சசிகலாவின் மூன்று நிபந்தனைகள்; முதல்வர் பழனிச்சாமி கலக்கம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: தமிழகத்தின் புதிய முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றுக் கொண்டிருக்கிறார். அவருக்கு, உள்துறை, போலீஸ், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், நிதி நிர்வாகம், பொதுப் பணி, நெடுஞ்சாலை என, முக்கியமான துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.


ஆலோசனை:எடப்பாடி பழனிச்சாமியை கவர்னர் பதவியேற்க அழைப்பு விடுத்ததும், அவர், அ.தி.மு.க., துணை பொதுச் செயலர் தினகரனுடன், அமைச்சரவையில் இடம் பெற வேண்டியவர்கள் குறித்து, ஆலோசனை நடத்தினார்.

அப்போது, கட்சியின் பொதுச் செயலர் கொடுத்திருக்கும் பட்டியல் இதுதான். இதில் மாற்றம் செய்ய வேண்டும் என்றால், பெங்களூருவில் உள்ள, பொதுச் செயலர் சசிகலாவின் ஒப்புதல் பெற வேண்டும் என்றும் சொல்லி, அந்தப் பட்டியலைக் கொடுத்தார் தினகரன்.

அந்தப் பட்டியலில் இடம்பெற்றவர்கள்தான், தற்போது, அமைச்சர்களாகி உள்ளனர். பட்டியலைப் படித்துப் பார்த்த பழனிச்சாமி, எனக்கு மட்டும் இத்தனை துறைகள் எதற்கு, அதை வேறு சிலருக்கு பிரித்துக் கொடுக்கலாமே என்று சொல்லியிருக்கிறார்.


தனித்து செயல்பட வேண்டாம்:முக்கியமான பொறுப்புகள் அனைத்தையும் உங்களிமே கொடுக்க வேண்டும் என்பதால்தான், சசிகலா, இப்படி செய்திருக்கிறார் என்று கூறிய தினகரன், பொதுச் செயலர், ஆட்சி நிர்வாகத்தை கவனிப்பதற்கு உங்களை நியமித்திருந்தாலும், அதை நீங்கள் மட்டுமே தனித்து செய்ய வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்.

ஆட்சி நிர்வாகத்தில் எடுக்க வேண்டிய எந்த முக்கிய முடிவானாலும், என்னிடமும், திவாகரனிடமும், நடராஜனிடமும் தெரிவித்து ஒப்புதல் பெற்றே, அதை செயல்படுத்த அறிவுறுத்தி இருக்கிறார்.

அதனால், ஆட்சி நிர்வாகத்தில் உள்ள அனைத்து விவரங்களையும் மூவரிடமும் அப்டேட் செய்து, மூவரின் வழிகாட்டுதலோடு ஆட்சியை நடத்துங்கள். இதற்கு யார் இடையூறாக இருந்தாலும், அவர்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்.


ஒப்புதலுக்கு உத்தரவு:இதற்கிடையில், இன்னொரு விஷயத்தையும் நீங்கள் கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என்று சொல்லி, மேலும் ஒரு நிபந்தனையை சொல்லியிருக்கிறார். நீங்கள் முதல்வராக இருந்தாலும், வாரத்தில் ஒரு நாள், பெங்களூரு பரப்பன அக்ரஹாராவில் உள்ள சசிகலாவை கட்டாயம் சந்தித்தாக வேண்டும். ஆட்சி நிர்வாகத்தில் நடக்கும் அத்தனை முக்கிய விஷயங்களையும் அவரிடமும் சொல்லி, ஒப்புதல் பெற வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்.

இப்படி நிபந்தனை மேல் நிபந்தனை விதித்து, ஆட்சி நிர்வாகப் பொறுப்பை கொடுத்திருப்பதால், முதல்வராக பதவியேற்ற சந்தோஷத்தைக் காட்டிலும், நிபந்தனைகளை நினைத்து அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறார் முதல்வர் பழனிச்சாமி என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (167)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indian Sandwalker - chenai,இந்தியா
22-பிப்-201708:53:12 IST Report Abuse
Indian Sandwalker மத்திய அரசு கண்ணை மூடிக்கொண்டுவிட்டதாகவே நினைக்கிறோம்
Rate this:
Share this comment
Cancel
Ramu - Birmingham,யுனைடெட் கிங்டம்
21-பிப்-201718:47:52 IST Report Abuse
Ramu போகிற போக்கை பார்த்தால் இந்த பழனிசாமியே, பன்னீர்செல்வம் பக்கம் வந்துவிடுவார் போலிருக்கே? ஒரு முதலமைச்சர் வாரம் ஒருமுறை ஜெயிலுக்கு போய், ஓர் ஊழல் குற்றவாளியை சந்தித்து வந்தால் நாடு எப்படி உருப்படும்?
Rate this:
Share this comment
Cancel
Brindha Sundar - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
20-பிப்-201716:27:56 IST Report Abuse
Brindha Sundar கேவலம் இதற்கு அவர் வேலையில்லாமலே இருந்திருக்கலாம். பிச்சை எடுத்து வாழ்வை நடத்தலாம். பினாமி அரசு என்பது கண்டிப்பாக பொருந்தும்.
Rate this:
Share this comment
Cancel
Bala Subramanian - Los Angeles CA,யூ.எஸ்.ஏ
20-பிப்-201714:48:41 IST Report Abuse
Bala Subramanian மிகவும் கேவலமாக இருக்கு
Rate this:
Share this comment
Cancel
Narendran - Atlanta,யூ.எஸ்.ஏ
18-பிப்-201704:12:43 IST Report Abuse
Narendran மன்னார்குடி மாபியா பண்ணப்போகும் கொள்ளைக்கு ஒரு பலி ஆடுதான் இந்த எடப்பாடி. அவர்கள் அடித்து விட்டு இவனை மாட்டி விடுவார்கள். காத்திருக்குது பெங்களூரு அல்லது திஹார். அனுபவி ராஜ அனுபவி..
Rate this:
Share this comment
Cancel
GOPALASAMY - bengaluru,இந்தியா
17-பிப்-201723:03:59 IST Report Abuse
GOPALASAMY ஒரு சிறு குழந்தை கூட சொல்லி விடும் , கூடிய விரைவில் தினகரன் முதல் அமைச்சர் ஆவார் என்றும் , பிறகு , அது வரை தாக்கு பிடித்தால் பிச்சையாக நெடுஞ்சாலை துறை தரப்படும் என்றும் .
Rate this:
Share this comment
Cancel
Hari Sankar Sharma - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-பிப்-201721:32:34 IST Report Abuse
Hari Sankar Sharma வாரம் ஒருமுறை பெங்களூர் பயணம் அதுவும் நடைமுறைகளை விளக்கி ஒப்புதல் வாங்கவேண்டும் திருவாளர்கள் தினகரன், திவாகரன் மற்றும் நடராசன் இவர்களின் தினப்படி குறுக்கீடுகள் இவற்றுக்கெல்லாம் ஒப்புக் கொண்டு ஒரு முதல்வர் பதவி அந்தப் பழனி முருகனுக்கே அடுக்காது... அவர் தான் பழனிச்சாமியைக் காப்பாற்ற வேண்டும் அதிகாரம் எல்லாம் அவர்கள் பக்கம். பொறுப்பு மட்டும் முதல்வர் முழுவதுமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் நாளைக்கு கிடைக்கும் ஒரு சந்தர்ப்பத்தை உறுப்பினர்களும் வீணாக்கக் கூடாது.. அந்த முதலமைச்சரும் வீணாக்கக்கூடாது....அப்புறம் ஐயோ ஐயோ என்று கூக்குரலிட்டாலும் ஒரு பயனுமில்லை.
Rate this:
Share this comment
Cancel
gsik - Chennai,ஐஸ்லாந்து
17-பிப்-201721:31:36 IST Report Abuse
gsik இப்படி ஒரு பதவி தேவையா. அப்படியே அந்த அம்மா கிட்ட சொல்லி அவர் ரூமுக்கு பக்கத்தில ஒரு ரூம் முன் பதிவு செய்ய சொல்லுங்க.
Rate this:
Share this comment
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
17-பிப்-201719:56:25 IST Report Abuse
தமிழர்நீதி காலில் விழவேண்டும் , கை கூப்ப வேண்டும் இதெல்லாம் கூட இருக்கும் . ஒருமுறை சிறை சென்று வந்தால் தமிழக மக்களிடம் நல்ல பேரு கிடைக்கும் . சீக்கிரம் மெரினா போராட்டம் தமிழகம் எங்கும் எதிர்பார்க்கலாம் . கல்தோன்றி மண் தோன்றா காலத்து மூத்த குடி , இப்படி கொள்ளைக்கும்பலிடம் மாட்டி தவிக்குது .
Rate this:
Share this comment
Cancel
Thangavel - karur,இந்தியா
17-பிப்-201719:22:06 IST Report Abuse
Thangavel பதவி வரும் போது பணிவு வர வேண்டும் துணிவும் வரவேண்டும். இல்லை என்றால் விலகி விட வேண்டும். சுய மரியாதையோடு ஆட்சி நடத்த முடியாது என நினைத்தால் தேர்தலை சந்திக்கும் துணிவு வர வேண்டும், மக்களை சந்தித்தால் தெளிவு நிச்சயம் பிறக்கும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்