Advertisement
அதிகாரிகள் கவனத்திற்கு - நாமக்கல்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

மின்மோட்டார் அறை பராமரிக்க வேண்டும்: எலச்சிபாளையம் ஒன்றியம், குமரமங்கலம் அடுத்த, போக்கம்பாளையம் அருந்ததியர் தெருவில், 10 ஆண்டுகளுக்கு முன், மின் மோட்டார் அறை அமைக்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இந்த அறையின் முன்பகுதியில், குழாய்கள் பொருத்துவதற்காக, துளை போட்டனர். இதன் வழியாக, விஷ ஜந்துக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதுகுறித்து, பலமுறை புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை. மோட்டார் அறையை பரா மரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு கல்லூரி சுவரில் விரிசல்: குமாரபாளையம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி புதிய கட்டடம், கடந்த கல்வியாண்டில் திறக்கப்பட்டது. தற்போது, அதிக இடங்களில் சுவர், தரைத்தளம் உள்ளிட்ட இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. தரமற்ற கட்டடம் கட்டப்பட்ட நிலையில், மாணவ, மாணவியர் படிக்க அச்சம் கொள்ளும் நிலை உருவாகி உள்ளது. கட்டுமான பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விரிசல்களை சீர்படுத்தவும் கல்லூரி நிர்வாகம் முன்வர வேண்டும்.

மின்கம்பத்தில் விளக்கு இல்லை: பள்ளிபாளையம் அடுத்த, கரமேடு பகுதியில் இருந்து, சமயசங்கிலி தடுப்பணை செல்லும் சாலையில், கால்நடை மருத்துவமனை எதிரில், மின்கம்பம் உள்ளது. இதில், மின்விளக்கு இல்லை. வெறும் கம்பி மட்டும் உள்ளது. இரவு நேரத்தில், இச்சாலையில் செல்ல, வாகன ஓட்டிகள் அச்சப்படுகின்றனர். ஏற்கனவே இந்த பகுதியில், மர்ம நபர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. குடிமகன்கள் அட்டூழியம் அதிகரித்து வருகிறது. மின்விளக்கு அமைக்க வேண்டியது அவசியம்.

கிடப்பில் போட்டுள்ள பேரிகார்டுகள்: நாமக்கல், ஆஞ்சநேயர் கோவிலில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த, அனுமன் ஜெயந்தி விழாவுக்காக, நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவந்து, பக்தர்களின் பாதுகாப்புக்காக பேரிகார்டுகள் வைக்கப்பட்டன. அவற்றை மீண்டும் எடுத்துச் செல்லாமல் அங்கேயே போட்டுள்ளதால், கார்களில் வரும் பக்தர்கள் தங்களது வாகனங்களை நிறுத்த இடம் இல்லாமல் தடுமாறுகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.

நிழற்கூடத்தை பராமரிக்கணும்: பேளுக்குறிச்சியில் இருந்து, சேந்தமங்கலம் செல்லும் வழியில், தொட்டிச்சிக்காடு பஸ் நிறுத்தத்தில் நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுவட்டாரத்தில் இருந்து, அலுவலக நேரத்தில், 100க்கும் மேற்பட்டோர் இதை பயன்படுத்தி வருகின்றனர். பத்து ஆண்டுகளுக்கு மேலாக உள்ள இந்த நிழற்கூடத்தின் கூரை மற்றும் நாற்காலிகள் சேதமடைந்துள்ளன. இதனால், இங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் அனைவரும் வெயிலில் நிற்க வேண்டியுள்ளது.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்