தார்ச்சாலை அமைக்க மக்கள் கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தார்ச்சாலை அமைக்க மக்கள் கோரிக்கை

Added : பிப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மல்லசமுத்திரம்: கல்லுபாளையத்தில் உள்ள மண் சாலையால், வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சிரமப்பட்டு வருகின்றனர். மல்லசமுத்திரம் ஒன்றியம், குருசாமிபாளையம் அடுத்த, கல்லுபாளையம் வீரமாத்தி அம்மன் கோவிலில் இருந்து, அருந்ததியர் தெரு வரைக்கும், ஒரு கி.மீ., தொலைவுக்கு, மண்சாலை உள்ளது. இவ்வழியாக நாள்தோறும் தனியார் பள்ளி, கல்லூரி வாகனங்கள், இரண்டு சக்கர, நான்கு சக்கர கனரக வாகனங்கள் சென்று வருகின்றன. அவை, வேகமாய் செல்லும்போது, புழுதிக்குள் வாகனங்கள் சிக்கிக் கொண்டு, பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். குறிப்பாக மழைக்காலத்தில், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். பாதசாரிகள் இவ்வழியாக செல்லும்போது, கடும் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து, பலமுறை புகார் கொடுத்தும் பலனில்லை. கல்லுபாளையத்தில், தார்ச்சாலை அமைக்கக்கோரி, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை