பள்ளி மாணவியை கடத்திய 4 மாணவர்கள் சிக்கினர்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவியை கடத்திய 4 மாணவர்கள் சிக்கினர்

Added : பிப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அரக்கோணம்: மாணவியை கடத்திய, நான்கு கல்லூரி மாணவர்களை, போலீசார் கைது செய்தனர். அரக்கோணம் அடுத்த நெமிலி அருகே கீழ்வீதி கிராமத்தை சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் மாணவி ஒருவர், கடந்த, 5ல் மாயமானார். இதுகுறித்து மாணவியின் தந்தை கொடுத்த புகாரின் படி, நெமிலி போலீசார் வழக்கு பதிவு செய்து, சென்னையில் இருந்து மாணவியை மீட்டனர். விசாரணையில், கீழ்வீதியைச் சேர்ந்த முரளி, 21, என்பவர், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அந்த மாணவியை சென்னைக்கு கடத்திச் சென்றதும், இந்த கடத்தலுக்கு அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன், 19, தியாகு, 22, ஆனந்தன், 21, ஆகியோர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. நெமிலி போலீசார் இவர்கள், நான்கு பேரையும் நேற்று கைது செய்தனர். கைதான, நான்கு பேரும், சென்னையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில், கம்பியூட்டர் சயின்ஸ், முதலாம் ஆண்டு படித்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை