இயற்கை உரமாகும் சிறுநீர்!| Dinamalar

சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

இயற்கை உரமாகும் சிறுநீர்!

Added : பிப் 16, 2017 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
இயற்கை உரமாகும் சிறுநீர்!

'வெளிநாட்டில் எல்லாம், சாலை ஓரத்தில் யாரும் உச்சா போகமாட்டர்' என்பது பொய். நம்மூரைப் போலவை, பல வெளிநாடுகளிலும், இந்த பிரச்னை இருக்கிறது. ஆனால், அந்த பிரச்னையை சமாளிக்க, புதுப்புது தீர்வுகளை கண்டுபிடிப்பதிலும், அவர்கள் சளைப்பதில்லை என்பது தான் வித்தியாசம். பிரேசிலில் உள்ள, ரியோ டிஜெனிரோவில், பொது கழிப்பறைகளில், சிறுநீரிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் மூலம், இனிய பாடல்களை பாட விடுகிறது, அந்நாட்டு அரசு. மது விருந்துகளுக்கு போய் வருவோரை, இத்தகைய கழிப்பறைகள் ஈர்க்கும் என்பது தான் காரணம். அதே போல, நெதர்லாந்து அரசு, பொது கழிப்பறைகளில் சிறுநீரை சேகரித்து, உரமாக தயாரித்து வினியோகிக்கிறது. அண்மையில், பிரான்சிலுள்ள, பாரீஸ் மாநகராட்சி, 'யூரிட்ரோட்டாய்ர்' என்ற புதுவகை கழிப்பறைகளை சோதித்து வருகிறது. அங்கேயும், ஆண்கள் தான், பொது இடங்களில் உச்சா போகின்றனர். எனவே, அவர்களுக்கு ஏற்றபடி உருவாக்கப்பட்டுள்ள இக்கழிப்பறைகளில், பூந்தொட்டிகள் இருக்கின்றன. அதன் கீழ் உள்ள தொட்டியில், வைக்கோல் மற்றும் மரச் சிராய்ப்புகளை இட்டு நிரப்பிய கழிவுத் தொட்டி இருக்கிறது. இத்தொட்டி, சிறுநீரிலுள்ள நாற்றத்தை பெருமளவு குறைத்து விடுகிறது. இக்கழிவுகளை எடுத்துச் சென்று, இயற்கை உரங்களை தயாரித்து, பொது பூங்காக்கள், தோட்டங்களுக்கு உரமாக இட, பாரீஸ் நகராட்சி திட்டமிட்டு உள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
22-பிப்-201712:22:26 IST Report Abuse
Nallavan Nallavan தாவரங்கள் பட்டுப் போய்விடுமே ????
Rate this:
Share this comment
Cancel
Rangiem N Annamalai - bangalore,இந்தியா
19-பிப்-201709:04:22 IST Report Abuse
Rangiem N Annamalai அதிக மக்கள் தொகை உள்ள நமது நாட்டில் இதை நடைமுறை படுத்த முயற்சி செய்யலாம் .
Rate this:
Share this comment
Cancel
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
18-பிப்-201702:52:05 IST Report Abuse
Murugan நம்ம சிறுநீரின் மதிப்பு எங்கோ போய் கொண்டு இருக்கிறது .நாளை இதுவும் நம்ம ஊர் அம்பானிகளுக்கு வியாபாரமாகிவிடும் ................................................ஐஹோ.....................
Rate this:
Share this comment
Cancel
CHANDRA GUPTHAN - doha,கத்தார்
16-பிப்-201720:15:27 IST Report Abuse
CHANDRA GUPTHAN இது ஏற்கனவே நம்ம கிராமத்துல செய்தது தான் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை