ஒரு யானை காப்பாற்றப்பட்ட போது...| Dinamalar

ஒரு யானை காப்பாற்றப்பட்ட போது...

Updated : பிப் 02, 2017 | Added : பிப் 02, 2017 | கருத்துகள் (18)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

ஒரு யானை காப்பாற்றப்பட்ட போது...ரயிலில் அடிபட்டு,மின்கம்பியில் சிக்கி,குழு சண்டையில் சிக்கி யானை இறந்தது என்று வழக்கமாகவரும் செய்தியைப் பார்த்து, படித்து கஷ்டப்பட்ட மனசுக்கு ஊரே கூடி ஒரு யானையை காப்பாற்றிய இந்த நிஜக்கதை கொஞ்சம் மனதிற்கு ஆறுதலாக இருக்கும்...
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை வட்டம் ஊடே துர்க்கம் பகுதியில் கடந்த சில நாட்களாக முகாமிட்டிருந்த யானைக்கூட்டம், நள்ளிரவில் உணவு தேடி அலையும் போது தவறுதலாக முத்தம்பட்டி கிராம திறந்த கிணற்றில் விழுந்துவிட்டது.எட்டு வயதான அந்த பெண் யானையின் பிளிறல் சத்தம் கேட்டு அதிகாலை அங்கு வந்த கிராமத்தினர், யானையை குழிக்குள் இருந்து காப்பாற்றும் வழி தெரியாது தவித்தனர்.

முதல்கட்டமாக அதற்கு தேவையான கரும்பு,வாழை போன்ற உணவையும் தண்ணீரையும் கொடுத்தனர்.,ஆனால் எதையும் தொடமறுத்த யானை குழியைவிட்டு தப்பிப்பதற்காக கிணற்றின் நாலாபக்கமும் ஒடிப்போய் ஏறிப்பார்த்து, ஏறமுடியாததால் தன் தலையை மண் தரையில் திரும்ப திரும்ப முட்டிக்கொண்டது.தன் கூட்டத்தோடு போய்ச் சேரமுடியாத மனவலியும்,குழியைவிட்டு வெளியே வரமுடியாத இயலாமையும்,அதுதந்த வேதனையும் யானையின் முட்டலில் வெளிப்பட்டது.


இதற்குள் தகவலறிந்த மாவட்ட சப்-கலெக்டர்,வனத்துறையினர்,தீயனைப்பு துறையினர் அனைவரும் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.கிணற்றுக்கு சேதாரம் இல்லாமல் 'பெல்ட்' கட்டி ஜேசிபி எந்திரம் மூலமாக யானையை காப்பாற்றலாம் என நினைத்தனர். ஆனால் யானையின் ஆக்ரோசத்தை பார்த்து அது முடியாத என்ற நிலையில் கிணற்றின் பக்கவாட்டுப்பக்கம் யானை வெளியேறுமளவிற்கு குழிதோண்டி பாதையமைப்பது என்று முடிவெடுத்தனர்.
இந்த முடிவிற்கு கிணற்றின் உரிமையாளரான விதவைப் பெண் ரோஜா உடன்படவில்லை. 'ஐயா நான் கணவனை இழந்தவள், இந்த கிணற்றையும் இதையொட்டிய விவசாயத்தையும் நம்பித்தான் நானும் என்று மூன்று பிள்ளைகளும் வாழ்கிறோம்,கிணற்றை சேதப்படுத்தினால் பின் தண்ணீர் சேராது, நான் பிழைக்கமுடியாது' என்று கதறியபடி கூறினார்.


'இல்லைம்மா கிணறை பழையபடி மூடிக்கொடுப்பது என் பொறுப்பு' என சப்-கலெக்டர் செந்தில்ராஜ் சொல்ல..'அப்படித்தான்யா சொல்வீங்க நான் கணவனை இழந்து நான்கு வருடமாக அதற்கான சான்றிதழையும் விதனை பென்ஷனும் கேட்டு அலையறேன் இதோ தருகிறேன் என்று சொல்வார்களே தவிர தரமாட்டேன் என்கிறார்கள்,கிணற்றின் நிலமையும் அப்படி ஆகிவிடக்கூடாதுங்கய்யா' என்றார்.
'என்னை நம்பும்மா' என்று சப்-கலெக்டர் கூறிய வார்த்தையில் இருந்த உறுதியை நம்பி அந்த பெண் விலகிவழிவிட ஐந்திற்கும் மேற்பட்ட ஜேசிபி மண் அள்ளும் எந்திரங்கள் அசுர வேகத்தில் செயல்பட்டது. துாரத்தில் ஆரம்பித்த குழி கொஞ்சம் கொஞ்சமாக கிணற்றின் அடிவரை கொண்டு செல்லப்பட்டது.


கிணற்றை சுற்றி நின்ற கூட்டத்தையும் எந்திரங்களின் ஒசையையும் சத்தத்தையும் கேட்டு முதலில் மிரண்ட யானை, பின் நம்மை காப்பாற்றத்தான் இவ்வளவு வேலையும் என்பதை தெரிந்து கொண்டது போல போகப்போக சாந்தமாகியது.
தன்னால் ஏற முடியும் என்ற நிலையில் வழி கிடைத்ததும் குடு குடுவென ஒடி ஏறி உருண்டு புரண்டு புதிய பாதையின் வழியாக வெளியேறி சமதளத்திற்கு வந்தது.பின் மொத்த கூட்டத்தினரை திரும்பி ஒரு பார்வை பார்த்தது அந்த பார்வையில் நிறையவே நன்றி தெரிந்தது.பின் என் பாதையும், என் கூட்டம் எங்கு இருக்கிறது என்ற வாசனையும் எனக்கு புலப்பட்டுவிட்டது என்று சொல்லும் விதத்தில் தெளிவாக காட்டுப்பகுதிக்குள் நடந்து சென்றது.காலை பத்து மணிக்கு ஆரம்பித்து மாலை ஐந்து மணியளவில் கிட்டத்தட்ட ஏழு மணி நேரம் நடந்த இந்த ஆபரேஷன் வெற்றிகரமாக முடிந்ததில் அவைருக்கும் மகிழ்ச்சி.இந்த இடைப்பட்ட நேரத்தில் சப்-கலெக்டர் உத்திரவின் காரணமாக நான்கு வருடமாக நிலுவையில் இருந்த விதவைப்பெண் ரோஜா கேட்ட சான்றிதழ் தயராகியிருந்தது.அதை ரோஜாவின் கையில் கொடுத்த சப்-கலெக்டர் இரண்டொரு நாளில் கிணற்றையும் சரிசெய்து தருகிறேன் என்று சொல்லிவிட்டு சென்றார்.
ரோஜா கண்ணீர் மல்க யானை போன திசையை பார்த்து கும்பிட்டார்.


நன்றி:படங்கள் மற்றும் தகவல் திரு.டி.ஜி.மூர்த்தி.
-எல்.முருகராஜ்

murugaraj@dinamalar.in

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vidhura - chennai,இந்தியா
05-ஏப்-201718:47:20 IST Report Abuse
vidhura நல்ல வேளை அந்த யானையின் கால்களுக்கு ஒன்று ஆகாமல் பிழைத்தது . ஏதாவது ஆகியிருந்தால் காப்பாற்றியும் பிரயோஜனம் இன்றி போகியிருக்கும் ..
Rate this:
Share this comment
Cancel
Rangarajan Pg - CHENNAI,இந்தியா
02-ஏப்-201712:18:24 IST Report Abuse
Rangarajan Pg யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்று சும்மாவா சொன்னார்கள். இந்த யானை உயிருடன் வெளியேற உதவி செய்த அந்த அரசு அதிகாரிகளுக்கும்ம க்களுக்கும் நன்றிகள் பல. இதை போன்ற நல்ல நிகழ்வுகள் நம் வருங்காலத்தில் மேல் நம்பிக்கை ஊட்டுகிறது.
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
25-மார்-201708:32:10 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> கிராமன்ட்களில் ஓபன் கிணறுகள் ரொம்பவே அதிகம் கிணறு தோண்டுவாங்க ஆனால் அதற்கு மூடி போடணும்னு விழிப்புணர்வே இல்லீங்களே ஆல் இந்திய கிணர்களுக்குமே இதே அவலம்தான் ஆணைக்கு ஆயுள் கெட்டி பிழைச்சது மறிச்ச மனுஷ உசிருக்கள் எவ்ளோ gok
Rate this:
Share this comment
Cancel
kc.ravindran - bangalore,இந்தியா
17-மார்-201713:16:25 IST Report Abuse
kc.ravindran அந்த கணேசன் இவர்கள் அனைவரையும் அருள் புரியட்டும். அந்த விதவையின் துன்பத்தை துடைக்க வந்த திருவிளையாடலோ?
Rate this:
Share this comment
Cancel
BHAVANI - Chennai,இந்தியா
01-மார்-201716:31:01 IST Report Abuse
BHAVANI இன்றும் நம்முடன் கடவுள் இருந்து காலத்துடன் பயணிக்கிறார் முருகனாக, விநாயகராக, சிவனாக சக்தியாக நம்பினோர் கை விட படார்.
Rate this:
Share this comment
Cancel
Vakkeel VanduMurugan - Phoenix, Arizona,யூ.எஸ்.ஏ
06-பிப்-201704:43:44 IST Report Abuse
Vakkeel VanduMurugan அந்த விநாயகரே யானை வடிவில் வந்து, அந்த சான்றிதழை ஏழை பெண்ணுக்கு வாங்கி கொடுத்தார்.
Rate this:
Share this comment
raghavan - Srirangam, Trichy,இந்தியா
06-பிப்-201714:09:21 IST Report Abuse
raghavanகடவுள் நேரில் வந்தால்தான் ஒரு சான்றிதழ் கூட பெற முடியும் என்று சொல்லவருகிறீர்களா?...
Rate this:
Share this comment
பஞ்ச்மணி - கோவை,இந்தியா
28-பிப்-201721:22:17 IST Report Abuse
பஞ்ச்மணிநம்பள நாமே அசிங்கபடுத்திக்கற கொள்கை ரொம்ப அற்புதம். எதுக்குமே ஒரு குதர்கமான பார்வை அருமை நன்பரே...
Rate this:
Share this comment
Cancel
jagan - Chennai,இந்தியா
05-பிப்-201708:15:48 IST Report Abuse
jagan பிள்ளையார் நேரில் வந்து அந்த அம்மாவுக்கு சான்றிதழ் வாங்கி தந்துள்ளார் ....
Rate this:
Share this comment
Cancel
Jerome A - Karaikal,இந்தியா
04-பிப்-201711:57:31 IST Report Abuse
Jerome A படிக்கும் போதே இனிமையாக இருந்தது.. நல்ல நிகழ்வு..
Rate this:
Share this comment
Cancel
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
04-பிப்-201709:40:37 IST Report Abuse
Rangiem N Annamalai அழகு அருமை .நன்றிகள் அதிகாரிகளுக்கும் ,யானைக்கும்,கிணற்றின் உரிமையாளருக்கும் உரித்தாகுக .இந்த மக்களால் தான் மழை பெய்கிறது என வள்ளுவர் கூறி உள்ளார் .
Rate this:
Share this comment
Cancel
mpvijaykhanna - dindigul,இந்தியா
03-பிப்-201719:11:28 IST Report Abuse
mpvijaykhanna great action done by our officials
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை