தமிழகத்தில் ஆரம்பித்தது மன்னார்குடி கும்பலின் பினாமி ஆட்சி! | தமிழகத்தில் ஆரம்பித்தது மன்னார்குடி கும்பலின்... பினாமி ஆட்சி!: 'ரப்பர் ஸ்டாம்ப்' முதல்வரானார் இடைப்பாடி பழனிச்சாமி: தலையாட்டி பொம்மைகளாக 30மந்திரிகள் நியமனம் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
மன்னார்குடி கும்பலின் பினாமி ஆட்சி, 'ரப்பர் ஸ்டாம்ப்' முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி, தலையாட்டி பொம்மை, 30 மந்திரிகள் நியமனம்

தமிழகத்தில் மன்னார்குடி கும்பலின் பினாமி ஆட்சி நேற்று துவங்கியது. அதன் 'ரப்பர் ஸ்டாம்ப்' முதல்வராக இடைப்பாடி பழனிச் சாமி பொறுப்பேற்றார். சசி சொந்தங்கள் போடும் உத்தரவுகளை ஏற்று, தலையாட்டி பொம்மை களாக செயல்பட 30 மந்திரிகளும் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.

மன்னார்குடி கும்பலின் பினாமி ஆட்சி, 'ரப்பர் ஸ்டாம்ப்' முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி, தலையாட்டி பொம்மை, 30 மந்திரிகள் நியமனம்

ஜெயலலிதாவின் திடீர் மறைவுக்கு பின், ஓ.பன்னீர்செல்வம் புதிய முதல்வராக பொறுப் பேற்றார். அவரது ஆட்சியில் அரசு நிர்வாகம் வேகமாக செயல்பட துவங்கியது. மத்திய - மாநில உறவும் மேம்பட ஆரம்பித்தது.

இதற்கிடையில், 'வர்தா' புயல் நிவாரண பணிகள், ஜல்லிக்கட்டு போராட்டம், அதை முறியடிக்க அவசர சட்டம், கிருஷ்ணா நதி நீருக்காக, ஆந்திர அரசுடன் நடத்திய பேச்சு என, பன்னீர் ஆட்சியின் பலன்கள், மக்களை சென்றடைந்தன. இதனால், கடுப்பான சசிகலா தரப்பு, அவரிடம் இருந்து முதல்வர் பதவியை பறித்தது.

அடுத்த முதல்வராக வர, சசிகலா எடுத்த முயற்சிக்கு, உச்ச நீதிமன்றம் முட்டுக்கட்டை போட்டு விட்டது. ஆனாலும், விடாப்பிடியாக நின்று, ஜெ., நடத்திய கட்சியையும், விட்டுச்

சென்ற ஆட்சியையும், தன் குடும்பத்தின் பிடிக் குள் கொண்டு வந்து விட்டார்.இப்போது, அவர் விரும்பியபடியே, மன்னார்குடியின் பினாமி ஆட்சி அமலுக்கு வந்துள்ளது. இது, எத்தனை நாட்கள் நீடிக்கும் என்பது, அதன், 'ரப்பர் ஸ்டாம்ப்' முதல்வராக பொறுப்பேற் றுள்ள, இடைப்பாடி பழனிச்சாமியின் கையில் உள்ளது.

என்றைக்கு அவர், தன்னிச்சையாக, சுதந்திர மாக செயல்படத் துவங்குகிறாரோ, அன்றைக்கு சசி சொந்தங்களுக்கு கோபம் வரலாம்; அப்போது, ஆட்சிக்கு சிக்கல் வரலாம்.

இதுபற்றி, அ.தி.மு.க., அதிருப்தி தலைவர்கள் கூறியதாவது: 'ரப்பர் ஸ்டாம்ப்' முதல்வராக மட்டுமே, பழனிச்சாமியால் செயல்பட முடியும். வழக்க மான பணிகளை செய்ய மட்டுமே அனுமதிக்கப் படுவார்; இதர முக்கிய அனுமதி, திட்ட ஒப்புதல்கள், அதிகாரிகள் மாற்றம், தொழில் ஒப்பந்தம், மத்திய திட்டம் மற்றும் நிதி ஒதுக் கீடு உள்ளிட்ட முடிவுகளை, அவரால் சுயமாக எடுக்க முடியாது.

முதற்கட்டமாக தினகரனிடமும், பின், நடராஜ னிடமும், அவர் ஆலோசித்த பிறகே, அரசு நிர்வாகத்தில் முக்கிய முடிவுகளை எடுக்க முடியும். மேலும், அரசு ஒப்பந்தங்கள், பணி நியமனங்கள், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரி கள் மாற்றம், மணல் குவாரி ஒதுக்கீடு போன்ற முக்கிய அரசு நடவடிக்கைகளில், சசிகலாவின் முக்கிய சொந்தங்களான திவாகரன், மகாதேவன், பாஸ்கரன், விவேக் தலையீடுகள் அதிகம் இருக்கும்.

அவர்கள் பரிந்துரைகளின் படியே, உத்தரவுகள்

Advertisement

பிறப்பிக்க வேண்டிய இக்கட்டான நிலை தான், இடைப்பாடிக்கு ஏற்படும். ஜெயலலிதா இருந்த போது, அமைச்சர்கள், அவரது இல்லத்திற்கு சென்று, அவரது ஆலோசனைப்படி, முக்கிய முடிவுகள் எடுப்பது வழக்கம். அவர் முதல்வ ராக இருந்தார்; அதனால், அமைச்சர்கள் போயஸ் தோட்டம் போய் வந்தனர்.தற்போது, எந்த அரசு அதிகாரத்திலும் இல்லாத, தினகரன், நடராஜனை சந்திக்க, தினமும் போயஸ் தோட்டம் செல்ல வேண்டிய கட்டாயம், புதிய முதல்வருக்கு காத்திருக்கிறது.

இதையெல்லாம் விட, அவரை முதல்வர் பதவிக்கு முன் மொழிந்த சசிகலாவை சந்திக்க, அடிக்கடி பெங்களூரு சிறைக்கு, தினகரனுடன் சென்று வர வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள் ளது. இதே நிலைமை தான், இடைப் பாடி பழனிச்சாமியுடன் பதவியேற்றுள்ள அனைத்து அமைச்சர்களுக்கும் உண்டு. மன்னார்குடி வாசிக்கும் மகுடிக்கு, தலையாட்டும் தஞ்சாவூர் பொம்மைகளாக தான் இருக்க முடியும்.

அவர்களாலும், தங்கள் துறையில் சுயமாக முடிவுகள் எடுக்க முடியாது. குறுக்கீடுகள், பரிந்துரைகளை ஏற்றால் மட்டுமே, அவர் களால் பதவியில் நீடிக்க முடியும் என்ற நிலைமை ஏற்படும். மொத்தத்தில், மன்னார் குடி கும்பலின் பினாமி ஆட்சிக்கு, ரப்பர் ஸ்டாம்ப் முதல்வராக, பழனிச்சாமியும், தலை யாட்டி பொம்மைகளாக,30 மந்திரிகளும் செயல்படப் போகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பெரும்பான்மையை நிரூபிப்பேன்: முதல்வர்


''சட்டசபையில், பெரும்பான்மையை நிரூபிப் பேன்,'' என, முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.புதிய முதல்வராக பொறுப்பேற்ற தும், சென்னை மெரினா கடற்கரை யில் உள்ள, ஜெயலலிதா நினை விடத்திற்கு வந்த, இடைப் பாடி பழனிச் சாமி, மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின், எம்.ஜி.ஆர்., நினைவிடம் மற்றும் அண்ணாதுரை நினை விடத்திலும், அஞ்சலி செலுத்தினார். அவரு டன் அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் வந்திருந்தனர்.இதையடுத்து, அவர் நிருபர் களிடம் பேசுகையில், ''பெரும் பான்மையை நிரூபிக்க வேண்டும் என, கவர்னர் தெரிவித் துள்ளார். சட்டசபையில், பெரும்பான்மையை நிரூபிப்போம்; ஜெ., ஆட்சி தொடரும்,'' என்றார்.


Advertisement

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...


வாசகர் கருத்து (156)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-பிப்-201722:51:45 IST Report Abuse

PrasannaKrishnanyoubastards.getoutofmycity.

Rate this:
17-பிப்-201722:51:45 IST Report Abuse

PrasannaKrishnanyoubastards.getoutofmycity.

Rate this:
17-பிப்-201722:51:45 IST Report Abuse

PrasannaKrishnanyoubastards.getoutofmycity.

Rate this:
17-பிப்-201722:51:45 IST Report Abuse

PrasannaKrishnanyoubastards.getoutofmycity.

Rate this:
17-பிப்-201722:51:45 IST Report Abuse

PrasannaKrishnanyoubastards.getoutofmycity.

Rate this:
17-பிப்-201722:51:45 IST Report Abuse

PrasannaKrishnanyoubastards.getoutofmycity.

Rate this:
17-பிப்-201722:51:45 IST Report Abuse

PrasannaKrishnanyoubastards.getoutofmycity.

Rate this:
17-பிப்-201722:51:45 IST Report Abuse

PrasannaKrishnanyoubastards.getoutofmycity.

Rate this:
17-பிப்-201722:51:45 IST Report Abuse

PrasannaKrishnanyoubastards.getoutofmycity.

Rate this:
17-பிப்-201722:51:45 IST Report Abuse

PrasannaKrishnanyoubastards.getoutofmycity.

Rate this:
மேலும் 146 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement