Exports Pvt. Ltd. Its owner name: Mr. Shatish &Mr. Atul Sabharwal Add: 92, Jolly makers, Chembur Mumbai 400021 2) Arabian Exports Pvt.Ltd. Owner’s name: Mr.Sunil Kapoor Add: Russian Mansions, Overseas, Mumbai 400001 3) M.K.R Frozen Food Exports Pvt. Ltd. Owner’s name Mr. Madan Abott. Add : MG road, Janpath, New Delhi 110001 4) P.M.L Industries Pvt. Ltd. Owner’s name: Mr. A.S Bindra Add : S.C.O 62-63 Sector -34-A, Chandigarh 160022
Rate this:
Share this comment
Cancel
rcsn - Chennai,இந்தியா
21-ஜன-201721:48:41 IST Report Abuse
rcsn ஐயா பீட்டா பெருமக்களே உங்க நாய் உங்க வீட்டுக்கு வரேன்னு சொல்லுச்சி? எப்படி அதை வீட்டுல வளர்க்குறீங்க? ரொம்ப தப்பு. மறந்துட்டேன் அதென்ன லவ் பேர்ட்ஸ் நல்ல கூட்டுக்குள் போடறேன்னு சொன்னதும் ஓகே ன்னிச்சா அப்புறம் ஸ்பெயின் இல்ல ஸ்பெயின் அங்கே மஞ்சு விரட்டு மாதிரி ஒன்னு நடக்குதாம் அதுல தோத்த காளைகளை வெட்டி கொன்னு சமைச்சு சாப்பிடுறாங்களாமே? நீங்களும் டேஸ்ட் பார்த்துட்டு வந்துட்டியளோ? அது கிடக்கட்டும், அமெரிக்காவுல கௌ பாய்ஸ்னு ஒரு கூட்டம் இருக்காமே? அவங்களும் ஸ்பெயின் ஆளுங்க மாதிரித்தான்னு கேள்விப்பட்டேன். நிசந்தானுங்களா? உங்களை ஒருத்தரும் நீதி மன்றத்திற்கு உள்ள விடலியா ? என்னப்பு உங்க சங்கத்துக்கு எங்க நாட்டு ஆளுங்களையே போட்டு திருப்பாரே? நல்லா இல்ல சொல்லிப்புட்டேன்
Rate this:
Share this comment
Cancel
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
21-ஜன-201718:44:48 IST Report Abuse
Murugan உங்களை யாருடா மிரட்டுவது ,அப்படியிருந்திருந்தால் எப்பயோ எங்கள் வேலை சுலபமாக முடிந்து இருக்குமே.................... பேசுவதை எச்சரிக்கையுடன் பேசவும்.
Rate this:
Share this comment
Cancel
arulmozhi - chennai,இந்தியா
21-ஜன-201718:35:51 IST Report Abuse
arulmozhi மக்கள் PETA என்ற அமைப்பின் மீது கோபத்தை பொழிகிறார்கள் ... அதை விடுத்தது அவர்கள் சொல்வதில் ஏதாவது உண்மை உள்ளதா என்பதை ஆராய்ந்து ஏதேனும் குற்றம் நம்மிடம் இருப்பின் அதை களைய முற்பட வேண்டும் ... "எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு - திருவள்ளுவர்" ... இந்த வாயில்லா ஜீவன்கள் சார்பாக பேச நம் நாட்டில் யார் உள்ளனர்... ஜல்லிக்கட்டிலும் கோழி சண்டைகளிலும் பங்கேற்க இந்த வாயில்லா பிராணிகளிடம் யாரவது சம்மதம் கேட்டனரா? நமக்கு வருவதுதான் ரத்தமா இந்த பிராணிகளுக்கு வலி இல்லையா இவைகளுக்கு வருவது தக்காளி சட்னியா ? அந்த வாயில்லா பிராணிகளுக்கு மது கொடுத்து மைதானத்தில் ஓட விடுவதையும் கூரிய கத்தி போன்ற ஆயுதங்களினால் அவைகளை கிழிப்பதையும் நாம் தமிழ் கலாச்சாரம் என்ற போர்வையில் அனுமதிக்க கூடாது ... அப்படி சம்மதித்தால் ஏன் உடன் கட்டை ஏறுவதையும் கழுவில் ஏற்றுவதையும் நாம் மறுபடியும் தமிழ் கலாச்சாரம் என்ற பெயரில் கொண்டு வரக்கூடாது ? நம்முடைய வீட்டை நாம் சரியாக பார்த்து கொள்ள வில்லை என்றல் இப்படித்தான் யாராவது வெளியில் இருந்து வந்து நமக்கு புத்தி மதி சொல்வார்கள் ...
Rate this:
Share this comment
வாழ்க​ பாரதம் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-ஜன-201720:25:07 IST Report Abuse
வாழ்க​ பாரதம்இந்த peta அமைப்பு சொன்னதே என்பதற்காக மட்டும் உச்சாநீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்திருக்க மாட்டார்கள், அவர்களுடைய (உச்சா நீதிமன்ற)ம்ஆராய்ச்சியின் போதும் விசாரணையின்போதும் பல விஷயங்கள் ஜல்லிக்கட்டிற்கு எதிராக இருந்திருக்கும் என நினைக்கிறன். அப்படியே PETA' அமைப்பு தொடுத்த வழங்கினால் மட்டும் தடை ஆகி இருந்தால், நம் தேர்ந்தேடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிகள் யார் காலில் விழுந்து சேலை துவைத்துக்கொண்டிருந்தனர்? பக்கத்து ஊர் கர்நாடக காவிரி விஷயத்தில் 100 கோடி செலவு செய்து வழக்கில் தோற்றும் கூட தண்ணீர் தராமல் இருப்பதில் உறுதி காட்டமுடிந்தபோது நம் எம் எல் ஏக்களும் எம் பிக்களும் ஏன் வாய் மூடி தலை குனிந்து வேலைக்காரிக்கரிக்கு துணைநின்று முதலமைச்சர் மறைவிற்கு காரணம் தெரியாமல் யாருடையோ குற்றத்திற்கு துணைநின்றனர்?...
Rate this:
Share this comment
Cancel
R.PERUMALRAJA - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
21-ஜன-201718:19:57 IST Report Abuse
R.PERUMALRAJA இந்த அமைப்பில் உள்ள தமிழக உறுப்பினர்கள் யார் யார் என்று சொன்னால் தினமலருக்கு ஆயிரம் கோடி நன்றிகள் ....
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
21-ஜன-201717:55:49 IST Report Abuse
தமிழர்நீதி பீட்டா ,இடம் ஏவல் தெரிந்து பேசுங்க . ஐயா, யாரிடம் வந்து மிருகவதை பற்றி பாடம் எடுக்கிறீர்கள், யானையை பிள்ளையாராய் பிடித்து , சேவலை முருகன் கொடியில் வைத்து , காளையை நந்தியாக அமர்த்தி பசுவை கோமாதாவா, சிங்கத்தை சக்தியின் வாகனமாக்கி ,புலியை ஐயப்பனின் நண்பனாக்கி பாம்பை சிவனுக்கு மாலையாக்கி , கருடனை பெருமாளின் மகிழுந்தாக்கி ,எருமையை எமனின் தேராக்கி, குரங்கை அனுமனாக , நாயை பைரவனாக பார்த்த கூட்டமய்யா நாங்கள், மீரட் புரட்சி நடக்கும் பல ஆண்டுகளுக்கு முன்பே வேலூர் புரட்சியை நிகழ்த்தியவர்கள் நாம்.. நீங்கள் மீரட் புரட்சியையே முதல் இந்திய சுதந்திர போராக பதிந்து கொண்டீர்கள். ஆங்கிலேயரை வெற்றிக் கொண்ட வேலுநாச்சியாரை தந்தவர்கள் நாங்கள்.. நீங்கள் தோற்ற ஜான்சிராணியே வீரத்தின் அடையாளமாக கொண்டாடினீர்கள்.. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் முதல் வெற்றி வீரன் தமிழன். பூலித்தேவன். வங்கத்தேசத்திற்கு முன்பே மொழிப்போரை நிகழ்த்தி மொழிக்காக அதிக உயிர் தியாகம் செய்தவர்கள் நாங்கள். நீங்கள் வங்க தேசத்தினருக்காகவே தாய்மொழி தினத்தை நினைவு கூறுகின்றீர்கள்.. நீங்கள் வடமொழியை தேவபாசை என்றும் உலகில் முதலில் தோன்றிய மூத்த மொழியாம் தமிழ்மொழியை நீசபாசை என்றீர்கள்.. நாங்கள் அவ்வையார், வள்ளுவர், கம்பன், வள்ளலார், பாரதியை என பலரை தந்தோம்.. நீங்கள் தாகூரை மட்டும் கொண்டாடினீர்கள். நாங்கள் கணவனுக்கு கற்பை நீருபிக்க வேண்டி தீயில் மூழ்கி வந்த உங்கள் சீதையையும் வணங்குகிறோம்..(நீங்கள் கற்புடன் அனுப்பிய இராவணனை அரக்கனான கதைகட்டி புராணத்தை மாற்றி காட்டுறீங்க) கணவனுக்காக மரணத்திற்கான நீதி வேண்டி பாண்டிய அரசனை எதிர்த்து தனியாக போராடி வென்ற கற்பு தெய்வமே எங்கள் கண்ணகி தாய் மதுரை நகரை தீயிட்டு எரித்த கற்புகரசி கண்ணகியை நீங்கள் யாரென்றே இன்னும் அறிவதில்லை.உங்களது ரிஷிகளை பற்றி எங்களுக்கு கற்பிக்கிறீர்கள்.. எங்களது சித்தர்களை பற்றி நீங்கள் கற்பதில்லை. நாங்கள் குப்தர்களை பற்றி படிக்கும் அளவுக்கு நீங்கள் சோழப்பேரரசை சேர, பாண்டியர் பற்றி நீங்கள் அறிவதில்லை. கலிங்கம் வென்ற அசோகரை நாங்கள் புகழ்கிறோம்.. கல்லணை கட்டிய கரிகால் சோழனை நீங்கள் பேசுவதில்லை.. அனைத்து உயிர்களும் ஒருமைப்பாடு உணர்வுடன் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ வேண்டிவர் ஜீவகாருண்ய ஒழுக்கம் கடைபிடித்து மரணம் இல்லாத பெரு வாழ்வு பெற்ற மகான் இராமலிங்க அடிகள் என்கிற வள்ளலார் பற்றி வட (மட) நாடு மக்களுக்கு தெரியுமா? தமக்கு வந்த வாய்ப்பை விவேகானந்தருக்கு விட்டுகொடுத்து உலகறியச் செய்தவர் இராமநாதபுர சேதுபதி மன்னர் அவரை நீங்கள் அறிந்துகொள்ள நினைத்தது உண்டா?. நேதாஜி படைகட்டியபோது தமிழர்களிடத்தில் அதிக அளவு ஆதரவை திரட்டி தந்தவர் வள்ளலார் வழிவந்த எங்கள் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் என்பதை நீங்க எத்தனை பேர் அறிவீர். நேதாஜி அடுத்த பிறவி இருந்தால் தமிழனாக பிறக்க ஆசைபட்டவர். வரலாற்றில் புறக்கணிக்கப்பட்டவர்கள் நாங்கள்.. ஆம்.. நாங்கள் தமிழர்கள். எங்கள் தமிழ் இளைஞர் பெருங்கூட்டம் அறிந்து கொண்டது இனி நாங்கள் வாழ நீங்கள் தடை என்று தமிழர்களுக்கு ஏன் இந்த கோப‌ம்? எப்ப‌டி இந்த இளைஞ‌ர்க‌ள் இப்ப‌டிக் கொதித்து எழுகிறார்க‌ள்? எந்த‌ புள்ளியில் இவ‌ர்க‌ள் ஒருங்கிணைகிறார்க‌ள்? இக்கேள்விக‌ளே தொலைக்காட்சி விவாத‌ங்க‌ளில் ஆச்ச‌ரிய‌மாக‌ முன் வைக்க‌ப்ப‌டுகிற‌து. .உண்மையில் இது ச‌ல்லிக்க‌ட்டுக்காக‌ ம‌ட்டுமோ த‌மிழ‌ர் என்ற‌ உண‌ர்வுக்காக‌ ம‌ட்டுமோ எழுந்த‌ எழுச்சியாகக் க‌ருத‌வில்லை. ப‌ல‌ கால‌ங்க‌ளாக‌ நீதித்துறையும், ம‌த்திய‌ நிர்வாக‌த்துறையும் ந‌ம் மீதும் த‌மிழ‌ர்க‌ள் மீதும் ஓர‌வ‌ஞ்ச‌னையாக‌வும், கேளிப் பொருளாக‌வும் காண்ப‌தாலே இக்கோப‌மும் எழுச்சியும் உருவான‌து என்பேன். ஆம் நிச்சய‌மாக‌ இப்போராட்ட‌ங்க‌ளை நீதித்துறைக்கும், ஆளும் நிர்வாக‌த்துறைக்கும் எதிரான‌ க‌ண்ட‌ன‌க் குர‌லாக‌வே பாருங்க‌ள். ஓரு ச‌ல்மான் கானின் ஜாமீனுக்காக‌ ந‌ள்ளிர‌வில் செய‌ல்ப‌டும் நீதிம‌ன்ற‌ங்க‌ள் த‌மிழ‌னின் குர‌லைக் கூட‌ கேட்காம‌ல் "வீடியோ கேமில் விளையாட‌ வேண்டிய‌துதானே" என்று சொன்ன‌ கிண்ட‌ல்தான் இந்த‌ எழுச்சிக்குக் கார‌ண‌ம். "ஆக‌ம‌விதிக‌ளை ம‌திக்க‌வேண்டும், அது க‌லாச்சார‌ம்" என்று சொன்ன‌ நீதிம‌ன்ற‌ங்க‌ள்தான் க‌லாச்சார‌ நிக‌ழ்வான‌ ச‌ல்லிக்க‌ட்டை காட்டுமிராண்டி விளையாட்டு, ஏன் சிங்க‌த்தை அட‌க்க‌ வேண்டிய‌து தானே என்று சொன்ன‌போதே ஆர‌ம்ப‌மான‌ கோப‌ம்தான் இது. தீர்ப்பை ம‌திக்காம‌ல் ப‌ல‌நூறு த‌மிழ‌க‌ வாக‌ன‌ங்க‌ளை கொளுத்திய‌போதும், தீர்ப்பின்ப‌டி ஒரு சொட்டு த‌ண்ணீர் கூட‌ திற‌க்காம‌ல் வ‌ஞ்சித்த‌ க‌ர்நாட‌காவை சிறிதும்கூட‌ க‌ண்டிக்காம‌ல் த‌மிழ‌க‌த்தை ம‌ட்டும் க‌ண்டிப்பாக‌ நீதியை அம‌ல்ப‌டுத்த‌ வேண்டும் என்று மிர‌ட்டும்போதுதான் நீதித்துறையின் மீதும் நிர்வாக‌த்துறையின் மீதும் எங்க‌ளுக்கு ந‌ம்பிக்கை இன்மையும் அதிருப்தியும் உருவாகி அத‌னால் விளைந்த‌தே இக்கோப‌ம். க‌ண‌க்கிலே த‌வ‌றுக‌ள் செய்து ஒருவ‌ரை ஒரு பெரும் த‌ண்ட‌னையிலிருந்து ஒரு நீதிப‌தியால் விடுத‌லைசெய்ய‌ வைக்க‌ முடியும்போதும், ச‌ல்லிக்க‌ட்டுக்கு ஆத‌ர‌வாக‌ அர‌சாணை கொண்டுவ‌ந்த‌தும் அதேநாளில் அத‌ற்கு எதிரான‌ ம‌னுவை ஏற்று அர‌சாணைக்கு த‌டை விதிக்க‌ முடிகிற‌போதும் நீதிம‌ன்ற‌ செய‌ல்பாடுக‌ளைக் நாங்க‌ள் க‌வ‌னித்துக் கொண்டுதான் இருக்கிறோம், ஆனால் ச‌ல்லிக்க‌ட்டுக்கு எதிரான‌ வ‌ழ‌க்கில் தீர்ப்பை உங்க‌ள் விருப்ப‌த்திற்கு எல்லாம் சொல்ல‌முடியாது என்று ஒத்திவைக்கும் போதுதான் வ‌ருத்த‌மும் கோப‌மும் எழுகிற‌து. பாராளும‌ன்ற‌மே முட‌ங்கினாலும் அவ‌ச‌ர‌ச் ச‌ட்ட‌ங்க‌ளை இய‌ற்றிக்கொள்ள‌ முடிகின்ற‌ அர‌சால் க‌ட‌ந்த‌ பொங்க‌லில் இருந்து ப‌ல‌முறை பாராளும‌ன்ற‌ம் கூடிய‌போதும் ச‌ல்லிக்கட்டு விவ‌கார‌த்தில் ச‌ட்ட‌திருத்த‌ம் கொண்டுவ‌ர‌ நினைக்காத‌ ம‌த்திய‌ மாநில‌ அர‌சுக‌ள் பொங்க‌ல் வ‌ந்த‌தும் ச‌ல்லிக்க‌ட்டு ந‌ட‌க்கும் என‌ ந‌ம்பிக்கைப் பொய்க‌ளைச் சொல்லிக் கொண்டிருப்ப‌தால் எழுந்த‌ கோப‌மே இது. ச‌ட்ட‌ங்க‌ள்தான் நாட்டை ஆள‌வேண்டும், ந‌ல்ல‌து ஆனால் ச‌ட்டத்தை காப்ப‌வ‌ர்க‌ள், நிலைநிறுத்துப‌வ‌ர்க‌ளின் த‌னிப்ப‌ட்ட‌ விருப்பு வெறுப்புக‌ளுக்கு ஏற்றால்போல் ச‌ட்ட‌ங்க‌ள் கையாள‌ப்ப‌டுகிற‌தா? என்ற‌ ச‌ந்தேக‌த்தின் கோப‌மே இந்த‌ எழுச்சி. க‌ட‌ந்த‌ ப‌ல‌ வ‌ருட‌ங்க‌ளாக‌ அர‌சிய‌ல்வாதிக‌ளின் சுய‌ந‌ல‌ சுர‌ண்ட‌ல்க‌ளால் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ இளைஞ‌ர்க‌ளின் மொத்த‌க் கோப‌மே எங்க‌ள் இளைஞ‌ர்க‌ளின் எழுச்சி. ச‌ல்லிக்க‌ட்டோடு இப்போராட்ட‌ங்க‌ள் நின்றுபோய்விடாது. இனி த‌மிழ‌ர்க‌ள்மீது, த‌மிழ‌ர்க‌ளின் அடையாள‌ங்க‌ள்மீது, இய‌ற்கை வ‌ள‌ங்க‌ள்மீது, க‌லாச்சார‌ம் மீது தொடுக்க‌ப்ப‌டும் எந்த ‌ஒரு தாக்குத‌லுக்கு எதிராக‌வும் இனி எந்த‌ ஒரு க‌ண‌த்திலும் இச்ச‌கோத‌ர‌ர்க‌ள் ஒன்றுகூடுவார்க‌ள். போராடுவார்க‌ள். க‌ட‌மையிலிருந்து அர‌சோ, அர‌சிய‌ல்வாதிக‌ளோ பின்வாங்க‌லாம் ஆனால் ஒருபோதும் எம்ச‌கோத‌ர‌ர்க‌ள் இனி பின்வாங்க‌மாட்டார்க‌ள். பீட்டா தமிழரோடு இணைந்து மிருக நலம் காத்திட யோசி . எதிர்க்காதே . வெந்து வீழ்ந்த இளசுகள் .இழக்க எதுவும் இல்லை . உங்ககளை போல நட்ச்சத்திர ஹோட்டல் ,நுனி நாக்கு ஆங்கிலம் இல்லை . பனியிலும், வெயிலிலும் காய்ந்து மிருகம் காளை காத்திட போராடுகிறார்கள் . ஒதுங்கிப்போ அநீதி .
Rate this:
Share this comment
Cancel
Kannan KR - Coimbatore,இந்தியா
21-ஜன-201717:34:55 IST Report Abuse
Kannan KR கைப்புள்ள எத்தனை அடிச்சலும் வலிக்காத மாதிரியே எப்படி நடிக்கிற?
Rate this:
Share this comment
Cancel
Sekar Raja - Chennai,இந்தியா
21-ஜன-201717:25:12 IST Report Abuse
Sekar Raja பூர்வா ஜோஷிபுராவுக்கு கற்பழிப்பு மிரட்டலா? சும்மா காமெடி பண்ணாதீங்க.
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
21-ஜன-201717:23:31 IST Report Abuse
மலரின் மகள் நரி ஊருக்குள்ள வந்ததே தப்பு, இதுல ஊளை வேற. (சின்னதா எழுத கத்துக்கிட்டேன்).
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை