டில்லி குண்டு வெடிப்பு வழக்கில் ஒருவர் குற்றவாளி; இருவர் விடுவிப்பு| Dinamalar

டில்லி குண்டு வெடிப்பு வழக்கில் ஒருவர் குற்றவாளி; இருவர் விடுவிப்பு

Added : பிப் 16, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
டில்லி குண்டு வெடிப்பு வழக்கில் ஒருவர் குற்றவாளி; இருவர் விடுவிப்பு

புதுடில்லி: டில்லியில், 2005ல் நடந்த, 50 பேர் பலியான தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில், பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான, லஷ்கர் - இ - தொய்பாவைச் சேர்ந்த தாரிக் அகமது தர், குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுஉள்ளான்.
குற்றச்சாட்டு : தலைநகர் டில்லியில், 2005ல், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில், அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இதில், 50 பேர் உயிரிழந்தனர்; 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த வழக்கு தொடர்பாக, பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான, லஷ்கர் - இ - தொய்பாவுடன் தொடர்புள்ள தாரிக் அகமது தர், முகம்மது ரபீக் ஷா, முகம்மது ஹுசைன் பசிலி ஆகியோர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.வங்கதேசம் தலைநகர் தாகாவில் பதுங்கியிருந்த இவர்கள், 2007ல், இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டனர். போதிய ஆதாரங்கள் இல்லாததால், இவர்கள் மீது குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய முடியவில்லை. இதனிடையில், தாரிக் அகமது தர் மொபைல் போன் தகவல்களை சேகரித்தபோது, லஷ்கர் அமைப்புடன் அவன் பேசிய பதிவுகள் கிடைத்தன.
விசாரணை : அதனடிப்படையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, டில்லி கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. இந்த வழக்கில், தாரிக் அகமது தர்ருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தண்டனை காலத்தை அனுபவித்ததால் அவன் விடுதலை செய்யப்பட் டான். மற்ற இருவரும் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Cheran Perumal - Radhapuram,இந்தியா
17-பிப்-201707:29:09 IST Report Abuse
Cheran Perumal அடுத்த குண்டுவெடிப்புக்கு இவர்கள் தயார் ஆகிவிடுவார்கள். போலீசாரும் நீதிமன்றமும் வழக்கை நடத்த தயார் ஆவார்கள். பொது மக்களும் செத்துமடிய தயாராக வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை