துக்க வீட்டில் சாப்பிட்ட 30 பேருக்கு வாந்தி, மயக்கம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துக்க வீட்டில் சாப்பிட்ட 30 பேருக்கு வாந்தி, மயக்கம்

Added : பிப் 17, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கடலாடி: திருவண்ணாமலை அருகே துக்க வீட்டில் சாப்பிட்ட, 30 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், கடலாடி அருகே அருணகிரி மங்கலத்தை சேர்ந்தவர் மஞ்சுநாதன், 55. இவர் கடந்த வாரம் உடல்நலக் குறைவால் இறந்தார். இவருக்கு, 8ம் நாள் துக்க நிகழ்ச்சி நேற்று காலை, 11:00 மணிக்கு, அவரது வீட்டில் நடந்தது. அதில் அவர்களது உறவினர்கள், 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். அவர்களுக்கு உணவு பரிமாறப்பட்டது. இதை சாப்பிட்ட, 30 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து, கடலாடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasiniventhan Muthuramalingam - Bangalore,இந்தியா
17-பிப்-201719:27:47 IST Report Abuse
Kasiniventhan Muthuramalingam சோதனை மே ல சோதனை டா சாமி..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை