பாதி 'சைலண்ட்'...பாதி 'வயலன்ட்' - ஷாலின் ஜோயாவின் நிஜம்| Dinamalar

பாதி 'சைலண்ட்'...பாதி 'வயலன்ட்' - ஷாலின் ஜோயாவின் நிஜம்

Added : பிப் 05, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பாதி 'சைலண்ட்'...பாதி 'வயலன்ட்' - ஷாலின் ஜோயாவின் நிஜம்

வானவில் வாசிக்கும், வண்ணங்களின் வருகை பதிவேட்டில் உன் பெயரும் இருக்கிறது... தேன்சிட்டுக்கள் ருசிக்க தேடும் பூவிதழ்களில் உன் இதழும் இனிக்கிறது, நீளவானில் நீந்தும் மேகங்களில் உன் தேகத்தின் மென்மைகள் மிதக்கிறது, ஜில்லென சிலிர்க்கும் நைல் நதியும் உன் நிழல் விழுந்ததில் கொதிக்கிறது... என, கவிதையாய் தவழ்ந்து தமிழ் சினிமாவுக்கு வந்த நடிகை ஷாலின் ஜோயா. பெயரே வித்தியாசமாக உள்ளது. அவரது பளிச் நிமிடங்கள் இதோ...* அழகின் அறிமுகம்...பிறந்து வளர்ந்தது கேரளா, நிறைய மலையாள படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறேன்.* தமிழில் ஹீரோயினாக...தமிழில் 'ராஜா மந்திரி' படம் தான், நான் ஹீரோயினாக அறிமுகமான முதல் படம்.* யாருடைய கண்டுபிடிப்பு...'ராஜா மந்திரி' படத்தின் இயக்குனர் உஷா, ஏதோ ஒரு நிகழ்ச்சியில் என்னை பார்த்து, அவரது கதைக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று, கேரளாவிற்கே வந்து என்னை தேடி கண்டுபிடித்து 'கோலிவுட்'டுக்கு அழைத்து வந்தார்.* ஷூட்டிங் அனுபவங்கள் ?ஹீரோ கலையரசன், காமெடி காளி வெங்கட், தோழி வைஷாலி... இப்படி ஒவ்வொருவரும் நல்லா பழகுனாங்க, மகிழ்ச்சியான நிமிடங்களாய் கழிந்தது.* கேமரா பயம் ?கேமராவும், நடிப்பும் எனக்கு புதுசு இல்லையே, ஏற்கனவே நான் நடிச்சிருக்கேனே...* பிடித்த கோலிவுட் நடிகர்கள்...ரஜினி, கமல்ஹாசன், ஜோதிகா, நயன்தாரா... இப்படி சொல்லிக்கிட்டே போகலாம்...* நடிக்க விரும்பும் கேரக்டர்...சினிமாவுல நானும் நடிக்கிறேன்னு ஏதோ ஒரு சீன்ல வந்து போற நடிகையா நான் இருக்கமாட்டேன். ஹீரோயின் முக்கியத்துவம் உள்ள 'வெரைட்டி' கேரக்டர்களில் மட்டுமே நடிக்க விருப்பம்.* ரியல் லைப் ஷாலின்...ரியல் லைப்ல நான் பாதி 'சைலன்ட்', பாதி 'வயலன்ட்'. திடீர்ன்னு ஒரு குழந்தையா கூட மாறிடுவேன்...* சமீபத்தில் பார்த்து ரசித்த படம் ?கேரளாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில், நம்ம ஹீரோ விஜய்சேதுபதி தயாரித்து, வெளியான 'மேற்கு தொடர்ச்சி மலை', அந்த கால 'பிளாக் அன் ஒயிட்' மலையாள படம், பிலிபைன்ஸ் நாட்டின் 'கிளாஸ்'... ஒரு நாள் முழுக்க படம் பார்க்க சொன்னா கூட பார்த்துட்டே இருப்பேன்.* ரசிகர்கள் என்ன சொல்றாங்க...தமிழ் படத்தில் அறிமுகமானதுல ரொம்ப ஹேப்பி. 'பேஸ்புக்', 'டிவிட்டர்'ன்னு ரசிகர்கள் நல்ல 'ரெஸ்பான்ஸ்' கொடுக்குறாங்க.* உங்கள் நடிப்பில் அடுத்து...ஹூம்ம்... நான் கொஞ்சம் குண்டா இருக்குறதால இப்போ 'வெயிட் லாஸ்' பண்றதுக்கு 'பிட்னஸ் டிரைனிங்'ல இருக்கேன். சீக்கிரமே 'ஸ்லிம்' ஷாலினா என்னை திரையில் பார்க்கலாம்...

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X