கலசம் வழங்கி பதவியை இழந்த ஓ.பி.எஸ்., | கலசம் வழங்கி பதவியை இழந்த ஓ.பி.எஸ்., தொடரும் தி.மலை கோவில் 'சென்டிமென்ட்' Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
கலசம் வழங்கி பதவியை இழந்த ஓ.பி.எஸ்.,
தொடரும் தி.மலை கோவில் 'சென்டிமென்ட்'

திருவண்ணாமலை:அருணாச்சலேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு கலசம் வழங்கிய, முதல்வர் பன்னீர்செல்வம், பதவியை இழந்துஉள்ளதால், 'சென்டிமென்ட்' தொடர்வதாக கூறப்படுகிறது.

கலசம் வழங்கி பதவியை இழந்த ஓ.பி.எஸ்., தொடரும் தி.மலை கோவில் 'சென்டிமென்ட்'

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு அரசியல்வாதிகள் வந்து சென்றால் பதவி பறிபோகும் என்பதால், மறைந்த முதல்வர் ஜெயலலிதா, இந்த கோவிலுக்கு வருவதை தவிர்த்து வந்தார்.

கடந்த, 2011 அ.தி.மு.க., ஆட்சியில், அமைச்சராக, 'அக்ரி' கிருஷ்ணமூர்த்தி பதவியேற்ற முதல் ஆண்டு, அருணாச்சலேஸ்வரர் கோவில் தீபத்திற்கு வந்து சென்றார். மறு ஆண்டு தீபத் திருவிழா வருவதற்குள், அவர் அமைச்சர்

பதவியை இழந்து, நெல்லை வேளாண் அதிகாரி தற்கொலை வழக்கில் சிக்கி, சிறையிலும் அடைக்கப்பட்டார்.

இதேபோல், அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு வந்து சென்ற முன்னாள் அமைச்சர்கள்ஆனந்தன், கோகுல இந்திரா ஆகியோரும், அமைச்சர் பதவியை இழந்தனர்.

முன்னாள் அமைச்சர்


இதனால், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த, அ.தி.மு.க.,வின், முக்கூர் சுப்பிரமணியன், தான் அமைச்சராக இருந்த காலத்தில் அருணாச் சலேஸ்வரர் கோவிலுக்கு வருவதை தவிர்த்து வந் தார். இவர் தொடர்ந்து, மூன்றரை ஆண்டுகள் அமைச்சராக நீடித்தார்.
தி.மு.க., முன்னாள் அமைச் சர் பிச்சாண்டி, இந்த கோவிலுக்கு வருவதை வழக்க மாக கொண்டவர். அவர் தயவால், தி.மு.க.,வில் இணைந்த, எ.வ.வேலுவிடம்அரசியல் அதிகாரத்தை பறி கொடுத்து விட்டு, தற்போது டம்மியாக உள்ளார்.

Advertisement


அரசியல்வாதிகள் அச்சம்


இதையறிந்த, எ.வ.வேலு, அருணாச்சலேஸ் வரர் கோவிலுக்கு செல்வதை தவிர்த்து விட்டார்.
அருணாச்சலேஸ்வரர் கோவில், 'சென்டி மென்ட்' விஷயத்தில், முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் தப்பவில்லை. அருணாச்சலேஸ் வரர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு, சுவாமி, அம்மன் சன்னிதிக்கு கும்ப கலச நீர் எடுத்து செல்ல, வெள்ளி குடம் வாங்கி கொடுத்தார். நேற்று கும்பாபிஷேகம் நடந்த நிலையில், அதற்கு முன்பாகவே, தன் பதவியை சசிகலா விடம் பறிகொடுத்து விட்டார்.

அருணாச்சலேஸ்வரர் கோவில், 'சென்டி மென்ட்' தொடர்வதால், அரசியல்வாதிகள் இந்த கோவில் பக்கம் எட்டிப் பார்க்கவே அச்சப்படுகின்றனர்.


Advertisement

வாசகர் கருத்து (108)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மு. தணிகாசலம் - கரூர் - ( முகாம் - தும்பிவாடி ),இந்தியா
07-பிப்-201723:56:39 IST Report Abuse

மு. தணிகாசலம் பன்னீர் பதவியை இன்னும் இழக்கவில்லை. அடுத்த மந்திரி சபை அமையும் வரை பன்னீர்தான் முதலமைச்சர். கவர்னரே சொல்லிவிட்டார். அடுத்த மந்திரிசபை அமையாது. நானே நம்பிவிட்டேன். அவளா சொன்னால்? இருக்காது. அப்படி எதுவும் நடக்காது. நடக்கவும் கூடாது. நம்பமுடியவில்லை இல்லை இல்லை.

Rate this:
m.viswanathan - chennai,இந்தியா
07-பிப்-201721:44:29 IST Report Abuse

m.viswanathanதீதும் நன்றும் பிறர் தர வாரா

Rate this:
SSTHUGLAK - DELTA,இந்தியா
07-பிப்-201720:28:39 IST Report Abuse

SSTHUGLAKarulalaa arunachala thamiznaatta kaappatru

Rate this:
மேலும் 105 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X