இதுதான்யா ராமாயணம்...| Dinamalar

இதுதான்யா ராமாயணம்...

Updated : ஜன 27, 2017 | Added : ஜன 27, 2017 | கருத்துகள் (33)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

நடிகர் சிவகுமாரின்
'இதுதான்யா ராமாயணம்...'

எத்தனையோ இசை விழாவினைக் கண்ட சென்னை மியூசிக் அகதமி முதல் முறையாக ஒரு இலக்கிய விழாவினைக் கண்டு பிரமித்து போய்விட்டது.
விழாவின் நாயகர் நடிகர்,ஒவியர்,பேச்சாளர் சிவக்குமார்.

கம்பன் என் காதலன் என்ற தலைப்பில் நடிகர் சிவக்குமாரின் ஒலி-ஔி-உரை விருந்து என்ற தலைப்பில் தினமணி ஏற்பாடு செய்திருந்த விழா அது.
குத்துவிளக்கேற்றல்,பொன்னாடை அணிவித்தல் என்ற வழக்கமான நிகழ்வினை தொடர்ந்து நடிகர் சிவக்குமார் மைக்கை பிடித்தார்.

என் பீரோவில் போட்டு பூட்டியிருந்த ஒவியங்களை துாசு துடைத்து ஒவிய கண்காட்சியாக சென்னையில் நடத்தினேன்.அதை தினமணி இன்னும் சிறப்பாக கோவையில் நடத்தியது.அந்த நன்றிக்காகவே இந்த விழா.
நான் ஒவியனாக ஊரெல்லாம் திரிந்து ஒவியம் வரைந்தது ஒரு காலம் பிறகு பவுடர் பூசிக்கொண்டு நடிகனாக நாற்பது வருடங்கள் வலம் வந்தது ஒரு காலம் நடித்தது போதும் என்று முடிவெடுத்தபிறகு மேடைப்பேச்சுப் பக்கம் வந்தேன்.

இத்தனைக்கும் எனக்கு அடுக்கு மொழியோ இலக்கிய நடையோ எதுகை மோனையோ தெரியாது கண்ணதாசன் கொஞ்சம்,சிவாஜியின் வசனங்கள் கொஞ்சம்,பாரதியின் பாடல்கள் கொஞ்சம் என்று மனப்பாடம் செய்து பேசிவந்தேன்.
இந்த நிலையில்தான் பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா காரைக்குடி கம்பன் விழாவில் போய் கம்பனைப் பற்றி பேசச்சொன்னார்.' என்ன விளையாடுகிறீர்களா? இதுவரை கம்ப ராமாயணத்தை பார்த்தது கூட கிடையாது என்றேன் 'அவ்வளவுதானே' என்று எட்டு வால்யூம் புத்தகத்தை அனுப்பிவைத்தார்.

அதனை திறந்து முதல் பாடல் படித்துப் பார்த்தேன் ஒன்றும் புரியவில்லை மூடிவைத்துவிடடேன், கொஞ்ச நாள் கழித்து முதல் பாடல் வேண்டுமானால் கரடு முரடாக இருக்கும் அதனால் நடுவில் ஒரு பாடல் படித்துப் பார்ப்போம் என்று எடுத்து படித்தேன் அது இன்னும் முரடாக இருந்தது,இது நமக்கு சரிப்பட்டு வராது என்று துாக்கி பரணில் போட்டுவிட்டேன்.
பிறகு நிகழ்ச்சியில் ஒத்துக்கொண்டபடி பேசவேண்டுமே என்பதற்காக கம்பர் எழுதிய 10,520 பாடல்களில் இருந்து எனக்கு புரியக்கூடிய ஒன்பது பாடல்களை மட்டும் படித்துவிட்டு போய்பேசினேன்.பேசி முடித்ததும் என் எதிரே இருந்த கம்பனில் கரைகண்டவர்கள் பலரும் பாராட்டினர், சரி நம்மை ஆறுதலுக்கு பாராட்டுகின்றனர் என்று நினைத்தேன் ஆனால் என் பேச்சு அன்று இரவே பல வெளிநாடுகளுக்கு நவீன தொழில்நுட்பம் மூலமாக சென்று பாராட்டுக்களை பெற்றுக் கொண்டு வரவே கம்பன் பெரிய ஆள்தான் என்று அதற்கு பிறகு ஆராய்ச்சி செய்து நிறைய படித்தேன், தெரிந்து கொண்டேன். முடிவில் தேர்ந்து எடுத்த நுாறு பாடல்கள் மூலம் முழு கம்ப ராமாயணத்தை பேசுவது என முடிவு செய்தேன்.

முடிவு செய்ததன் அடிப்படையில் ஈரோடு கல்லுாரியில் இரண்டரை மணிநேரம் பேசிமுடித்தேன், நான் பேசிய பேச்சின் சி.டி.,ஒன்றரை லட்சத்தை தாண்டி விற்றுவருகிறது என்கின்றனர்.
அந்தப் பேச்சை நானே நினைத்தாலும் இனி பேசமுடியாது ஆகவே அப்போது பேசிய பேச்சின் சி.டி.,யை இப்போது கேளுங்கள் என்று சொல்லிவிட்டு மேடையில் இருந்து இறங்கினார்.அப்போதுதான் விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த 'ஒலி-ஔி-உரை விருந்தின்' அர்த்தம் தெரியவந்தது.

இந்த பேச்சை ஏற்கனவே ஒரு டி.வி.,யிலும்,சி.டி.,மூலமாகவும் கேட்டவர்கள் பலர் அரங்கத்தில் இருந்தாலும் யாரும் எழுந்து செல்லவில்லை அதுவே பேச்சு பிரமாதமாக இருக்கும் என்ற ஆர்வத்தை தந்தது.
ஒரு சொட்டு தண்ணீர் குடிக்காமல் நுாறு பாடல்களின் துணை கொண்டு தற்கால தமிழால் எதிரே இருந்த இரண்டாயிரத்திற்கும் அதிகமான மாணவிகளை கட்டிப்போடும் விதத்தில் நடிகர் சிவகுமார் வழங்கிய ராமாயண பேச்சு பிரமிப்பூட்டுவதாய் இருந்தது.

தேர்ந்த நடிகர் என்பதால் ராமணாக,லட்சுமணனாக,பரதனாக,சத்ருக்கனாகஅனுமனாக,விபிஷனானாக,ராவணணாக என்று அந்த பாத்திரமாகவே பேசும் போது மாறியிருந்தார்.வாலியின் கோணத்திலும் ராவணனன் கோணத்திலிருந்தும் பேசிய போது அவர்கள் வில்லனாகவே தெரியவில்லை அடுத்த கணமே ராமனாக பதிலுறுக்கும் போதுதான் வில்லன்களாயினர்.
பரதன் தன் தாயிடம் சீற்றத்தை காண்பித்த போதும்,சீதை தன் கற்பை நிருபிக்க நேர்ந்த கணத்தையும்,இந்திரஜித்தின் போர்க் கோலத்தை விவரித்த போதும் கேட்பவர் கண்ணில் நீர் பெருகுமளவிற்கு பேச்சில் உணர்ச்சி பிரவாகமெடுத்தது.ராமாயணத்தின் நுாறு பாடலையும் சந்தம் பிரித்து தெளிந்த உச்சரிப்போடு சொன்ன ஒவ்வொரு நேரமும் அரங்கில் எழுந்த கரவொலி அடங்க நீண்ட நேரமானது.

இவ்வளவு எளிமையாக ஆனால் கேட்டவர் ஒவ்வொருவர் மனதிற்குள்ளும் கம்பனை வலிமையாக ராமனின் அம்பு போல உட்செலுத்திய நடிகர் சிவகுமார் நிறைவாக 'இதுதான்யா ராமாயணம்' என்ற போது அவரது கண்களிலும் கேட்டர்கள் கண்களிலும் ஆனந்த கண்ணீர்.
மேடையில் திரை நிகழ்வு நிறைவு பெற்றதும், மீண்டும் மேடையேறிய சிவக்குமாரை பலரும் பாராட்டினர்,குறிப்பாக எழுபத்தைந்து வயதிலும் முப்பது வயது சுறுசுறுப்புடனும் தோற்றத்துடன் காணப்படுவது இறைவனது கொடை என்றனர்.


சிவக்குமார் பலரை நன்றியுடன் நினைவு கூர்ந்தார், ஒரு கூடுதல் சந்தோஷ தகவலாக விரைவில் மகாபாரதத்தையும் இதே போல சென்னை மக்களுக்கு தருவதாக கூறிவிட்டு நிறைவு செய்தார்.
-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
07-மார்-201707:51:31 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> புழக்கடை கீரை க்கு மதிப்பே கிடையாது என்பதுதான் நம்மக்களின் இயல்புதானே நாமெல்லாம் பல்லில் படிக்கும் பொது கம்பராமாயணம் தமிழா பாடத்துலே செய்யுள் பாகுதிலேபாடிச்சுருக்கோமே (நன் இறுதி ஆண்டிலேதான் தமிழ்நாடுவந்தேன்)ஒரு ஆண்டுதான் பாக்கியம் கிடைச்சுது . 9th வரை வடக்கில் படிச்சு இறுதிக்கு தமிழ்நாடுவந்தேன் இன்றுவரை பல செய்யுள்பகுதிகளாய் இலாந்தேன் என்று வருத்தமும் உண்டு . கல்கத்தாலே படிச்சப்போ ஒரு தமிழ் பாடம் சிம்பிளா இருக்கும் இலக்கணம் கிடையாது 1960 லே இப்போ எப்டின்னும் தெரியாது , வடக்கிருந்து வந்து 55வ்ருஷாம் மேளா ஆச்சுதே , (என் தாயபாஷை தமிழ் படிக்கலேன்னு பாதிக்கமுடியலேன்னு என்றுவருத்தம் இருக்கு ) சிவாகுமார் எல்லாம் தமிழ்நாட்டிலேயே பொறந்துவளந்தவா தானே அவாளுக்கு கம்பராமாயணம் படிக்க கஷ்டமானதா இருந்துதுன்னா ஆச்சரியமாவேயிருக்கு , இப்போதும் என் தமிழ் அறிவு வளர காரணமே எங்கள் தமிழ் ஆசிரியை அலமேலு அம்மா தான் அவ்ளோ அழகா விரிவாக பாடம் நடத்துவாங்க படிப்பு முடிஞ்சும்கூட அவரிடம் தமிழ்கற்க திருமணம் வாராய் சென்றுவந்தேன் , அடுத்து விகடன் கல்கி கலைமகள் அமுதசுரபி மஞ்சரி தினமணி பேப்பர்களேதான் என்றும் சொல்லுவேன் சிலப்பதிகாரம் வளையாபதி குண்டலகேசி இம்முன்றும் நூலகம் காலிலே படிச்சேன் மற்ற ரெண்டு மணிமேகலை ஜிஐவகை சிந்தாமணி படிச்சது இல்லீங்க்கா எங்க வீட்டுக்கு அருகிலே மாவட்ட நுஉலகம் வேறு இருந்ததால் அங்கேருந்து னுருள்கள் எடுத்துபடிச்சேன் திருமணம் முடிச்சு மீண்டும் வடக்கேவாசம் 20varusham லைட் ரீடிங் தான் ஆனாலும் எனக்கு என்று சில புத்தகம்கள் வாசிச்சுண்ண்டுருப்பேன் , ஆனால் இப்போது பலரும் தம் குழந்தைகள் தமிழ் படைப்பதையே விரும்பலீங்க அதுதான் வருத்தம் அளிக்குது வடக்கே தம் பிள்ளைகள் தம் தாய் மொழி கற்கவேண்டும் என்று தீவிரமா இருக்காங்க என்பதும் உண்மை நேக்கு தமிழ் தெரியாதுன்னு சொல்றது ஒரு நாகரீகம் போல இருக்கு
Rate this:
Share this comment
Cancel
v.r.sounder rajan - chennai,இந்தியா
05-மார்-201723:51:45 IST Report Abuse
v.r.sounder rajan கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்களின் யூடியூபில் பாருங்கள்
Rate this:
Share this comment
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
27-பிப்-201704:17:40 IST Report Abuse
meenakshisundaram ராமாயணம் தமிழ் காவியம் என்று சிலருக்கு தெரிய வில்லை.கனி ருப்ப காய் கவர்ந்தது போல என்று வள்ளுவர் இந்த மாதிரி அறிவிலிகளுக்காகத்தான் சொல்லி யுள்ளார்.
Rate this:
Share this comment
Cancel
Marshal Thampi - Nagercoil,இந்தியா
20-பிப்-201714:27:56 IST Report Abuse
Marshal Thampi " செந்தமிழும் நா பழக்கம் " எதையும் மனம் வைத்து ஆர்வமாக அதில் ஊன்றினால் அது சுலபமாகி விடும். ராமாயணம் இப்பொது திரு சிவகுமாருக்கு இலக்கு பட்டிமன்றதுக்கு இவர் தயார் ?
Rate this:
Share this comment
Cancel
sivakumar ramamirdham - Qin Huang Dao,சீனா
19-பிப்-201701:41:21 IST Report Abuse
sivakumar ramamirdham Manitharul manikkam
Rate this:
Share this comment
Cancel
Hariganesan Sm - uthamapalayam,இந்தியா
07-பிப்-201711:34:38 IST Report Abuse
Hariganesan Sm சிவகுமாரை பற்றி உலகுக்கே தெரியும். இவருக்குள்ளும் இத்தனை விஷயங்கள் புதைந்து கிடைக்குதா என்றால், அது வெளிக் கொணரும் போது பாராட்டிதான் ஆகவேண்டும். இன்னும் அவரது முயற்சிகள் தொடரவேண்டும். -ஹரி உ.பாளையம்.
Rate this:
Share this comment
Cancel
Endless - Chennai,இந்தியா
01-பிப்-201720:13:16 IST Report Abuse
Endless ஐயா சிவகுமார் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்..... அவரது தமிழ் சேவை தொடரட்டும் ....
Rate this:
Share this comment
Cancel
Siddharthan - Chennai,இந்தியா
31-ஜன-201713:55:48 IST Report Abuse
Siddharthan ராமாயணம் தமிழர்களிடம் ஆரியத்தை பரப்புவதற்காக உயர்த்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சி ... இதில் தமிழர்கள் பண்பாட்டு அடிமைகளானதுதான் மிச்சம் .... இன்னமும் ராமாயணமும் பாரதமும் படிப்பதை விட்டுவிட்டு தமிழர்களின் வரலாற்றை ஆய்வு செய்ய முயற்சி செய்யுங்கள் ... தமிழர்களை வரலாற்று முட்டாள்களாக்கியது போதும் ....
Rate this:
Share this comment
தாமரை - பழநி,இந்தியா
31-ஜன-201721:09:29 IST Report Abuse
தாமரை ஆமாம் சித்தார்த்தன் அவர்களே ...உங்களது பெயரே எங்கோ வடநாட்டுப் பெயர்போல இருக்கிறதே. ராமாயணத்தைக் குறை கூறுவதை விட ஆங்கிலப் புத்தாண்டுக்கு கொண்ட்டாட்டம் என்ற பெயரில் அடிக்கும் கூத்தை நிறுத்த ஆதரவு கொடுங்கள். காதலர் தினம் என்ற கண்றாவியை தடுக்க ஆதரவு கொடுங்கள்.அன்னையர் தினம் தந்தையார் தினமெல்லாம் கொண்டாடுவதை விட்டு நம் தமிழர் பண்பாடான கூட்டுக குடும்பத்தை பிரபலப்படுத்துங்கள்....
Rate this:
Share this comment
Vijay - India,இந்தியா
01-பிப்-201708:40:19 IST Report Abuse
Vijay@ Siddharthan மொழி வெறியால் அழிவை தேடும் மாநிலத்தில் தமிழ்நாடு முதல் இடம் வகிக்கிறது. ராமாயணம், பாரதம் நடந்ததற்கான ஆதாரங்கள் இன்றும் இந்தியாவில் உண்டு. ராமாயணம், பாரதம் படித்ததால்....தெலுங்கர்கள், மலையாளிகள், கன்னடர்கள், வட நாட்டவர்கள் எல்லோரும் அடிமை ஆகி விட்டார்களா? நீங்களும் உங்கள் கருத்தும். நல்ல வேலை....இது போன்ற கருத்துகலாய், தமிழ் மொழி வெறி youtube வீடியோக்களை யாரும் மொழி பெயர்பதில்லை. இல்லை எனில், இந்தியா முழுவதும்...தமிழ்நாட்டின் மானம் பட்டொளி வீசி பரவும்...
Rate this:
Share this comment
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
02-பிப்-201714:31:37 IST Report Abuse
திண்டுக்கல் சரவணன்கம்பருக்கு தெரியாத விசயம் சித்தார்த்தனுக்கு தெரியறது பெரிய ஆச்சர்யம் தான். எந்த வரலாற்று புத்தகத்தில் நீங்கள் கூறிய கருத்து உள்ளது...
Rate this:
Share this comment
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
26-பிப்-201713:48:56 IST Report Abuse
தமிழ்வேள்சித்தார்த்தன் சொன்னது என்ன தவறு? உங்களுக்கு பிடித்தால் படியுங்கள்....
Rate this:
Share this comment
Chanakya - Chennai,இந்தியா
02-மார்-201708:10:32 IST Report Abuse
Chanakyaசித்தார்த்தன் மற்றும் செம்பியன், ஆரியன் திராவிடன் எனும் கட்டுக்கதைகள் ஹிந்துக்களை பிரித்து ஆளவும் மத மாற்றவும் பிரிட்டிஷ் காரன் செய்த வேலை. திருவள்ளுவர் திருக்குறள் 1103 இல் வள்ளுவர் தாமரை கண்ணன் என கிருஷ்ணனை தன் கடவுளாக கூறுகிறார். சங்க இலக்கிய கடவுளாக திருமாலாகிய கண்ணனையும் ராமனையும் பல இடங்களில் கூறுகிறது. புறநானூற்ற்றிலும், தொல் காப்பியத்தில், மாயோன், சேயோன், செங்கண் மால் என உண்டு. தமிழ் தலைவன் பேயாழ்வார்க்கு தெரியாதது உங்களுக்கு எல்லாம் தெரிந்து விட்டதோ? ஆரியமும் கிடையாது, திராவிட மண்ணாங்கட்டியும் கிடையாது....
Rate this:
Share this comment
vadivelu - chennai,இந்தியா
07-மார்-201707:19:13 IST Report Abuse
vadiveluஇந்துவாக இருக்க நினைப்பவன் இதை மறுக்க வேண்டும்.துணிந்து எதிர்க்க வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
Ramaswamy Sundaram - Mysore,இந்தியா
31-ஜன-201712:49:41 IST Report Abuse
Ramaswamy Sundaram கம்ப ராமாயணத்தின் சுவை அனுபவித்தவர்களுக்கே புரியும்....தமிழில் கம்பனின் சொல்லாட்சி கண்டு பிரமித்து போவீர்கள்.... ஒரே ஒரு சாம்பிள் ..."ராமன் அகலிகைக்கு சாப விமோசனம் கொடுக்கிறான்.....அவனது பாதம் பட்டு அகலிகை கல்லாக இருந்தவள் உயிர்த்து எழுகிறாள்...விஸ்வாமித்ரர் ராமனின் பெருமையை வியந்து போற்றுகிறார்....அந்த பாடல்... இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம் இனி இந்த உலகுக்கு எல்லாம் உய்வண்ணம் அன்றி மற்றோர் துயர்வண்ணம் உருவதுண்டோ....மைவண்ணத்து அண்ணலே.....உன் கை வண்ணம் அங்கு கண்டேன்....கால் வண்ணம் இங்கு கண்டேன்/" இந்த பாடலில் கம்பன் பயன்படுத்தும் வண்ணம் என்ற ஒரு சொல்லுக்கு ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பொருள் வருவது அற்புதம்...இவ்வண்ணம் ...இதுபோல....நிகழ்ந்த வண்ணம்.....நடந்த உடனே...உய்வண்ணம் அன்றி....உயர்வே அன்றி....துயர்வண்ணம்.....துயர் உறும் நிலை....மைவண்ணத்து அண்ணலே....கருமை நிறம் கொண்ட ராமா (இந்த ஒரு இடத்தில் தான் நமக்கு எல்லாம் பரிச்சயமான வண்ணம் என்றால் நிறம் என்கிற அர்த்தத்தில் பயன்படுத்தி உள்ளார் கம்பர் பெருமான்) கைவண்ணம்..... கைத்திறமை...... கால்வண்ணம்..... காலின் மகிமை ...இப்படி அநேகம் உதாரணங்களை சொல்லிக்கொண்டே இருக்கலாம் ....கம்பராமாயண பாடல்களின் இனிமையை.....சிவகுமார் கொடுத்த சி டி எங்க கிடைக்கும் என்ற விபரம் கொடுக்கப்படவில்லை.....தெரிந்த அன்பர்கள் பகிர்ந்தால் நன்றி உடைவனாக இருப்பேன்
Rate this:
Share this comment
கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
01-பிப்-201708:41:27 IST Report Abuse
கதிரழகன், SSLCஇந்த மாதிரி ஒரே பதம் பல முறை வந்து, ஒவ்வொரு முறையும் வேறொரு பொருள் தந்தால் அந்த அணிக்கு பெயர் மடக்கணி. பொதுவாக சங்கரருக்கு மாறுதலை செய்யுள் சொல்லுவார்கள். இது இன்னொரு எடுத்துக்காட்டு....
Rate this:
Share this comment
Cancel
GPV - Chennai,இந்தியா
31-ஜன-201711:41:57 IST Report Abuse
GPV தமிழன் தமிழன் என்று மார் தட்டி கொள்ளும் அனைவரும் தமிழ் இலக்கிய நூல்களை வாங்கவும் மற்றும் வாசிக்கவும் நம் குழந்தைகளுக்கும் கற்று கொடுக்கவும் இதுவே நாம் தமிழுக்கு செய்யும் மிகச்சிறந்த தொண்டு
Rate this:
Share this comment
தாமரை - பழநி,இந்தியா
31-ஜன-201721:14:15 IST Report Abuse
தாமரை டமிளைக் கற்றுக் கொடுக்க நம்ம தமிழ் மம்மி டாடிகளுக்கு கொஞ்சமும் விருப்பமில்லை மிஸ்டர் ' GPV ' அவர்களே....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை