சிறை உணவு: சசிகலா அடம் | சிறை உணவு: சசிகலா அடம் Dinamalar
பதிவு செய்த நாள் :
சிறை உணவு: சசிகலா அடம்

பெங்களூரு : சிறை உணவை சாப்பிட மறுத்து, சசிகலா அடம் பிடித்ததால், தனியார் ஓட்டலில் இருந்து உணவு எடுத்துச் செல்லப்படுகிறது.

சிறை உணவு: சசிகலா அடம்

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறை வட்டாரங்கள் கூறியதாவது: சிறையில் அடைக் கப்பட்டுள்ள சசிகலா, இளவரசி ஆகியோர், ஒரே அறையில் தான் உள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு, நீண்ட நேரம், இரு வரும் துாங்காமல் பேசிக் கொண்டிருந்தனர். சசிகலா, சிறையில் கொடுத்த உணவை சாப்பிட மறுத்து, பழங்களை மட்டும்

சாப்பிட் டார். நேற்று காலை, 5:30 மணிக்கு, இருவரும் எழுந்தனர். தரையில் படுத்திருந்ததால், இருவரும் மன உளைச்சல் அடைந்தனர். இதனால், சிறப்பு படுக்கை வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

காலை, 6:30 மணிக்கு,பிஸ்கட், சர்க்கரை கலக்காத டீ கொடுக்கப்பட்டது; 8:00 மணிக்கு வழங்கப்பட்ட புளியோதரையை, இருவரும் சாப்பிட்டனர். காலை, 11:30 மணிக்கு, 'சாண்ட் விச்' வழங்கப்பட்டது. பிற்பகல், 1:30 மணிக்கு, அரிசி சாதம், சப்பாத்தி, பருப்பு சாம்பார், காய்கறி கூட்டு வழங்கப்பட்டது.

மாலை, 4:00 மணிக்கு, டீ, பிஸ்கட் வழங்கினர். சிறை உணவை சாப்பிட மறுத்ததால், இரவில் இருவருக்கும், தனியார் ஓட்டலிலிருந்து உணவு வாங்கி செல்லப்பட்டது.

இடைப்பாடிக்கு உத்தரவு :


நேற்று காலை, வழக்கறிஞர்கள், மூர்த்திராவ், செந்தில், அசோக் ஆகியோர், சுப்ரீம் கோர்ட்டில், மேல்முறையீடு செய்வது குறித்து, சசிகலாவுடன்

Advertisement

ஆலோசனை நடத்தினர். சசிகலாவை, பரப்பன அக்ரஹாரா சிறையி லிருந்து, தமிழக சிறைக்கு இடமாற்றம் செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தமிழகமுதல்வராக இடைப்பாடியும், அமைச்சர்களும் பதவி யேற்கவுள்ள தகவலை அறிந்த சசிகலா, லேசாக புன்னகைத்தார். முதல்வரும், அமைச் சர்களும், பெரும்பான்மையை நிரூபித்த பின், தன்னை சந்திக்க பெங்களூரு வந்தால் போது மென, அவர் உத்தரவிட்டு உள்ளார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (70)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Madhu - Trichy,இந்தியா
17-பிப்-201722:08:13 IST Report Abuse

 Madhuஇதே ஜெயில் உணவை ஒரு ஃஃபைவ் ஸ்டார் ஓட்டலில் கொடுத்து 'ரீபாக்' செய்து கொடுத்துப் பாருங்கள் சாப்பிடுவார்கள் இவர்கள் வழியிலேயே இவர்களை ஏமாற்றுவதுதான் சரியாக இருக்கும்.

Rate this:
Shanu - Mumbai,இந்தியா
17-பிப்-201720:10:44 IST Report Abuse

Shanuஇந்த சாப்பாடு கிடைக்காமல் எத்தனையோ பேர் கஷ்ட படுகிறார்கள்.

Rate this:
Solvathellam Unmai - Chennai,இந்தியா
17-பிப்-201719:11:04 IST Report Abuse

Solvathellam Unmai"சி" யை பெரிது படுத்த வேண்டாம்

Rate this:
Kandaswamy - Coimbatore,இந்தியா
17-பிப்-201718:53:36 IST Report Abuse

Kandaswamyசிறைக்குள் போராட்டம் நடத்த, இது சுதந்திர போராட்டமல்ல, அவள் காந்தியுமல்ல. இது மாற்றம் வரும் நேரம். முடிந்தால் இந்த MLA க்கள் மாபியாக்களை ஒதுக்கி தங்களுக்கென்று உள்ள கொஞ்ச நஞ்ச மரியாதையை காத்துக்கொள்ளட்டும். இது OPS ஆக இருந்தாலும் சரி, EPS ஆக இருந்தாலும் சரி. மக்களின் நோக்கம் மன்னார்குடி மாபியாவின் அரசியல் குறுக்கீடு எந்த வடிவத்திலும் இருக்கக்கூடாது என்பதே. நாளை விடிவது நன்றாக இருக்கட்டும்.

Rate this:
r.sundaram - tirunelveli,இந்தியா
17-பிப்-201717:56:24 IST Report Abuse

r.sundaramஇந்த தனி கவனிப்பை நீதிமன்றங்கள் கவனிக்காதா? இவர்களை உள்ளே தள்ளியது அவர்களை திருத்தும் நோக்கத்தில் தானே தவிர வேறு அல்ல. ஆனால் இவர்கள் உள்ளே போயும் தனி கவனிப்பு, அவர்களது வேலையை வேறொருவர் செய்வது, வீட்டு உணவு அல்லது ஹோட்டல் உணவு, அசைவ உணவு , கைபேசி, என்று அமர்களப்படுமானால் இவர்களுக்கு சிறை எதற்கு. சேர்த்த சொத்தை போல் பத்து தடவை அபராதம் போட்டு இனிமேல் தேர்தலில் நிற்கக்கூடாது என்றும் உத்தரவு செய்யலாமே. நீதிமன்றங்களும் அரசாங்கமும் சிந்தனை செய்ய வேண்டும்.

Rate this:
M.Guna Sekaran - Madurai,இந்தியா
17-பிப்-201717:49:09 IST Report Abuse

M.Guna Sekaranசட்டம் பண பெட்டியை வாங்கி கொண்டு இனிமேல் சசியை தமிழக சிறைக்கு மாற்றி அப்புறம் விடுதலை செய்து விடும் ,பணம் இருந்தால் இந்தியாவின் ஜனாதிபதியை கூட சிறைக்கு அனுப்பி விடலாம் ? பிச்சை காரனை கூட ஜனாதிபதியா ஆக்கி விடலாம் பணம் இருந்தால் ,அது தான் இந்தியாவில் அரசியல் அமைப்பு சட்டம் சாதிக்கு ஒரு சட்டம் பணத்துக்கு ஒரு சட்டம் அது தான் ஜனநாயக இந்தியாவின் சட்டம் ..............

Rate this:
Chandrasekaran Balasubramaniam - ERODE,இந்தியா
17-பிப்-201720:45:16 IST Report Abuse

Chandrasekaran Balasubramaniamமுதலில் சட்டத்தை வளைக்காமல் இருக்க சட்டம் இயற்ற வேண்டும்....

Rate this:
Bala Subramanian - Los Angeles CA,யூ.எஸ்.ஏ
17-பிப்-201717:41:30 IST Report Abuse

Bala Subramanianஅவங்க சாப்பிட்டா என்ன சாப்பிடலேன்னா என்ன ? சாப்பிடலேனா உடம்பை கொஞ்சம் குறைக்கலாம் அங்கு இருந்த காவலர்களை திட்டியதாகவும் தாக்கியதாகவும் தெரியுது அந்த மாதிரி ஏதாவது இருந்தால் video எடுத்து மேலாதிகாரிகளுக்கு அனுப்புங்க அவருடைய இந்த மாதிரி நன்னடத்தை காரணமாக இன்னும் கொஞ்ச காலம் அங்கேயே இருக்கட்டும் அப்படி இதெல்லாம் புடிக்கலேனா உங்களுக்கு தமிழர்களை புடிக்காதே அந்த கோபத்தை இவர் மேல் காட்டி பரலோகத்துக்கு அனுப்பவும் அங்கு போயி அம்மாவுக்கு மிச்சம் மீதி சேவை செய்யட்டும் விட்டது சனி

Rate this:
Maverick - Corpus Christii,யூ.எஸ்.ஏ
17-பிப்-201717:40:29 IST Report Abuse

Maverickஅக்கா... ரம்மி விளையாட சீட்டுக்கட்டு இருக்கா...?

Rate this:
Indian - Shelton,யூ.எஸ்.ஏ
17-பிப்-201716:56:59 IST Report Abuse

Indianஒரு குற்றவாளி தமிழகத்தை ஆட்சி செய்கிறார்.. இன்னொரு குற்றவாளி இதுவரை ஆட்சி செய்து போய் சேர்ந்து விட்டார்

Rate this:
Mahendran TC - Lusaka,ஜாம்பியா
17-பிப்-201720:31:51 IST Report Abuse

Mahendran TCஇன்னொரு நபரை குற்றம் செய்ய தூண்டியதே இந்த சதிகலாதான்....

Rate this:
manivannan - chennai,இந்தியா
17-பிப்-201716:56:14 IST Report Abuse

manivannanஅங்கே போயே இவ்வளவு பந்தா பண்ணினா இன்னும் இவங்க ஊரே ன்னா?

Rate this:
மேலும் 58 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement