இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்..| Dinamalar

இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்..

Added : பிப் 02, 2017 | கருத்துகள் (17)
Advertisement

மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்துள்ள குக்கிராமம் பள்ளக்காபட்டி.முன் எப்போதும் இல்லாத அளவிற்கு மக்களாலும் சோகத்தாலும் நிரம்பி வழிந்தது.

அதற்கு காரணம் இந்த கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் சுந்தரபாண்டியன் (26) உடல் அடக்கம் நடைபெற்றதால்.

கடந்த 27ம் தேதி காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழக வீரர்களில் இவரும் ஒருவர்.

நிறைமாத கர்ப்பிணியான மனைவி சுகப்பிரியாவிடம் உன்னை பார்க்கத்தான் வந்துகொண்டு இருக்கிறேன் இன்னும் நான்கு நாட்களுக்குள் உன்னிடம் வந்துவிடுவேன் என்று பாசத்துடன் பேசிவிட்டு ராணுவ முகாமைவிட்டு கிளம்புவதற்கு ஒரு சில மணி நேரத்திற்கு முன்பு ராணுவமுகாம் மீது விழுந்த பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தார்.

இவரது இறப்பு பள்ளக்காபட்டியை மட்டுமின்றி, சுற்றுவட்டார கிராம மக்களிடமும் கடும் சோகத்தை உண்டாக்கியுள்ளது. காரணம், சுந்தரபாண்டியனின் நாட்டுப்பற்றும், ராணுவ பக்தியும்தான்.

ராணுவத்தை பற்றி சரிவர அறிந்திராத விவசாய கிராமமான பள்ளக்காபட்டியில் இருந்து முதன்முதலில் ராணுவத்தில் சேர்ந்தவர் இவர்தான். கடந்த 2010ல் சேர்ந்த இவர், தனது கிராமத்து இளைஞர்கள் பலரையும் ராணுவ வீரர்களாக்க ஊக்குவித்துள்ளார்.

ஒவ்வொரு முறை விடுமுறைக்கு வரும்போதும், ராணுவத்தில் சேர்வதற்கான பயிற்சி கையேடுகளை இளைஞர்களுக்கு கொடுத்து படிக்கும்படி கூறியுள்ளார். மேலும் ஓட்டப்பந்தயம், மலையேற்றம், புல் அப்ஸ் உள்ளிட்ட பயிற்சிகளை தானே முன்னின்று சொல்லி கொடுத்துள்ளார்.

தனது கிராமத்தில் சிறிய விளையாட்டு மைதானம், உடற்பயிற்சி திடல் அமைத்து, விடுமுறையில் ஊருக்கு திரும்பும்போது ஓடும் பயிற்சி, கயிறு ஏறும் பயிற்சி உள்ளிட்ட உடல் வலுவூட்டும் பயிற்சிகளை வழங்கி உள்ளார்.

இதன் காரணமாக பள்ளக்காபட்டி, அனுப்பபட்டி, மேல உரப்பனூர், கரடிக்கல் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 40 இளைஞர்கள் தற்போது ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றனர். 7 பேர் மத்திய ரிசர்வ் போலீசாகவும், 3 பேர் மத்திய தொழில் பாதுகாப்பு படையிலும் பணியில் உள்ளனர். இவ்வாறு தனது கிராமத்தையும், சுற்றியுள்ள கிராமங்களையும் ராணுவ கிராமமாகவே சுந்தரபாண்டியன் மாற்றி நாட்டிற்கும் பிறந்த கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

அவரது உடல் இன்றுதான் ராணுவ விமானம் மூலமாக மதுரை வந்து பின் பள்ளாக்காபட்டிக்கு எடுத்துச் செல்லப்பட்டு ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.அப்போது உயிர்தியாகம் செய்த தங்கள் ஊர் சுந்தரபாண்டியனுக்காக ஊரே அழுதது.

அவரது உடல் மீது போர்தப்பட்டிருந்த தேசியக் கொடியை மூத்த ராணுவ அதிகாரிகள் சுந்தரபாண்டியன் மனைவி சுகப்பிரியாவிடம் வழங்கினர்.அதை பெற நீட்டிய சுகப்பிரியாவின் கைமுழுவதும் வளைகாப்பு நடத்தியதற்கான புதுவளையல்கள்...

-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Veeru Veeran - nagpur,இந்தியா
10-ஏப்-201714:30:08 IST Report Abuse
Veeru Veeran படிக்கும் போதே கண்ணீர் வருகிறது என்கண்ணில் ..
Rate this:
Share this comment
Cancel
R.Rubiya - chennai,இந்தியா
11-பிப்-201707:38:57 IST Report Abuse
R.Rubiya சுந்தரபாண்டியன் உயிர் உடலை விட்டு பிரிந்தாலும் அவர் அவ்வூர் மக்கள் மற்றும் இளைஞர்களின் மனதில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார் .
Rate this:
Share this comment
Cancel
Cheran - Chicago,யூ.எஸ்.ஏ
09-பிப்-201700:33:27 IST Report Abuse
Cheran Salute Brother - You are great .. no words to tell about your sacrifice to this nation.
Rate this:
Share this comment
Cancel
Ramesh - Fremont-California,யூ.எஸ்.ஏ
08-பிப்-201712:36:03 IST Report Abuse
Ramesh வாசகர்கள் ஒரு நண்பர்கள் குழுவாக இணைந்து இது போன்ற குடும்பங்களுக்கு ஒரு நல்ல பொருள் உதவி செய்திட முன் வர வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
arudra1951 - Madurai,இந்தியா
08-பிப்-201705:35:30 IST Report Abuse
arudra1951 நானும் ஒரு முன்னாள் படை வீரர்களில் ஒருவன். இவர் செய்த தியாகத்தால் இந்த நாடு நல்லா இருக்கும் ஆனால் இவரோட குடும்பம் நல்லா இருக்காது என்பதுதான் நிஜம். அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய பணத்தை பெற இவரின் மனைவி என்ன பாடு படப்போகிறார் என்பதை நினைத்து மிக வருத்தமாய் இருக்கிறது
Rate this:
Share this comment
Cancel
RAMASUBRAMANIAN - chennai,இந்தியா
07-பிப்-201717:18:48 IST Report Abuse
RAMASUBRAMANIAN PRAYING GOD FOR HIS SOUL IN PEACE AND PROUD TO BE AN INDIAN MILITARY MAN, SALUTE AND HE WILL BORN AGAIN AS SON OF BHARAT MADHA AND LONG LIVE EVER
Rate this:
Share this comment
Cancel
BALAMURUGAN - Madurai,இந்தியா
06-பிப்-201710:16:30 IST Report Abuse
BALAMURUGAN ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்...
Rate this:
Share this comment
Cancel
மதுரை விருமாண்டி - சான் ஹோஸே, கலிபோர்னியா ,யூ.எஸ்.ஏ
05-பிப்-201703:09:06 IST Report Abuse
மதுரை விருமாண்டி காஷ்மீருக்கு அனுப்பாமே, இந்த தமிழ் வீரர்களை தமிழக கடல் எல்லையில் வைத்தால் மீனவர் உயிர் போகுமா, இல்லை கச்சத்தீவு தான் கைவிட்டு போயிருக்குமா?
Rate this:
Share this comment
Cancel
V FIDEL CASTRO - chennai,இந்தியா
04-பிப்-201717:28:21 IST Report Abuse
V FIDEL CASTRO நூற்று இருபது கோடி மக்களுக்கு பாதுகாப்பு கொடுத்து உயிர் தியாகம் செய்து உள்ளார் அவர் புகழ் என்றும் மறையாது .
Rate this:
Share this comment
Cancel
annaidhesam - karur,இந்தியா
04-பிப்-201712:30:09 IST Report Abuse
annaidhesam ஆன்மா சாந்தியடையட்டும்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை