கவர்னரின் தாமதம் சட்ட விதிமீறல் ஆகாது: சோலி சொரப்ஜி| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கவர்னரின் தாமதம் சட்ட விதிமீறல் ஆகாது: சோலி சொரப்ஜி

Added : பிப் 08, 2017 | கருத்துகள் (19)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
கவர்னரின் தாமதம் சட்ட விதிமீறல் ஆகாது: சோலி சொரப்ஜி

சென்னை: ‛கவர்னர் வித்யாசாகர் ராவ் சகிகலா முதல்வர் ஆவதை தாமதப்படுத்துவது சட்ட விதிமீறல் ஆகாது' என சுப்ரீம் கோர்ட் முன்னாள் அட்வகேட் ஜெனரல் சோலி சொரப்ஜி கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் கூறியதாவது:


திரும்ப பெற முடியாது



தமிழக முதல்வர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்துள்ளார். அவரின் ராஜினாமாவை கவர்னர் வித்யாசாகரும் ஏற்றுகொண்டுள்ளார். பன்னீர்செல்வம் ராஜினாமாவை திரும்ப பெற சட்டத்தில் வாய்ப்பு இல்லை.


கவர்னரிடம் அதிகாரம்

தற்போதைய சூழலில் கவர்னர் தான் அனைத்து முடிவுகளையும் எடுக்க வேண்டும். அதற்குரிய, அதிகாரம் அவரிடம் உள்ளது.அதேசமயம், தற்போதைய சூழலில் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை எம்.எல்.ஏ.,க்களின் ஆதரவு பெற்றுள்ள சசிகலாவை முதல்வரை ஆக்குவது சில சிக்கல்களுக்கு வழி வகுக்கும்.


சட்ட விதிமீறல் ஆகாது


சசிகலாவின் மீதான சொத்து குவிப்பு வழக்கில் பிப்.,10 அல்லது பிப்.,13 ம் தேதி சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளிக்க உள்ளது. இந்நிலையில், சசிகலாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பது அவ்வளவு சரியாக இருக்காது. முதல்வராகிய பிறகு தீர்ப்பு சசிகலாவிற்கு எதிராக வரும்பட்சத்தில் அவர் பதவியை இழக்க நேரிடும். மீண்டும் வேறொருவர் முதல்வர் ஆக்கப்பட வேண்டும். அதனால், கவர்னர் தாமதப்படுவது சரியான நடவடிக்கையாக தான் பார்க்கிறேன். இதில், எவ்வித சட்டவிதிமீறலுக்கும் இடமில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ganesan - Hosur,இந்தியா
09-பிப்-201710:54:05 IST Report Abuse
S.Ganesan கவர்னர் என்ன சசிகலா மாதிரி இவர்கள் வேலைக்காரரா கூப்பிட்டவுடன் வந்து பதவி பிரமாணம் செய்து வைக்க.
Rate this:
Share this comment
Cancel
PRABHU - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
09-பிப்-201710:32:12 IST Report Abuse
PRABHU தமிழ்நாட்டு முதல்வருக்கு டெல்லியில் மும்பையிலும் என்ன வேலை. சென்னையில் இருக்கமுடியதோ.... இவருடைய விமானக்கட்டணம் யார் பணமோ.....
Rate this:
Share this comment
Cancel
Rajathiraja - Coimbatore,இந்தியா
09-பிப்-201709:33:38 IST Report Abuse
Rajathiraja சாமி இது போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X