'ரூ.10 கோடி கட்டாமல் சசி தப்ப முடியாது' | 'ரூ.10 கோடி கட்டாமல் சசி தப்ப முடியாது'| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'ரூ.10 கோடி கட்டாமல் சசி தப்ப முடியாது'

Added : பிப் 17, 2017 | கருத்துகள் (43)
Advertisement
'ரூ.10 கோடி கட்டாமல்  சசி தப்ப முடியாது'

கோவை : 'சசிகலா உள்ளிட்ட மூவரும், தலா, 10 கோடி ரூபாய் அபராதம் செலுத்த தவறினால், வழக்கில் காட்டப்படாத சொத்துக்களை ஜப்தி செய்வதற்கு, நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும்' என, சீனியர் வக்கீல்கள் கூறினர்.

சொத்து குவிப்பு வழக்கில், சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு, நான்காண்டு சிறை, 10 கோடி ரூபாய் அபராதம் விதித்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து, மூவரும் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். தண்டனை விதிக்கப்பட்ட மூவரும், 10 கோடி ரூபாய் அபராத தொகையை, கோர்ட்டில் உடனடியாக செலுத்தவில்லை.

இது குறித்து, வக்கீல் விவேகானந்தன் கூறியதாவது: கோர்ட்டில் தண்டனை அளிக்கப்பட்டவருக்கு அபராதம் விதிக்கப்பட்டால், உடனடியாக செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில், அவர்கள் சொத்துக்களை ஜப்தி செய்ய, கோர்ட் உத்தரவு பிறப்பிக்கும். சொத்துக் குவிப்பு வழக்கில், சசிகலா உள்ளிட்ட மூவருக்கு, 10 கோடி அபராதம் கட்ட உத்தரவிடப்பட்டுள்ளது.

அபராதம் கட்ட தவறும் பட்சத்தில், வருவாய் துறை மூலமாக, அபராதம் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அவர்களது பெயரில் உள்ள, வழக்கில் சேர்க்கப்படாத சொத்துக்களை, பொது ஏலத்தில் விடுவதற்கு கோர்ட் உத்தரவிடும்.
வக்கீல் ஞானபாரதி

தண்டனை விதிக்கப்பட்ட வழக்குகளில், அப்பீல் இருந்தால் உடனடியாக அபராதம் செலுத்த தேவையில்லை. ஆனால், சசிகலா உள்ளிட்ட மூவருக்கும், உச்ச நீதிமன்றத்தால் இறுதி தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளதால், அபராத தொகையை செலுத்த வேண்டும்.

அபராதம் கட்ட தவறினால், வருவாய் துறை மூலமாக, வழக்கில் சேர்க்கப்படாத சொத்தை ஏலத்தில் விட்டு, அரசுக்கு செலுத்த, மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிடப்படும்.
அபராதம் கட்ட தவறினால், வழக்கில் சேர்க்கப்பட்ட சொத்துக்கள் தவிர, வேறு சொத்துக்கள் இல்லை என, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அவை உறுதி செய்யப்பட்டால் மட்டுமே, கூடுதல் தண்டனையை அனுபவித்து, அபராத தொகைக்கு ஈடு கட்ட முடியும்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GOPALASAMY - bengaluru,இந்தியா
17-பிப்-201723:10:31 IST Report Abuse
GOPALASAMY பத்து கோடி எங்களுக்கு பத்து பைசா மாதிரி .
Rate this:
Share this comment
Cancel
karthi - MADURAI,இந்தியா
17-பிப்-201716:59:47 IST Report Abuse
karthi 10 கோடி ?. இது ஒரு விஷயமே கிடையாது அவுங்களுக்கு .
Rate this:
Share this comment
Cancel
Matram Ondre Marathathu - Chennai,இந்தியா
17-பிப்-201715:58:23 IST Report Abuse
Matram Ondre Marathathu இது நடக்கவே நடக்காது. நாளை இவரின் பினாமி ஓட்டெடுப்பில் ஜெயித்தால். JJ சொத்து, இவரின் சொத்து, அபராதம் எதுவுமே செய்ய முடியாது. அரசு நிர்பந்திக்க வேண்டும். இவரின் அரசு இவரை நிர்பந்திக்குமா? மீண்டும் யாரவது கீழ் கோர்ட்டிலிருந்து உச்ச நீதிமன்றம் வரை வழக்கு போடவேண்டும். ஊழல் வழக்கே 21 வருடம் ஆனது. இந்த வழக்கு குறைந்தது 20 வருடம் ஆகும். அதற்குள் இவர்கள் உயிரோடு இருந்தால் தான். மக்கள் முட்டாளாக்கப்படுவார்கள். நாமும் தினமும் TV முன் அமர்ந்து பார்க்கவேண்டியது தான் பிரேக்கிங் நியூஸ் வருமா என்று. வாழ்க பணநாயகம்.
Rate this:
Share this comment
Cancel
vnatarajan - chennai,இந்தியா
17-பிப்-201714:43:05 IST Report Abuse
vnatarajan வழக்கு பதிந்த 1997 வருடத்திற்கு பிறகு சேர்த்த சொத்துக்கள் பினாமி பெயரில் ஏராளமாக இருக்கும் அவற்றை விற்று உடனே கட்ட சொல்லி கட்டாய படுத்த வேண்டும். இல்லாவிட்டால் சிறை வாசத்தை நீடிக்கவேண்டும் இதுதான் என்னைப்போன்ற மக்களின் விருப்பம்
Rate this:
Share this comment
Cancel
M.Guna Sekaran - Madurai,இந்தியா
17-பிப்-201713:56:04 IST Report Abuse
M.Guna Sekaran அது தான் சசி ஜெ.ஜெ சமாதி மேல 3 முறை சபதம் செய்து இருக்குல? அப்புறம் என்ன விரைவில் அபராதம் கட்ட படும்.
Rate this:
Share this comment
Cancel
Rajan. - singapore,சிங்கப்பூர்
17-பிப்-201712:56:35 IST Report Abuse
Rajan. 48000 கோடியில் 10 கோடி ஜுஜுபி
Rate this:
Share this comment
Cancel
Mayilkumar - cape town,தென் ஆப்ரிக்கா
17-பிப்-201712:53:44 IST Report Abuse
Mayilkumar இந்த குடும்பத்தால் மன்னார்குடிக்கு இருந்த செல்லப்பெயர் (மன்னை), நல்ல பெயர் எல்லாம் போய்விட்டது. மன்னார்குடி மதில் அழகு என்று சொல்லுவார்கள், ராஜகோபால ஸ்வாமி மிகவும் பிரசித்தி பெற்ற தெய்வம் வரப்பிரசாதி. சசி குடும்பத்தினர் செய்த இமய மலையை விடவும் அதி உயரமான கொடூரங்கள், கொள்ளைகள் சட்ட விரோத செயல்கள் மன்னார்குடி ஊரின் பெருமையை குலைக்க செய்து விட்டது, சசிக்கு படிக்கத் தெரிந்தால் "கருட புராணம்" புத்தகம் வாங்கி கொடுக்கவும். அதை படித்தாவது கொஞ்சம் பாவ புண்ணியத்தின் பலனை உணரட்டும்.
Rate this:
Share this comment
Cancel
Balaji - Bangalore,இந்தியா
17-பிப்-201712:09:47 IST Report Abuse
Balaji உடனே ஜப்தி செய்யவேண்டும். ஏன் இந்த டிலே .
Rate this:
Share this comment
Cancel
Thamizhan - Pondy,இந்தியா
17-பிப்-201711:40:07 IST Report Abuse
Thamizhan சசி 10 கோடி அபராதம் கட்டும் போது, அதை எப்படி சசி சம்பாதித்தார், அதற்கு வருமானவரி கட்டியுள்ளாரா, அது கொள்ளை அடித்த பணமா என்பதையெல்லாம் கோர்ட் சரிபார்த்த பின்னரே ஏற்க வேண்டும் என்று சட்டத்தில் இருக்கும் என்று நம்புகிறேன். சட்ட வல்லுநர்கள் விளக்க வேண்டுகிறேன்
Rate this:
Share this comment
Cancel
Thamizhan - Pondy,இந்தியா
17-பிப்-201711:33:11 IST Report Abuse
Thamizhan 10 கோடி அபராதம் கட்டும் போது, அதை எப்படி சசி சம்பாதித்தார், அதற்கு வருமானவரி கட்டியுள்ளாரா, அது கொள்ளை அடித்த பணமா என்பதையெல்லாம் கோர்ட் சரிபார்த்த பின்னரே ஏற்க வேண்டும் என்று சட்டத்தில் இருக்கும் என்று நம்புகிறேன். சட்ட வல்லுநர்கள் விளக்க வேண்டுகிறேன்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை