கூவாத்தூர் கோல்டன் பே ரிசார்ட்ஸ்...| Dinamalar

கூவாத்தூர் கோல்டன் பே ரிசார்ட்ஸ்...

Updated : பிப் 09, 2017 | Added : பிப் 09, 2017 | கருத்துகள் (26)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

கூவாத்துார் கோல்டன் பே ரிசார்ட்ஸ்...

இத்தனை நாள் இருக்கும் இடம் தெரியாமல் இருந்த சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கோல்டன் பே ரிசார்ட்ஸ் அடைத்து வைக்கப்பட்ட எம்எல்ஏக்களால் அலறுகிறது.
சென்னையில் இருந்து புதுச்சேரி போக பயன்படும் கிழக்கு கடற்கரை சாலையில் கல்பாக்கத்தை தாண்டியதும் வரக்கூடிய பாலாற்று பாலத்திற்கு பக்கத்தில் ரோட்டின் மீது கோல்டன் பே ரிசார்ட்ஸ் வளைவு வரவேற்கிறது.

வளைவு வரவேற்றாலும் அங்கு இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் துாரம் வயல்காட்டிற்குள் போடப்பட்டுள்ள ரோட்டில் சென்றால்தான் ரிசார்ட்ஸ் வரும்.
கடற்கரையை ஒட்டியுள்ள இந்த பண்ணை ரிசார்ட்ஸில் அனைத்து வசதிகளும் உள்ளன.ஆறாயிரத்தில் ஆரம்பித்து பனிரெண்டாயிரம் ரூபாய் வரை நாள் வாடகை.பெரும்பாலும் வெளிநாட்டினரும் பிரமுகர்களும் இங்கு வந்து அமைதியாக தங்கிசெல்வர்.

இந்த ரிசார்ட்சில்தான் சசிகலா ஆதரவு எம்எல்ஏ.,க்கள் தங்கவைக்கப்பட்டு உள்ளனர்.அவர்கள் நிலைபற்றி அறிய ஒரு விசிட்...
நினைத்தது போல ரிசார்ட்சை நெருங்கிவிட முடியவில்லை.வளைவை தாண்டும் போதே வருபவர்கள் யார் என்ற தகவல் பறக்கிறது.ஆட்சியாளர்கள் கட்சிக்காரர்கள் கார்கள் அணிவகுக்கின்றன.இத்தனை கார்கள் இந்த பகுதியில் பார்த்தது இல்லை என்பதால் உள்ளூர் கிராரம மக்கள் வியப்புடன் மிரட்சியுடனும் பார்க்கின்றனர்.எத்தனை கார்கள் சென்றாலும் அவர்களுக்கு சம்பந்தம் இல்லாத கார் வந்தால் தடுத்து நிறுத்தப்படுகிறது.

அதே போல நமது காரும் தடுத்து நிறுத்தப்பட்டது.ஒரு குறிப்பிட்ட துாரத்தை நமது கார் நெருங்கியதும் திமுதிமுவென தடிதடியான ஆட்கள் மரம் செடி மறைவில் இருந்து வருகின்றனர்.
'ரிசார்ட்ஸ்க்கு போகமுடியாது வந்தவழியாக நீ கிளம்பலாம்' வார்த்தைகளில் மரியாதையும் எரிச்சலும் கோபமும் போட்டியிடுகிறது.

நாம் சொல்லும் கேட்கும் விசாரிக்கும் எதையும் காதில் வாங்கும் நிலையில் இல்லை கூட இருந்த கைத்தடிகள் இன்னும் மோசமான வார்த்தைகளை பிரயோகிக்க ஆரம்பிப்பதற்குள் அங்கு இருந்து வேறு வழியின்றி வந்த வழியாக திரும்பவேண்டி ஏற்பட்டது.
பிறகு ரிசார்ட்சிற்கு போகும் வேறு சில பாதைகளை உள்ளூர் கிராமமக்களின் உதவியுடன் சென்று பார்த்தபோது எம்எல்ஏ.,க்கள் வந்த பஸ்கள் அமைச்சர்கள் பிரமுகர்களின் கார்கள் என்று ரிசார்ட்ஸ் முழுவதுமே பரந்து காணப்பட்டது.

இருட்டும் வரை இருந்து விசாரித்த தகவல்கள் எம்எல்ஏ.,க்கள் சந்தோஷமாக இல்லை என்றே தெரிவித்தது.

இதற்கு முன் விருதுநகரில் சாத்துார் ராமச்சந்திரன் இப்படித்தான் எம்எல்ஏ.,க்களை தனது மில்லில் அடைத்து வைத்திருந்தார்.அது மொபைல் போன் இல்லாத காலம் அதனால் யாருடனும் தொடர்புகொள்ள முடியவில்லை ஆனால் இப்போது மொபைல் உள்ளீட்ட பலவித தகவல் சாதனங்கள் இருந்தாலும் யாரையும் தொடர்புகொள்ள முடியவில்லை.
தொடர்புவெளிக்கு வெளியே எம்எல்ஏ.,க்கள் மட்டுமல்ல மொபைல் போன்களும் இருக்கின்றன.

எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.inAdvertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anandhan - puducherry,இந்தியா
13-ஏப்-201713:56:56 IST Report Abuse
Anandhan கோல்டன் பே ரிசார்ட் ஓனர் எங்க இருக்கார்? பில் எல்லாம் செட்டில் ஆச்சா?
Rate this:
Share this comment
Cancel
Smsundaram Sundaram - chennai,இந்தியா
05-ஏப்-201719:12:12 IST Report Abuse
Smsundaram Sundaram This is the plot of aiadmk to keep DMK out ops and sasi are playing game, after election all will UNITE,PUBLIC ARE FOOLS, TN PEOPLE WANT CHEAP ENTERTAINMENT
Rate this:
Share this comment
Cancel
Paranthaman - kadappa,இந்தியா
05-ஏப்-201710:44:09 IST Report Abuse
Paranthaman ஒரு வேளை தினகரன் ஜெயித்தால் கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்ஸில் முதல்வர் பதவி ஏற்பு விழா நடத்துவார். தலைமை செயலகத்தை அங்கேயே வைத்துக்கொள்வார்.மாபியா கும்பலுக்கு அது ராசியான இடம்.
Rate this:
Share this comment
Cancel
Muralikrishnan.G - chennai,இந்தியா
03-ஏப்-201722:09:23 IST Report Abuse
Muralikrishnan.G எது இப்போதைக்கு தேவை தேவை இல்லாத செய்தி
Rate this:
Share this comment
Cancel
Paranthaman - kadappa,இந்தியா
21-மார்-201717:26:42 IST Report Abuse
Paranthaman கூவத்தூர் கோல்டன் பே ரிசார்ட்ஸ் தங்கமும் ரொக்கமும் புரண்ட இடம்.ஆட்சியை கவிழ்க்க எம்.எல்.ஏக்களை மடக்கி வைக்க தோதான இடம். கோடிகளும் தங்கமும் நாளை மாலை செரித்து ஜீரணமாகி 122 எம்.எல்.ஏக்களும் ஏப்பம் விடுவார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Ravichandran - dar salam ,தான்சானியா
25-பிப்-201713:20:35 IST Report Abuse
Ravichandran திருட்டு ராஸ்கல்ஸ்.
Rate this:
Share this comment
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
18-பிப்-201708:23:17 IST Report Abuse
mindum vasantham இன்னைக்கு ஆ தி மு க ஜெயிச்சிருச்சுன்னா கூவத்தூர் குஷி ஆகிடும்
Rate this:
Share this comment
Cancel
krishna - cbe,இந்தியா
15-பிப்-201717:55:55 IST Report Abuse
krishna ரிசார்ட்டுக்கு இலவச விளம்பரம்.
Rate this:
Share this comment
Young Prince - Bangalore,இந்தியா
16-பிப்-201711:13:31 IST Report Abuse
Young Princeகரெக்ட். இதை எதிர்பார்த்திருக்கவே மாட்டாங்க ரிசார்ட் ஓனர்ஸ்...
Rate this:
Share this comment
kurinjikilan - Madurai,இந்தியா
19-மார்-201707:20:30 IST Report Abuse
kurinjikilanஇது மட்டுமல்ல .. இந்த ரிசார்ட்டுக்கு வர வேண்டிய பணமும் வராது.. மீறி கேட்டால் பாலு ஜூவல்லர்ஸ் மற்றும் கங்கை அமரன் கதைதான்.. எப்படியிருந்தாலும் ரிசார்ட் கதி அதோ கதிதான்.. ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படாது.. அதேபோல தரங்கெட்ட ஈவில் அரசியல்வாதிகள் ஒட்டு மொத்தமாக தங்கிய அந்த ரிசார்ட்டுக்கும் அதன் உரிமையாளருக்கும் அதே கதிதான்..பாவம்.....
Rate this:
Share this comment
Cancel
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
12-பிப்-201706:30:59 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே பாலு ஜூவல்லர்ஸ் ஆனா கதை கூவாய்த்துர் ரிஸார்ட்டுககும் ஆகா கூடாது என்று நினைக்கிறேன், சசி விட்டுடுமா
Rate this:
Share this comment
Cancel
Paranthaman - kadappa,இந்தியா
11-பிப்-201714:18:25 IST Report Abuse
Paranthaman உலகை அழிக்க முயன்ற ஹிட்லர் கடைசியில் தன்னை தானே சுட்டு செத்தான். வரலாறு தெரியாமல் ஆடுகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை