அரசு பங்களாவை காலி செய்யுங்க!: பன்னீருக்கு பறந்தது 'நோட்டீஸ்' | அரசு பங்களாவை காலி செய்யுங்க!: பன்னீருக்கு பறந்தது 'நோட்டீஸ்'| Dinamalar

அரசு பங்களாவை காலி செய்யுங்க!: பன்னீருக்கு பறந்தது 'நோட்டீஸ்'

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement
அரசு பங்களாவை காலி செய்யுங்க!: பன்னீருக்கு பறந்தது 'நோட்டீஸ்'

புதிய முதல்வராக, இடைப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற சிறிது நேரத்தில், 'அரசு பங்களாவை உடனே காலி செய்ய வேண்டும்' என, 'நோட்டீஸ்' அனுப்பி, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, நெருக்கடி தரப்பட்டுள்ளது.

தமிழக முதல்வராக, நேற்று(பிப்.,16) வரை இருந்த, பன்னீர்செல்வம், 2011 முதல், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு பங்களாவில் வசித்து வருகிறார். இங்கு இருந்தபடியே, சசிகலாவுக்கு எதிரான நடவடிக்கைகளை, மேற்கொண்டார்.


நெருக்கடி:


தமிழகத்தின் புதிய முதல்வராக, இடைப்பாடி பழனிச்சாமி நேற்று பொறுப்பேற்றார். இதனால், முதல்வர் பதவி பறிபோய், பன்னீர்செல்வம், எம்.எல்.ஏ.,வாக மட்டுமே உள்ளார். இடைப்பாடி பழனிச்சாமி பொறுப்பேற்ற சிறிது நேரத்தில், பொதுப்பணித்துறை மூலம், பன்னீர்செல்வத்திற்கு திடீர் நெருக்கடி தரப்பட்டுள்ளது.

பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: பொதுப்பணித்துறை செயலர் அலுவலகம் தான், அமைச்சர்களுக்கு பங்களாக்களை ஒதுக்குகிறது. பன்னீர்செல்வம், தற்போது, எம்.எல்.ஏ.,வாக மட்டுமே உள்ளார். இதனால், அரசு பங்களாவை காலி செய்ய வைக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. துறை செயலர் அலுவலகத்தில் இருந்து, தபால் மூலம், 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது. இன்று, அவருக்கு நோட்டீஸ் கிடைக்கும். நோட்டீஸ் கிடைத்தபின், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம், அரசு பங்களாவை அவர் காலி செய்ய வேண்டும்.

இல்லை என்றால், மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, கழிவுநீர் குழாய் இணைப்புகளை துண்டிக்க வாய்ப்புள்ளது. இந்த பங்களா, புதிதாக அமைச்சரான செங்கோட்டையனுக்கு வழங்கப்படலாம்; அது, இன்னும் முடிவாகவில்லை. பன்னீர்செல்வத்திற்கு, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் விடுதியில், அறை ஒதுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

நமது நிருபர் -

Advertisement
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (67)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kannagi - chennai,இந்தியா
17-பிப்-201717:02:58 IST Report Abuse
kannagi அப்போ இவங்க எப்பிடி போயஸ் இல்லத்தில் இருக்கிறாங்க... இதுக்கெல்லாம் பயப்படவரில்லை பன்னீர்செல்வம். அல்ப புத்தியை காமிச்சுட்டாங்க.ஒரே நாள் ல்ல, அப்போ அரசாங்கம் எப்பிடி நடத்துவாங்க தெரியுது...
Rate this:
Share this comment
Cancel
Dhanraj Jayachandren - Madurai,இந்தியா
17-பிப்-201715:12:14 IST Report Abuse
Dhanraj Jayachandren "என் செயலை நான் அறிவேன், என் கடமை நான் மறவேன், எதுவாக ஆனாலும் ஆகட்டுமே" ஆப்ஸ் உடன் மக்கள் இருக்கிறார்கள் , (முதல்வன் படத்திலயும் அர்ஜுன் வீட்டுக்கு நோட்டீஸ் அனுப்புவாங்க)
Rate this:
Share this comment
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
17-பிப்-201715:11:26 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam ஏன் இந்த அவசரம்? முதலில், ஜெயலலிதா அவர்களின் போயஸ் தோட்ட வீட்டில் உள்ளவர்களை வெளியேற்றுங்கள். அதுமட்டுமல்ல, உங்கள் பெரும்பான்மையை சபையில் உறுதிப்படுத்தங்கள். இன்னுமொரு தேர்தலை தடுக்க முயலுங்கள். உங்கள் தொகுதிக்குப் போய் மக்களின் நிலைப்பாட்டை அறிந்து, வேண்டிய நடவடிக்கைகளை எடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
nimmi - Dindigul,இந்தியா
17-பிப்-201713:16:54 IST Report Abuse
nimmi சோதனைகள் வரும்போது, அரசியலில் துன்பப்பாட்டுதான் ஆக வேண்டும். என்ன செய்ய.
Rate this:
Share this comment
Cancel
Mohan Ramachandran - chennai,இந்தியா
17-பிப்-201713:12:43 IST Report Abuse
Mohan Ramachandran என்ன வேகம் . என்ன வேகம்
Rate this:
Share this comment
Cancel
Panneerselvam Chinnasamy - chennai,இந்தியா
17-பிப்-201712:59:27 IST Report Abuse
Panneerselvam Chinnasamy டெல்லியில் பழைய மந்திரிகள் வீட்டை காலி செய்ய வருஷ கணக்கில் எடுத்து கொள்கிறார்கள்... இங்கு இவ்வளவு கெடு பிடிக்கிறார்கள்.. அதும் நேற்று வரை பாஸ் ஆக இருந்தவருக்கு நெருக்கடி கொடுப்பது கொஞ்சமும் நாகரிகம் இல்லை. ஓ .. நாகரிகம் என்றால் என்ன என்பதே தெரியாத கூட்டம்
Rate this:
Share this comment
Cancel
Mariadoss E - Trichy,இந்தியா
17-பிப்-201712:58:18 IST Report Abuse
Mariadoss E மக்கள் பிரச்சனைகளிலயும் இந்த மாதிரியே துரித நடவடிக்கை எடுத்தா ரொம்ப நல்லா இருக்கும்...செய்வீங்களா நீங்க செய்விங்களா?
Rate this:
Share this comment
Cancel
Chandramoulli - Mumbai,இந்தியா
17-பிப்-201712:14:25 IST Report Abuse
Chandramoulli மும்பை தீவிரவாதிகளின் தாக்குதல் 26 /11 / 2008 அன்று நடந்தது. மகாராஷ்டிரா அரசின் உள்துறை மந்திரி பாட்டீல் அவர்கள் தவறுதலாக ஒரு வார்த்தை சொன்னார். அதை வைத்து கொண்டு அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். உடன் ராஜினாமா செய்து விட்டு மந்திரிக்கு உரிய அரசின் சொகுசு பங்களாவை விட்டு 6 மணி நேரத்தில் காலி செய்து சொந்த ஊருக்கு திரும்பி சென்றார். நேர்மையான மனிதர் அந்த பாட்டீல். அதை போல் நீங்களும் முன் உதாரணமாக இருக்க வேண்டும் நாளை வாக்கெடுப்பு முடிந்தவுடன் .
Rate this:
Share this comment
Cancel
Jagath Venkatesan - mayiladuthurai ,இந்தியா
17-பிப்-201712:09:44 IST Report Abuse
Jagath Venkatesan போகட்டும்....கட்சி பொது செயலாளருக்கு ...இப்போது எங்கு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது ..யாரால் ஒத்துக்கப்பட்டுள்ளது...
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
17-பிப்-201712:02:16 IST Report Abuse
K.Sugavanam போங்கடா நீங்களும் உங்கள் அரசு வீடும்னு தூக்கியெறிஞ்சிட்டு போராட்டத்தை முன்னெடுக்கணும் OPS அவர்கள்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.