பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி

Added : ஜன 27, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடு: அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு பள்ளி வளர்ச்சிக்கும், சமுதாயத்துக்கும் பாலமாக அமையும். அனைத்து பள்ளி வயது குழந்தைகளையும் (6 முதல், 14 வயது), பள்ளியில் சேர்த்தல், பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துதல், இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் உள்ள சிறப்பு அம்சங்களை கொண்ட பள்ளியாக மாற்றுவதற்கான நோக்கங்கள் குறித்து மூன்று நாள் பயிற்சி, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள, 1,264 பள்ளி மேலாண்மை குழுவில், ஒரு குழுவுக்கு, மூன்று அல்லது, நான்கு உறுப்பினர்கள் வீதம், 4,223 உறுப்பினர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சி, வரும், 30 முதல், பிப்.,1 வரை வழங்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X