PRIVATE SECURITY FOR MLA'S IN KOOVATHUR? | எம்.எல்.ஏ.,க்களுக்கு வெளி மாநில குண்டர்கள் பாதுகாப்பு?| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எம்.எல்.ஏ.,க்களுக்கு வெளி மாநில குண்டர்கள் பாதுகாப்பு?

Updated : பிப் 17, 2017 | Added : பிப் 17, 2017 | கருத்துகள் (44)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
 எம்.எல்.ஏ.,க்களுக்கு வெளி மாநில குண்டர்கள் பாதுகாப்பு?

கூவத்தூர்: கூவத்தூர் சொகுசு விடுதியில் தங்கியுள்ள எம்.எல்.ஏ.,க்கள் பன்னீர் அணிக்கு தப்பி செல்வதை தடுக்க சசி தரப்பில் இருந்து வெளி மாநில குண்டர்கள் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த 10 நாட்களாக ஏற்பட்ட அரசியல் பரபரப்பு சூழ்நிலையில் முக்கிய திருப்பமாக நேற்று மாலை சசிகலா தரப்பு அ.தி.மு.க., சார்பில் இடைப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவியேற்றார். கவர்னர் வித்யாசாகர் ராவ் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

நிகழ்ச்சியில் சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிந்ததும் இரவு 7 மணிக்கு அவர்கள் மீண்டும் கூவத்தூர் சொகுசு விடுதியிலேயே அடைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் சட்டசபையில் பெரும்பான்மையை நிருப்பிக்க இடைப்பாடி பழனிச்சாமிக்கு 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நாளை (18 ம்தேதி) சட்டசபையை கூட்டி பெரும்பான்மையை முதல்வர் பழனிச்சாமி நிருபிக்க உள்ளார்.

இதற்கிடையில் கூவத்தூரில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் ஓ.பி.எஸ்., அணிக்கு தப்பி செல்வதை தடுக்க எம்.எல்.ஏ.,க்கள் தங்கியுள்ள ரிசார்ட்டில் சசிகலா தரப்பு சார்பில் வெளிமாநிலங்களில் இருந்து தனியார் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ayathuray Rajasingam - Scarborough ,கனடா
18-பிப்-201703:31:20 IST Report Abuse
Ayathuray Rajasingam இந்தக் குண்டர்களை காவல் துறையினர் கைது செய்து நாட்டின் ஒழுங்குக்கும் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் நடமாடுகிறார்கள் என வழக்கைத் தொடரலாம். மறுபுறம் சசிகலா கும்பலை பேர்வழிகளுக்கும் இதில் தொடர்பு இருக்கேனா மேலும் விசாரணையை தொடரலாம்.
Rate this:
Share this comment
Cancel
Santhosh - chennai,இந்தியா
17-பிப்-201715:53:20 IST Report Abuse
Santhosh தலைப்பு செய்திகள்: இன்று முதல் சட்டசபை கூவத்தூரில் உள்ள "Golden Bay Resorts" "தங்க கடற்கரை தங்குமிடம்" என்ற பகுதிக்கு மாற்றப்பட உள்ளது. இங்கேயே நாளைய பெரும்பான்மை நிரூபிப்பு கூட்டம் நடைபெறும். திமுக மற்றும் ஓபிஎஸ் அணியினர் யாரும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது சிறப்பு தகவல் என எமது நிருபர்களின் கையில் சத்தியம் செய்து கூறப்பட்டுள்ளுது. தமிழக மக்கள் நலனுக்காக சசிகலாவை தமிழக சிறைக்கு மாற்றப்படும் கோப்பில் முதல் கையெழுத்திடுவார் முதல்வர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் அடுத்த 9 சில்லறை ஆண்டுகளின் முதல்வர் தினகரனுக்கு அணைத்து (233) MLA க்களின் ஆதரவு கடிதம் கிடைத்துள்ளது. நிரந்தர முதல்வர் சசிகலா சிறையில் இருந்து விடுபட்டதும் RK நகர் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுவர். சட்டமாவது மண்ணாங்கட்டியாவது? இவர்கள் வைப்பதே சட்டம். இவர்கள் நடத்துவதே ராஜ்ஜியம்.
Rate this:
Share this comment
Cancel
Palanisamy PK - Chennai,இந்தியா
17-பிப்-201713:37:41 IST Report Abuse
Palanisamy PK அ. தி. மு. க. ஏம் எல் ஏ க்களே குண்டர்கள் தான். அவர்களுக்கு எதற்கு குண்டர்கள் பாதுகாப்பு. முற்றிலும் தேவையற்றது.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
17-பிப்-201711:45:34 IST Report Abuse
K.Sugavanam ராஜ்யம்ன்னு சொல்லுங்க..
Rate this:
Share this comment
Cancel
Indian Sandwalker - chenai,இந்தியா
17-பிப்-201711:27:23 IST Report Abuse
Indian Sandwalker தமிழ்நாடே சிறைக்குள் தான் சிறை ஆட்சி நல்ல தலைப்புல்ல
Rate this:
Share this comment
Cancel
Janarthanan - Al Khor,கத்தார்
17-பிப்-201711:01:50 IST Report Abuse
Janarthanan மறுபடியும் சுயமா யோசித்து முடிவு எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறோம். எதிர்காலத்தை நினைத்து செயல்படவும் .இந்த கூட்டமிடம் அடிமையா வாழ்க்கையை ஓட்டவேண்டுமா?
Rate this:
Share this comment
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
17-பிப்-201710:54:34 IST Report Abuse
Chandramoulli மிக கேவலமாக உள்ளது ஜனநாயகம். இதற்காகவா நமக்கு சுதந்திரம் கிடைத்தது. கிடைக்கமாலே இருந்து இருக்கலாம் .
Rate this:
Share this comment
Cancel
Ramesh Sundram - Muscat,ஓமன்
17-பிப்-201710:15:40 IST Report Abuse
Ramesh Sundram ரஜினிகாந்த் எந்திரம் 2 வருகிறது எல்லோரும் தயாராக இருங்கள் cut அவுட் இருக்கு பால் அபிஷேகம் செய்ய /கிடா வெட்ட
Rate this:
Share this comment
RENU - Chennai,இந்தியா
17-பிப்-201712:22:25 IST Report Abuse
RENUபதில் அவருக்கே...
Rate this:
Share this comment
Cancel
Tamil V - Tamil Nadu,இந்தியா
17-பிப்-201709:51:26 IST Report Abuse
Tamil V விரைவில் தலைவி தமிழக ஜெயிலுக்கு மாற்றப்படுவார் அப்புறம் 124 MLA + எடப்பாடி ஜெயிலில் இருந்து ஆட்சி செய்வார்கள் குண்டாஸ் பாதுகாப்போடு . தொகுதி பக்கம் election வரை வரமாட்டார்கள் . நாமும் மறந்து மன்னித்து ஓட்டு போடுவோம் . வாழ்க்க தமிழகம்
Rate this:
Share this comment
Cancel
Panni Moonji Vaayan - chennai,இந்தியா
17-பிப்-201709:46:15 IST Report Abuse
Panni Moonji Vaayan குயிலை பிடிச்சு கூண்டில் அடைச்சு பாட சொல்லுகிற உலகம், மயிலை பிடிச்சு மண்டைய ஒடைச்சு பாடை கட்டுகிற உலகம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை