புடவை திருடியவன் பயங்கர கிரிமினலா? : தெலுங்கானா அரசுக்கு கடும் கண்டனம்| Dinamalar

புடவை திருடியவன் பயங்கர கிரிமினலா? : தெலுங்கானா அரசுக்கு கடும் கண்டனம்

Added : பிப் 16, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

புதுடில்லி: புடவைகளை திருடியவனை, பயங்கர கிரிமினல்களுக்கான சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதற்காக, தெலுங்கானா அரசுக்கு, சுப்ரீம் கோர்ட், கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.தெலுங்கானாவில், முதல்வர், சந்திரசேகர ராவ் தலைமையிலான, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி நடக்கிறது.
ஐதராபாத்தைச் சேர்ந்தவன் எலையா; இவன், ஜவுளிக் கடை ஒன்றில், ஐந்து புடவைகளை திருடினான் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில், கடந்த ஆண்டு, மார்ச்சில் கைது செய்யப்பட்டான். இவனை, பயங்கர கிரிமினல்களை கைது செய்யும் சட்டத்தின் கீழ், போலீசார் கைது செய்தனர். இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை, விசாரணையின்றி, ஒரு ஆண்டு, சிறையில் வைத்திருக்கலாம். இதை எதிர்த்து, ஐகோர்ட்டில், எலையா மனு தாக்கல் செய்தான்; இவனது மனுவை, ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டில், எலையா மனு தாக்கல் செய்தான். இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி, கேஹர் தலைமையிலான அமர்வு முன் நேற்று நடந்தது.
அப்போது, நீதிபதிகள் கூறியதாவது: ஐந்து புடவைகளை திருடியவனை, பயங்கர கிரிமினல்கள் மீது பாயும் சட்டத்திலா கைது செய்வது? தெலுங்கானா மாநிலத்தில் என்ன நடக்கிறது? கள்ளச்சாராய வியாபாரிகள், கொள்ளைக்காரர்கள், போதைப் பொருள் கடத்துபவர்கள், நில மோசடி செய்தவர்கள் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க பயன்படுத்தப்படும் சட்டத்தின் கீழ், ஐந்து புடவைகளை திருடியவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளதை, சிறிதும் நியாயப்படுத்த முடியாது.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
தெலுங்கானா அரசு வழக்கறிஞர் கூறுகையில், 'எலையா மீது ஏற்கனவே, பல திருட்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை, மாநில சட்ட ஆலோசனை குழுவும் ஏற்றுள்ளது' என்றார்.

இதை நிராகரித்த நீதிபதிகள், 'எலையா, பழைய கிரிமினல் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. இதில் அரசியல் பின்னணி உள்ளதா; எலையா மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கான காரணம் குறித்து, இரண்டு வாரங்களில் விளக்கம் அளிக்க வேண்டும்' என, உத்தரவிட்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கலியுக கண்ணன் - உன்னதமான பாரதம் ,இந்தியா
17-பிப்-201715:07:41 IST Report Abuse
கலியுக கண்ணன் ஒரே ஒரு முறை ஒரு நாளில் வாதாடினால் பல லக்ஷம் கறக்கும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களில் இங்கே கூறிய இந்த ஒரு சாதாரண புடவை திருடனுக்கு வாதாடியவை மஹா ப்ருஹஸ்பதி யாரோ ... தெலங்கானா அரசு அந்த புடவை திருடன் பல நாள் திருடன் என்று கூறியும் தாராளமாக விடுவிக்கக்கோரிய உச்சா நீதிபேதி யாரோ . கூட்டுக்கொள்ளை தொடருகிறதோ என்னமோ நடக்குது .. ஒண்ணுமே புரியலே ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை