சசிகலா கும்பல் பிடியில் சிக்கியுள்ள எம்.எல்.ஏ.,க்கள் : பன்னீரை ஆதரிக்கும்படி தொகுதி மக்கள் உத்தரவு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
சசிகலா கும்பல் பிடியில் சிக்கியுள்ள எம்.எல்.ஏ.,க்கள்
பன்னீரை ஆதரிக்கும்படி தொகுதி மக்கள் உத்தரவு

முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவிக்கும்படி, சசிகலா கும்பலின் பிடியில் சிக்கியுள்ள எம்.எல்.ஏ.,க்களுக்கு, கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள், நெருக்கடி கொடுத்து வருகின்றனர். அவர்கள், சசிகலா குடும்பத்தினரிடம் வாங்க வேண்டியதை வாங்கி விட்டு வருவதாக, அனைவரையும் சமாதானப்படுத்தி வருகின்றனர்.
ஜெ., மறைந்ததும், அ.தி.மு.க., பொதுச் செயலராக சசிகலா நியமனம் செய்யப்பட்டார். இதற்கு கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியது. சசிகலாவை ஏற்றுக் கொள்ள மறுத்த தொண்டர்கள், அவரை ஆதரித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகளை கிழித்து, எதிர்ப்பை தெரிவித்தனர்.

சசிகலா கும்பல் பிடி, சிக்கியுள்ள எம்.எல்.ஏ.,க்கள், பன்னீரை ஆதரிவு, தொகுதி மக்கள் உத்தரவு

போர்க்கொடி :


மேலும் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்க வரும்படி, ஜெ., அண்ணன் மகள் தீபாவிற்கு அழைப்பு விடுத்தனர். அவர், தன் முடிவை, 24ம் தேதி தெரிவிப்பதாக கூறினார். இச்சூழ்நிலையில் சசிகலாவுக்கு எதிராக, முதல்வர் பன்னீர்செல்வம் போர்க்கொடி துாக்கினார். அவருக்கு, ஐந்து எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மற்ற எம்.எல்.ஏ.,க்கள், சசிகலா குடும்பத்தினரின் பிடியில் சிக்கி உள்ளனர். அவர்களை, சசிகலா குடும்பத்தினர், சொகுசு ரிசார்ட்களில் அடைத்து வைத்துள்ளனர். அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்க, கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள், கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

வலியுறுத்தல் :


அவர்கள், கடிதம், சமூக வலைதளங்கள் மற்றும் இ - மெயில் மூலமாக, தங்கள் தொகுதி எம்.எல்.ஏ.,வை தொடர்பு கொண்டு, முதல்வர்


பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவிக்கும்படி வலியுறுத்தி வருகின்றனர்.
பொதுமக்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு அனுப்பும் கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஊருக்குள் வரணும் எனும் எண்ணம் உள்ள, சட்டசபை உறுப்பினர்கள் படிக்கவும்... மீண்டும் மீண்டும் நீங்கள் தொகுதியில், மக்கள் இடத்தில் நற்பெயர் பெற, இது இறுதி வாய்ப்பு. உங்களுக்கு வாக்களித்த, ஒரு தமிழனின் மனசாட்சியின் குரல். இதுவரை எத்தனையோ மனுக்கள், எத்தனையோ விண்ணப்பங்கள், எங்கள்வாழ்வாதாரங்களை முன்வைத்து கொடுத்துள்ளோம். குடிநீர் வசதி, தரமான சாலைகள், மின் விளக்கு, மின் கம்பங்கள், பள்ளிக் கூடங்கள் கேட்டு மனு கொடுத்தோம்.
முதன் முறையாக, எங்களுக்காக ஒரு முதல்வரை கேட்கிறோம். அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், 134 பேரின் ஆதரவும் சசிகலாவுக்கு என, செய்திகள் வருகின்றன. ஆனால், 234 தொகுதி மக்களின் ஆதரவும், முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு தான். ஆகையால், எங்கள் ஊர் எம்.எல்.ஏ.,வாகிய நீங்களும், பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், சட்டசபை அலுவலகங்கள் புறக்கணிக்கப்படும். இது எங்களுடைய வேண்டுகோளோ, விண்ணப்பமோ அல்ல; எங்களின் ஆணை. இதை செய்யும் பட்சத்தில், உங்களால் நாங்கள் பெருமை அடைவோம். ஒரே ஒரு முறை, மனசாட்சியின் குரல் கேட்டு செயல்படுங்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கட்சி நிர்வாகிகள் நெருக்கடி :


இது தவிர, கட்சி நிர்வாகிகள், தங்கள் எம்.எல்.ஏ.,க்களை தொடர்பு கொண்டு, 'நீங்கள் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவியுங்கள். இல்லையெனில், உள்ளாட்சி தேர்தலையொட்டி, 'சீட்' பெறுவதற்காக, நாங்கள் பலரிடம் வாங்கி கொடுத்த பணத்தை திரும்ப கொடுங்கள்' என, நெருக்கடி கொடுத்துள்ளனர். அதற்கு பெரும்பாலான எம்.எல்.ஏ.,க்கள், 'அந்த பணத்தை எல்லாம் சசிகலா குடும்பத்தினரிடம் இருந்து வாங்குவதற்காகத்தான் அங்கு இருக்கிறோம். பணத்தை வாங்கி முடித்ததும், அணி மாறி விடுவோம்' என, உறுதி அளித்துள்ளனர்.

தொகுதிக்குள் வர தனியரசுக்கு தடை :


திருப்பூர் மாவட்டம், காங்கேயம் தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தனியரசுக்கு எதிராக, சமூக வலைதளங்களில் பரவும் தகவல் விபரம்:

Advertisement


காங்கேயம் எம்.எல்.ஏ., தனியரசுக்கு... நாங்கள், ஜெயலலிதாவுக்காக, அவரது ஆட்சிக்காக மட்டுமே உங்களுக்கு வாக்கு அளித்தோம். ஆனால், ஜெயலலிதா கொலைக்கு பின், தார்மீக அடிப்படையில், எம்.எல்.ஏ., தகுதியை இழந்து விட்டீர்கள். நீங்கள் சசிகலாவை முதல்வராக தேர்ந்தெடுத்துள்ளதாக அறிகிறோம். வாக்களித்த எங்கள் விருப்பத்திற்கு மாறாக, ஒருவரை தேர்வு செய்ய நீங்கள் யார்? ஆகவே உங்கள் பதவியை உடனடியாக ராஜனாமா செய்து விடுங்கள்; காங்கேயம் தொகுதிக்குள் வர வேண்டாம். இப்படிக்கு, காங்கேயம் தொகுதி வாக்காளர்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அமைச்சருக்கு எச்சரிக்கை :


ஈரோடு மாவட்டம், பவானி எம்.எல்.ஏ.,வும், சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான கருப்பண்ணனுக்கு, தொகுதி மக்கள் அனுப்பும், 'வாட்ஸ் ஆப்' தகவல்:
பவானி சட்டமன்ற உறுப்பினர் கே.சி.கருப்பண்ணனுக்கு, ஜெயலலிதா தலைமையில், தங்கள் பெயரில் நாங்கள் வைத்திருக்கும் தனிப்பட்ட மரியாதைக்குரிய அன்பின் காரணமாக, பல தேர்தலில் வெற்றி பெற உங்களுக்கு வாக்களித்து வந்துள்ளோம்;
சசிகலா தலைமையில் ஆட்சி நடைபெற அல்ல. அப்படி ஒரு நிலையில், தாங்கள் சசிகலாவை ஆதரிக்க வேண்டிய கட்டாயம் இருப்பின், மீண்டும் எங்களிடம் வாக்கு சேகரிக்க வர வேண்டாம். இப்படிக்கு, தங்களுக்கு வாக்களித்த வாக்காளர்கள், பவானி சட்டமன்ற தொகுதி. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதனால் அமைச்சர் தரப்பு கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.
- நமது நிருபர் குழு -


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vayalum vazhvum-saravanakumar - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
11-பிப்-201723:27:32 IST Report Abuse

vayalum vazhvum-saravanakumarபன்னீரே போதும் தீபா எல்லாம் தேவை இல்ல அதனால சந்தடி சாக்குல இந்த இம்சையை கொண்டுவந்து தமிழன் தலையில் கட்டி வைக்கிற வேலை செய்ய வேண்டாம்

Rate this:
Tamilachi - crawley,யுனைடெட் கிங்டம்
11-பிப்-201722:56:15 IST Report Abuse

Tamilachiஇந்த மாதிரியான மக்களின் எழுச்சியை இந்த முறை தான் பார்க்கிறேன்.. தொகுதி சட்ட மன்ற உறுப்பினரை கேள்வியும் கேட்டு அவர்களுக்கு எப்படி செயல்பட வேண்டும் என்று அறிவுரை மீறும் பட்சத்தில் எச்சரிக்கை தரும் தொகுதி வாக்காளர்களை பார்க்கும்போது சசிக்கு நன்றி சொல்ல வேண்டும்..இல்லை என்றால் மக்களின் இந்த எழுச்சியை பார்த்திருக்க முடியாது... பெருமையாக உள்ளது...

Rate this:
Sambasivam Chinnakkannu - paris,பிரான்ஸ்
11-பிப்-201721:59:08 IST Report Abuse

Sambasivam Chinnakkannuதொகுதி மக்கள் எம் எல் எ ,,எம் பி களின் குடும்பத்தினரை சிறை பிடித்து அனைவரையும் ராஜினாமா செய்ய சொல்ல வேண்டும் ,,,,பிறகு தெரியும் இவர்களின் பலம் என்ன என்று ,,,???

Rate this:
Chidambaranathan Ramaiah - usilampatti,இந்தியா
11-பிப்-201720:18:47 IST Report Abuse

Chidambaranathan Ramaiahஉசிலம்பட்டி ச. ம. உ . திரு நீதிபதி அவர்களே நமது ஊர்க்காரர் என்பதற்காகவாவது ஓ பி எஸ் அவர்களை ஆதரியுங்கள்

Rate this:
Rajamani Ksheeravarneswaran - bangalore,இந்தியா
11-பிப்-201716:01:38 IST Report Abuse

Rajamani Ksheeravarneswaranஓன்று செய்யலாம் .பன்னீர்செல்வம் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து,அதே தொகுதியில் சசிகலாவிடம் போட்டியிட்டால் யாருக்கு மக்கள் ஆதரவு என்று தெரிந்துவிடும்

Rate this:
N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா
11-பிப்-201714:51:02 IST Report Abuse

N.Purushothamanசதிகலாவுக்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏ க்களின் குடும்பத்தினரை அந்தந்த தொகுதி மக்கள் சிறை பிடிக்க வேண்டும்.

Rate this:
yesgee - ,
11-பிப்-201719:32:33 IST Report Abuse

yesgeeintha idea nallairruke!...

Rate this:
K. Shanmugasundararaj - Tirunelveli,இந்தியா
11-பிப்-201719:52:36 IST Report Abuse

K.   Shanmugasundararajதிருவாளர் புருசோத்தமனின் கருத்து நல்ல கருத்து. எம் எல் எ க்களின் குடும்பத்தினரை கேரோ ( சிறைப்பிடித்தால்) செய்தால் , குடும்பத்தினர் எம் எல் எ க்களுக்கு நெருக்கடி கொடுப்பார்கள். தொகுதி மக்கள் சசிகலாவுக்கு எதிராக இருப்பதும் தெரியவரும். ஜல்லிக்கட்டுக்கு நடை பெற்ற போராட்டம் போன்று தமிழகம் முழுவதும் நடைபெற வேண்டும். அவ்வாறு பொதுமக்கள் கிளர்ந்து எழுந்தால், ஆட்சிக்கு வருவோர் மக்களுக்கு பயந்து நல்லாட்சி தருவார். ஊழல்வாதிகளும், கான்டராக்டர்களும் பயப்படுவர். மக்கள் எழுச்சியே இதற்கு தீர்வாகும்....

Rate this:
Revathi Archana - madurai,இந்தியா
11-பிப்-201714:34:10 IST Report Abuse

Revathi Archanaகருணாஸ்ல்லாம் ஒரு ஆளுன்னு சீட்டு குடுத்து ஒரு பதவியும் குடுத்த அந்த அம்மாவுக்கும் வேணும் ,மக்களுக்கும் நல்ல வேணும் ,

Rate this:
skandh - chennai,இந்தியா
11-பிப்-201713:30:35 IST Report Abuse

skandhகட்டாயமாக இவையெல்லாம் தீ முல்லை காவின் வேலைதான். முதலில் சின்னம்மா தலைமையில் ஆட்சி பிறகும் நேரம் இருக்கு நல்லது கெட்டது பார்த்து மாத்திக்கொள்ள. என்ன வானாலும் தீ முல்லை காவின் கூட்டாளிகள் தீ முல்லை காவோடு சேர்த்து ஒதுக்க பட்டே ஆகா வேண்டும்.

Rate this:
11-பிப்-201713:30:06 IST Report Abuse

நிகில்எங்கே இந்த லொடுக்கு பாண்டி.செத்த அன்றைக்கே செல்பி எடுத்த புண்ணியவான். பின் நல்லவர்களுடனா கூட்டணி போடப்போகுது

Rate this:
nimmi - Dindigul,இந்தியா
11-பிப்-201712:56:33 IST Report Abuse

nimmiஅஇஅதிமுக வெற்றி பெற்ற சட்டமன்றத் தொகுதியை சார்ந்த பொதுமக்கள், நாளை ஞாயிற்றுக் கிழமை என்பதால் ஊர்வலமாகச் சென்று, தங்கள் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், "சசிகலாவை முதலமைச்சராக தேர்ந்தெடுக்க நாங்கள் வாக்களிக்கவில்லை, அப்படி ஒரு முடிவை எடுத்திருப்பின் அதனை மாற்றிக் கொள்ளுங்கள், இல்லையேல் பதவியை ராஜினாமா செய்யுங்கள் " என மனுத்தரலாம். அலுவலகத்தில் உள்ளவர்கள் வாங்கமறுத்தால் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கலாம்.இதனை சிறைப்பட்டுள்ள () அனைத்து சட்டமன்ற உறுப்பினர் தொகுதிகளிலும் நிறைவேற்றுங்கள். இது நமது நிலைப்பாட்டிற்கு வலுசேர்க்கும்.

Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement