நடராஜன் அப்பல்லோவிலிருந்து டிஸ்சார்ஜ்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நடராஜன் அப்பல்லோவிலிருந்து டிஸ்சார்ஜ்

Added : பிப் 11, 2017 | கருத்துகள் (69)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
நடராஜன், டிஸ்சார்ஜ், சசிகலா

சென்னை: உயர் ரத்த அழுத்தம், கை நடுக்கம் ஆகியவற்றுக்காக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருந்த எம்.நடராஜன் (சசிகலா கணவர்) நேற்று இரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
கடந்த பிப்., 5ம் தேதி நடராஜனுக்கு, உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டது. கைநடுக்கமும் உண்டானது. இதையடுத்து அவரது குடும்ப டாக்டர் பிரம்மானந்தம் அப்பல்லோ கொண்டு வந்து சேர்த்தார். ஜெயலலிதா போன்ற வி.ஐ.பி.,க்கள் அனுமதிக்கப்படும் 'எல்' வார்டில் அனுமதிட்டார். அவருக்கு டாக்டர்கள் கே.ஆர்.பழனிச்சாமி, சத்தியமூர்த்தி, ஆகிய இருதய நோய் நிபுணர்கள் அடங்கிய குழு சிகிச்சை அளித்தது.
325 ஸ்லைஸ் சி டி ஸ்கேன்: நடராஜனுக்கு இசிஜி, எக்கோ, எம் .ஆர். ஐ. மற்றும் 325 ஸ்லைஸ் சி டி ஸ்கேன் ஆகிய சோதனைகள் செய்யப்பட்டன. கைநடுக்கம் இருந்ததால், அவருக்கு நரம்பியல் நிபுணர் டாக்டர் மீனாட்சி சுந்தரம் சிகிச்சை அளித்தார். அவருடன் நடராஜனின் மூத்த சகோதரர் ராமச்சந்திரன், டாக்டருமான அவரது மூத்த சகோதரரின் மகன் ஆகியோர் உடனிருந்தனர். அவ்வப்போது, சசிகலாவின் உறவினர்கள் திவாகரன், தினகரன் ஆகியோர் அவரை பார்த்து சென்றனர். தற்போது உடல்நலம் தேறியதையடுத்து நேற்று இரவு 10.30 மணிக்கு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
நடராஜன், அனுமதிக்கப்பட்ட மறுநாள் தான் ஜெயலலிதா மரணம் குறித்து பத்திரிகையாளர்களிடம் அப்பல்லோ டாக்டர்கள் விளக்கமளித்தனர். இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்வதற்கு தான் நடராஜன் அப்பல்லோவில் சேர்ந்தார் என்று கூட பேசப்பட்டது.

Advertisement
வாசகர் கருத்து (69)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nagaiah - chennai,இந்தியா
11-பிப்-201722:41:25 IST Report Abuse
nagaiah		இவருக்கு கைகால் மட்டுமல்ல ,பன்னீர்செல்வம் முதல்வரானதும் ஈரக்கொலையே நடுங்கப்போவுது ,
Rate this:
Share this comment
Cancel
nadarajan - fujairah,ஐக்கிய அரபு நாடுகள்
11-பிப்-201720:30:09 IST Report Abuse
nadarajan ஒரு 75 வச்சிருந்து பின்னர் அனுப்பி இருக்கலாம். இப்போ என்ன அவசரம் அவரை டிஸ்சார்ஜ் செய்தாங்க.
Rate this:
Share this comment
Cancel
Raja segaran - bhopal, madhya pradesh.,இந்தியா
11-பிப்-201719:52:09 IST Report Abuse
Raja segaran நல்லவேளை, பக்கவாதம் வரவில்லை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X