ஓ.பி.எஸ் - தீபா கைகோர்ப்பு : அடுத்து என்ன நடக்கும்? | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓ.பி.எஸ் - தீபா கைகோர்ப்பு : அடுத்து என்ன நடக்கும்?

Added : பிப் 15, 2017 | கருத்துகள் (55)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
ஓபிஎஸ், தீபா, சசிகலா

சென்னை: ஜெயலலிதா மறைவுக்குப் பின், தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என தீபா கூறினார். இதற்காக தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் போகப் போவதாகவும் அறிவித்தார். ஜெயலலிதா பிறந்த நாளான, பிப்., 24ல், புதிய கட்சி தொடங்கும் அறிவிப்பையும் வெளியிட உள்ளதாக அறிவித்திருந்தார்.


திடீர் கைகோர்ப்பு:


இதற்கான ஆயத்தப் பணிகளில் அவர் இருக்க, திடுமென, சசிகலாவுக்கு எதிராக செயல்படும் முதல்வர் பன்னீர்செல்வமும், தீபாவின் தயவை நாடினார். அதன் அடிப்படையிலேயே, 7ம் தேதி இரவு, சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா சமாதிக்கு பன்னீர்செல்வம் சென்றார். அதே நேரம், தீபாவும் அவரது ஆட்களும் வந்தனர். பன்னீர்செல்வத்தை சந்தித்து அவருக்கு, ஆதரவைத் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, இருவரும், முதல்வர் இல்லத்துக்குச் சென்றனர். அங்கு பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவு மூத்தத் தலைவர்களுடன், தீபா பேசினார்.
பின், பன்னீர்செல்வம் ஆட்சியை நிலை நிறுத்திக் கொள்வதற்காக எடுக்கும் முயற்சிகளுக்கு தன்னுடைய முழு ஆதரவைத் தெரிவித்துக் கொண்டார். பின், ''நான், முதல்வர் பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்பட முடிவெடுத்துள்ளேன். விரைவில் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளப் போகிறேன். சசிகலா, அரசியலில் இருந்து வீழ்த்தப்பட வேண்டும்'' என்றார் தீபா.

Advertisement




வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
abdulrahim - ஜுபைல்,சவுதி அரேபியா
15-பிப்-201716:32:13 IST Report Abuse
abdulrahim பன்னீர், பதவிக்காக சசிகலா காலில் சாஸ்டாங்கமாய் விழுந்தார். சசியையே ஜெயாவின் வாரிசாக பார்க்கிறோம் என்றார். பதவியை பறித்தவுடன் தான் சசியை எதிர்க்க தொடங்கினார். ஆனால் ஜெயா உயிரோடு இருக்கும் போதே தீபா சசிகலாவை எதிர்த்தவர், இன்றுவரை சசியை தீவிரமாக எதிர்க்கிறார். அப்படி பார்த்தால் தீபாவை முன்னிறுத்தி விட்டு பன்னீர் அவரை ஆதரிக்க வேண்டியது தானே. அது என்ன பன்னீர் சோடா தான் வேண்டும் என சில தமிழகம் விரும்பிகள் அடம்பிடிக்க காரணம் என்னவோ ? சசி எதிர்ப்பு தான் நமக்கு வேண்டும் அதை ஆரம்பத்தில் இருந்தே தீபா செய்கிறார் அதோடு ஜெயாவின் ரத்தம் வேறு.
Rate this:
Share this comment
Cancel
Ram - Chennai,இந்தியா
15-பிப்-201715:57:11 IST Report Abuse
Ram பன்னீர் அவர்கள் என் தீபாவின் உதவியை நாடவேண்டும் ? அவருக்குத்தான் மக்களின் ஏகோபித்த ஆதரவு இருக்கிறதே ? பன்னீர் அவர்களே உங்களுக்கே பிரச்சினையை உருவாக்கிக் கொள்ளாதீர்கள். மீண்டும் கூழை கும்பிடு காலம் உங்களுக்கு வரக்கூடாது. இனி மக்கள் ஆதரவுடன் நிமிர்ந்து நின்று வீறு நடை போடுங்கள். நாங்கள் இருக்கிறோம்
Rate this:
Share this comment
Cancel
Ram - Chennai,இந்தியா
15-பிப்-201715:50:04 IST Report Abuse
Ram பன்னீர் அவர்கள் இந்த தீபாவுக்கு கூழை கும்பிடு போட கூடாது. தனது கட்சியினரையும் கூழை கும்பிடு போட அனுமதிக்க கூடாது. தீபா நேர்மையானவராக இருந்தால் அவரே அதை அனுமதிக்க கூடாது. இல்லையென்றால் பன்னீருக்கு மீண்டும் 'வாழ்வே மாயம்' தான்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X