குமாரசாமி தீர்ப்பின் ஓட்டைகளை புட்டுப்புட்டு வைத்த ஆச்சார்யா| Dinamalar

குமாரசாமி தீர்ப்பின் ஓட்டைகளை புட்டுப்புட்டு வைத்த ஆச்சார்யா

Added : பிப் 16, 2017 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

தமிழக முதல்வராக, 1991 - 96ல், ஜெயலலிதா பதவி வகித்தார். அப்போது, அவரும், தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர், 66.65 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக, லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப் பதிவு செய்தது. ஜெயலலிதா, சசிகலா பெயர்களில், 1991ல் இருந்த சொத்துக்களின் மதிப்பு, 2.01 கோடி ரூபாய். 1991 ஜூலைக்கு பின், சொத்து குவிப்பு துவங்கியது.ஜெ., சசிகலா, சுதாகரன், இளவரசி பெயர்களில், 32 நிறுவனங்கள் துவங்கப்பட்டன. 1996ல் நடந்த தேர்தலில், ஜெயலலிதா தலைமையிலான, அ.தி.மு.க., படுதோல்வி அடைந்தது.அதை தொடர்ந்து, நான்கு பேர் மீதும், ஊழல் தடுப்பு சட்டம், இந்திய தண்டனை சட்டப் பிரிவுகளில், வழக்கு தொடரப்பட்டது. தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகன் தொடர்ந்த வழக்கில், சென்னை தனி நீதிமன்றத்தில் இருந்த இந்த வழக்கு, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.வழக்கை, சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா விசாரித்தார். வழக்கின் முடிவில், நான்கு பேரும் சேர்ந்து சேர்த்த சொத்துக்களில், 53.60 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களுக்கு, திருப்திகரமான கணக்கு காட்ட முடியவில்லை என, முடிவு செய்யப்பட்டது.நான்கு பேர் மீதான குற்றச்சாட்டுக்கள், சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கூறி, அவர்களுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை; ஜெயலலிதாவுக்கு, 100 கோடி ரூபாய் அபராதம்; சசிகலா, சுதாகரன், இளவரசிக்கு, தலா, 10 கோடி ரூபாய் அபராதத்தை, சிறப்பு நீதிமன்றம் விதித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி விசாரித்தார். அவரது கணக்குப்படி, மொத்த சொத்துக்களின் மதிப்பு, 37.59 கோடி ரூபாய்; வருமானமாக கிடைத்தது, 34.76 கோடி ரூபாய்; சொத்து மதிப்பில் இருந்து, வருமானத்தை கழித்தால், 2.83 கோடி ரூபாய் தான் வருகிறது. மொத்த வருமானத்தை கணக்கிடும் போது, இந்த 2.83 கோடி ரூபாய் மதிப்பு என்பது, 8.12 சதவீதம் தான். வருமானத்துக்கு அதிகமான சொத்துக்களின் மதிப்பு, 10 சதவீதத்துக்கு உட்பட்டு இருந்தால், குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்யலாம் என்கிற, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள்காட்டி, அனைவரையும் விடுதலை செய்தார். நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், கர்நாடக அரசு, தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகன் தரப்பில், மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. வழக்கை, நீதிபதிகள் பினாகி சந்திரகோஸ், அமிதவ் ராய் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. கர்நாடக அரசு தரப்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் ஆச்சார்யா, கர்நாடக உயர் நீதிமன்றத்தின் கணக்கு பிழையை சுட்டிக்காட்டினார். அதுகுறித்த அட்டவணையையும், தாக்கல் செய்தார்.
அவரின் வாதம் விபரம்:
● வருமானமாக கருதி, கடன் தொகையை கூட்டும் போது, 13.50 கோடி ரூபாயில், கணக்கு பிழை ஏற்பட்டுள்ளது; அந்த கணக்கு பிழையை சரி செய்தாலே, சொத்தின் மதிப்பு, 16.32 கோடியாகி விடும்; அதாவது, 76.7 சதவீதம். உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது போல், 8.12 சதவீதம் அல்ல● கட்டுமான செலவாக, 8.60 கோடி ரூபாய் செலவானது என, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களே ஒப்புக் கொண்டுள்ளனர்; ஆனால், உயர் நீதிமன்றம், 5.10 கோடி ரூபாய் என கணக்கிட்டு, 3.50 கோடி ரூபாயை குறைத்துள்ளது● ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனம் மூலம், 1.15 கோடி ரூபாய் வருமானம் கிடைத்ததாக, குற்றம் சாட்டப்பட்டவர்களே தெரிவித்துள்ளனர். ஆனால், உயர் நீதிமன்றமோ, நான்கு கோடி ரூபாய் வருமானம் என, அவர்கள் ஒப்புக் கொண்ட தொகைக்கும் அதிகமாக கணக்கு போட்டு உள்ளது● ஜெயலலிதா பெற்ற பரிசுப் பொருட்களை, சட்டப்பூர்வ வருமானமாக ஏற்க முடியாது என, சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆனால், பரிசுப் பொருட்களை வருமானமாக, உயர் நீதிமன்றம் எடுத்து கொண்டு உள்ளது. மேற்கூறிய விஷயங்களை சரி செய்தால், வருமானத்துக்கு அதிகமான சொத்தின் மதிப்பு, 35.73 கோடி; வருமானத்தை கணக்கிட்டால், 16.92 கோடி ரூபாய். சதவீத கணக்குப்படி பார்த்தால், 211 சதவீதம். எனவே, இந்த நடவடிக்கை மட்டுமே, நான்கு பேருக்கும் தண்டனை விதிப்பதற்கு போதுமானது.இவையே, கர்நாடக அரசு தரப்பில், உச்ச நீதிமன்றத்தில், ஆச்சார்யா முன்வைத்த வாதங்கள்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
17-பிப்-201707:12:32 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN ஓர் வழக்கின் தீர்ப்புக்கு அதன் அடிப்படை ஆதாரம் >>.அதன் உண்மைத் தன்மையைப்பொருத்தும் சாட்சிகளின் வாய்மையைப்பொருத்தே அமையும். நீதி மான்களுக்கு அதுதான்பிரதான காரணம். மேலும் காலம் கடந்து நாள் பட்ட தீர்ப்பு அவ்வளவாக -இருக்க முடியாது.நீதிமான்கள் விருப்பு வெறுப்பு அற்ற மகான்கள் அல்லவே.அதாவது கடவுள் அல்லவே. ஒருவருக்கு தெரியும் இருள் மற்றவருக்கு வெளிச்சமாகிறது என்றால் அவர்களின் பார்வையின் தன்மையால் தான். மனக்கோயில் கட்டிய அடியாருக்குத்தான் இறைவன் காட்சி கொடுத்தார்>>>>>>>>>>
Rate this:
Share this comment
Cancel
Mohan Kumar - chennai,இந்தியா
17-பிப்-201707:02:25 IST Report Abuse
Mohan Kumar அந்த நீதிபதிக்கு என்ன தண்டனை? தெரிந்தும் தவறாக கூறி தப்புவிக்க வைத்துள்ளார்
Rate this:
Share this comment
NRK Theesan - chennai,இந்தியா
17-பிப்-201711:57:30 IST Report Abuse
NRK Theesanஅவருடைய தீர்ப்பைத்தான் தமிழகம் முழுவதும் கொண்டாடியது .இப்பொழுது தமிழகத்தை காப்பாற்ற இந்த தீர்ப்பை சகித்துக்கொள்கிறோம் .அன்று தமிழகத்தை காப்பாற்றியதால் வரவேற்றோம் .இது தமிழக நலன் என்ற பார்வையில் தான் பார்க்கப்படுகிறதை தவிர மக்களின் பார்வை தேச நலன் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை