ஓ.பி.எஸ்.,சுக்கு ரஜினி 'வாய்ஸ்?' | ஓ.பி.எஸ்.,சுக்கு ரஜினி 'வாய்ஸ்?'| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓ.பி.எஸ்.,சுக்கு ரஜினி 'வாய்ஸ்?'

Added : பிப் 09, 2017 | கருத்துகள் (76)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஓ.பி.எஸ்.,சுக்கு ரஜினி 'வாய்ஸ்?'

'சசிகலாவுக்கு எதிராக களம் இறங்கியுள்ள, முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக, நடிகர் ரஜினி வாய்ஸ் தருவார்' என, அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

முதல்வர் பன்னீர்செல்வத்தின் அதிரடி பேட்டி, தமிழக அரசியலில், அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க., தொண்டர்கள், அவர் வீட்டில் குவிந்து வருகின்றனர். மேலும், பல தரப்பில் இருந்தும், ஆதரவு குவிந்து வருகிறது. ஜெ., அண்ணன் மகள் தீபாவுக்கும், பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் திரையுலகிலும், பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு பெருகி வருகிறது.

நடிகர்கள் கமல், டி.ராஜேந்தர், சரத்குமார், அசோக் செல்வன், மன்சூர் அலிகான், நடிகையர் ஸ்ரீப்ரியா, ரஞ்சனி உள்ளிட்டோர், சசிகலாவுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும், எதிர்ப்பு தெரவித்துள்ளனர். நடிகர் ரஜினி, பன்னீர்செல்வத்துக்கு, ஆதரவாக, 'வாய்ஸ்' கொடுப்பார் என, ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது: எப்போதும், அண்டை மாநில அச்சுறுத்தல்களுக்கு ஆளாகிவரும் தமிழகத்திற்கு, தற்போது, தமிழக அரசே அச்சுறுத்தலாகி உள்ளது. ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட, மக்கள் விரும்பும் நபரே முதல்வராக வேண்டும். தேவைப்பட்டால், உண்மைக்கும், ஆன்மிகத்திற்கும் மதிப்பளிக்கும் ரஜினி, முதல்வர் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக, வாய்ஸ் தருவார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raman Ganesan - Madurai,இந்தியா
10-பிப்-201712:33:50 IST Report Abuse
Raman Ganesan ரஜினி ஏன் opsக்கு ஆதரவா ஏன் இன்னும் எதுவும் சொல்லலை எதுக்கு வம்புனு ஒதுங்கறார், தன் படம் ரிலீஸ் ஆகும் சமயம் பிரச்சினை வந்துவிடும் என பயந்து ஒதுங்குகிறார். என்றெல்லாம் சவுண்ட் விடும் பெரும்பான்மையோர்... 1. செவாலியே சிவாஜி விழாவில்.. அதுவும் ஜெ. இருந்த மேடையில் ஜெ.வை இடித்துரைத்து பேசியது... 2. வெடிகுண்டு கலாச்சாரம், மீண்டும் அந்த ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது என்று சொன்னது... 3. திரு. கருணாநிதியின் ஆட்சியின் போது ராமர் பாலம் பற்றி அவர் இருந்த மேடையிலேயே அது பற்றி பேசியது.... சென்னை பெரு மழையின் போது திரு. கருணாநிதி இருந்த அதே மேடையில் மக்கள் கஷ்டப்படுகிறார்கள், முதல்வருக்கு இப்போது அதிக பணி இருக்கும் எனச் சுட்டிக் காட்டி பேசிய போதும்... 4. மிரட்டறாங்கய்யா என அஜீத் சொன்னவுடன்.. தனது பக்கத்து இருக்கையில் முதல்வர் இருக்கிறார் என்பதனை துளியும் சட்டை செய்யாது எழுந்து நின்று கைத் தட்டி அதனை வரவேற்ற போதும், அஜீத் சொன்னது சரி எனத் தொலைக்காட்சியில் அவருக்கு ஆதரவாக பேட்டி அளித்ததையும் மறந்துவிடுகிறார்கள். அப்போதெல்லாம் ஏன் மற்ற நடிகர்கள் அதுப் பற்றி ஏன் குரலெழுப்பவில்லை எனக் கேள்வி கேட்டால்.... துபாயா? அது உசிலம்பட்டிக்கு பக்கத்தில் இருக்கு என பதில் வருகிறது. ரஜினி ரஜினியாகவே இருக்கிறார். உங்களுக்கு முதுகு அரித்தால் ரஜினி சொறிந்து விடமுடியாது
Rate this:
Share this comment
வாழ்க​ பாரதம் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
11-பிப்-201711:04:50 IST Report Abuse
வாழ்க​ பாரதம்ஏன் உனக்குதான் முதுகு சொறிந்துவிடனும் என்று ஒப்பந்தம் போட்டிருக்கிறீர்களா?...
Rate this:
Share this comment
Cancel
வாழ்க​ பாரதம் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
10-பிப்-201700:36:20 IST Report Abuse
வாழ்க​ பாரதம் மானமுள்ள தமிழன் எவரும் அண்டை மாநிலத்தில் இருந்து தமிழரை ஏய்த்து பிழைப்பு நடத்திவந்த நாதாரிகளிடம் உதவி கேட்கமாட்டான். தூங்கிக்கிடந்த சிங்கத்தை இடறி விட்டனர் மன்னார்குடி மாபியா கூட்டம். மக்கள் வெகுண்டெழுந்து அந்த கயவர் கூட்டத்ததை தன சுய முயற்சியாலேயே கொன்று தமிழர் மானத்தை காப்பர். தமிழ் வாழ்க தமிழர் வாழ்க. மற்றவர் எல்லாம் தமிழரின் தயவில் பிழைப்பு நடத்திவிட்டு போங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
09-பிப்-201717:11:03 IST Report Abuse
Nallavan Nallavan இவனோட ஆதரவு இருந்தும் ஒண்ணுதான் ..... இல்லேன்னாலும் ஒண்ணுதான் .....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X