பலே பாலமேடு...| Dinamalar

பலே பாலமேடு...

Updated : பிப் 10, 2017 | Added : பிப் 10, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement


பலே பாலமேடு...
மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட பாலமேடு ஜல்லிகட்டு சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அரசியல் கலக்காமல் பிரமாதமாக நடந்தேறியது.

பாலமேடு மகாலிங்கசுவாமி மடத்து கமிட்டி சார்பில் நடத்தப்பட்ட இந்த ஜல்லிக்கட்டில் 1600 வீரர்கள் மாடு பிடிப்பதற்கு பதிவு செய்திருந்தனர் இதே போல 850 காளைகளும் பதிவு செய்யப்பட்டிருந்தன.
ஒரு மணி நேரத்திற்கு 200 வீரர்கள் வீதம் களத்தில் இறக்கிவிடப்பட்டதால் அனைவருக்கும் மாடு பிடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.காலை 9 மணிக்கு ஆரம்பித்த ஜல்லிக்கட்டு மாலை 4 மணிவரை விறுவிறுப்பு குறையாமல் நடந்தது.

எட்டு காளைகளை அடக்கிய கருப்பணன்,ஏழு காளைகளை அடக்கிய சிவகுமார் ஆகியோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.இதே போல யாரிடமும் பிடிபடாமல் விளையாடிய காளைகளுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

களத்தில் இறக்கிவிடப்பட்ட அனைத்து காளைகளுக்கும் மரியாதை செலுத்தும் விதமாக தினமலர் சார்பில் வேட்டி துண்டு பரிசாக வழங்கப்பட்டது.

-எல்.முருகராஜ்
murugaraj@dinamalar.in



Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை