வெயிலில் நிறுத்தி தண்டனை: தனியார் பள்ளி அடாவடி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வெயிலில் நிறுத்தி தண்டனை: தனியார் பள்ளி அடாவடி

Added : பிப் 17, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பெரம்பலூர்: கல்வி கட்டணம் செலுத்தாததால், மாணவர்களை தனியார் பள்ளி நிர்வாகிகள், வெயிலில் நிற்க வைத்தனர். பெரம்பலூர் அடுத்த, நெடுவாசல் பிரிவு ரோடு அருகே, ஆருத்திரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி உள்ளது. சுற்றுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். சில மாணவ, மாணவியர், மூன்றாம் பருவ கல்வி கட்டணம் செலுத்தவில்லை என, தெரிகிறது. இதனால், கட்டணம் செலுத்தாத மாணவ, மாணவியரை, நேற்று, வகுப்பறைகளில் இருந்து வெளியேற்றி, வெயிலில் நிற்க வைத்துள்ளனர். இதையறிந்த பெற்றோர், பள்ளி நிர்வாகத்திடம் கேட்ட போது, முறையான பதில் இல்லை. 'பிஞ்சு குழந்தைகளை, மனிதநேயமற்ற முறையில், வெயிலில் நிற்க வைத்து, தண்டணை வழங்கிய பள்ளி நிர்வாகம் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar - Chennai,இந்தியா
17-பிப்-201718:07:27 IST Report Abuse
Kumar சரியான நேரத்தில் பள்ளி கட்டணத்தை கட்டியிருந்தால் ஏனிந்த பிரச்சினை? அந்த பள்ளி வேண்டும் என்றுதானே சேர்த்தீர்கள்? பணம் சரியான நேரத்தில் காட்டுவோம் என்று சொல்லித்தானே சேர்த்தீர்கள்? உங்கள் தவறுக்குதானே உங்கள் பிள்ளைகள் தண்டிக்கப்படுகிறார்கள். இது தண்டனை அல்ல. உங்களுக்கு நிர்வாகம் அனுப்புகிற நோட்டீஸ்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை