பாலின விளம்பரத்திற்கு தடை : கூகுள் நிறுவனத்திற்கு உத்தரவு| Dinamalar

பாலின விளம்பரத்திற்கு தடை : கூகுள் நிறுவனத்திற்கு உத்தரவு

Added : பிப் 16, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: 'பாலினத்தை கண்டறியும் வகையில் வெளியிடப்படும் விளம்பரங்கள் உள்ளிட்டவற்றை நிறுத்த வேண்டும்' என, 'கூகுள், யாஹூ, மைக்ரோசாப்ட்' போன்ற இணைய தேடுதளங்களுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது.
நம் நாட்டில், ஆண் - பெண் விகிதம் வெகுவாக குறைந்து வருகிறது. 1971 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, 6 வயது வரையிலான, 1,000 ஆண் குழந்தைகளுக்கு, 964 பெண் குழந்தைகள் இருந்தனர்; இது, 2011ல், 918 ஆக குறைந்துள்ளது. பெண் சிசு கொலையை தடுக்கும் வகையில், தாயின் கர்ப்பத்தில் இருக்கும் கருவின் பாலினம் குறித்து அறிவிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.ஆனால், கூகுள், யாஹூ, மைக்ரோசாப்ட் போன்ற இணைய தேடுதளங்களில், பாலினத்தை கண்டுபிடிக்கும் சேவை அளிப்பதாக, பலர் விளம்பரம் செய்து வருகின்றனர். அதே போல், பாலினத்தை கண்டறியும் வழிமுறைகள் குறித்த தகவல்களும் இடம் பெற்றுள்ளன. இவற்றை நிறுத்தக் கோரி, சுப்ரீம் கோர்ட்டில், பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. அதை விசாரித்த, சுப்ரீம் கோர்ட், இதற்கான வழிமுறைகளை வகுக்கும்படி, இந்த நிறுவனங்களுக்கு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 'இது போன்ற விளம்பரங்களை நீக்குவதற்காக, இந்த நிறுவனங்கள் நிபுணர்கள் குழுவை அமைக்க வேண்டும்' என, உத்தரவிடப்பட்டு உள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை