கட்டடம் இடிந்து 2 பேர் படுகாயம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கட்டடம் இடிந்து 2 பேர் படுகாயம்

Added : பிப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வேலூர்: பழைய கட்டடம் இடிந்து விழுந்ததில், இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, ஆறு வழிச்சாலையாக மாற்றப்பட்டு வருகிறது. வேலூர் மாவட்டத்தில் இந்த பணிகள் பெரும்பாலும் முடிந்து விட்டது. ஆனால் ஆம்பூரில் கடந்த சில நாட்களாக பணி நடந்து வருகிறது. இதற்காக, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் மெயின் ரோட்டில் உள்ள 108 கடைகள், கட்டடங்கள், சினிமா தியேட்டர்களை இடிக்க நோட்டீஸ் கொடுத்தனர். இதற்கான நஷ்டயீடு வழங்கப்பட்ட நிலையில், தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் இந்த கட்டடங்களை இடித்து வந்தனர். நேற்று மாலை, 5:00 மணிக்கு, ஆம்பூர் மெயின் ரோட்டில் ஓ.ஏ.கே., தியேட்டர் அருகில் கட்டடங்களை இடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கிருந்த பழமையான பாதி இடிந்த நிலையில் இருந்த ஒரு கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. அப்போது, கட்டடத்தின் அருகில் நின்று கொண்டிருந்த ஆம்பூரை சேர்ந்த கங்காதரன், 34, முரளி, 25, ஆகியோர் மீது இடிபாடுகள் விழுந்ததில் அவர்கள் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு, ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை