திருமீயச்சூர் கோவில் தேரோட்டம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

திருமீயச்சூர் கோவில் தேரோட்டம்

Updated : பிப் 05, 2017 | Added : பிப் 03, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருவாரூர்: திருவாரூர், பேரளம் அருகே, திருமீயச்சூர் லலிதாம்பாள் சமேத மேகநாத சுவாமி கோவில் தேரோட்டம் நடந்தது. திருவாரூர் மாவட்டம், பேரளம் அருகே, திருமீயச்சூரில், வேளாக்குறிச்சி ஆதீனத்திற்கு சொந்தமான, லலிதாம்பாள் சமேத மேகநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலின் பிரம்மோற்சவம், கடந்த 24ல், விக்னேஸ்வரர், வாஸ்து சாந்தி பூஜைகளுடன்துவங்கியது. பிரதான உற்சவமான தேரோட்டத்தை முன்னிட்டு, மேகநாத சுவாமி, லலிதாம்பாள், விநாயகர், சண்டிகேஸ்வரர், வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியர் உற்சவர்கள், நேற்று முன்தினம் இரவு, தேரில் எழுந்தருளினர். வேளாக்குறிச்சி ஆதீனகர்த்தர் சத்தியஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், வடம்பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தார். பக்தி கோஷங்களுடன் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி வழியாக, மாலையில், தேர் நிலையை வந்தடைந்தது.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை