'ஆட்சியை கலைத்து தேர்தல் நடத்த வேண்டும்': ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன் கோரிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'ஆட்சியை கலைத்து தேர்தல் நடத்த வேண்டும்': ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன் கோரிக்கை

Added : பிப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மொடக்குறிச்சி: ''இடைப்பாடி பழனிசாமி மீது ஊழல் புகார்கள் இருப்பதால், ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தல் நடத்த வேண்டும்,'' என, தமிழக காங்., முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வலியுறுத்தியுள்ளார்.


ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் நடந்த கட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இளங்கோவன், நிருபர்களிடம் கூறியதாவது: இடைப்பாடி பழனிசாமி மீது பல்வேறு ஊழல் புகார்கள் உள்ளன. நானே அவர் மீது ஊழல் புகார் தெரிவித்துள்ளேன். எனவே, அவர் முதல்வராக பதவி ஏற்பதற்கு, ஆளுநர் தடை விதிக்கவேண்டும். கட்சியிலும் ஆட்சியிலும் சசிகலா உறவினர்கள் காலூன்ற ஆரம்பித்துவிட்டார்கள். ஆட்சியை பிடித்துவிட்டதால், இனி அவர்கள் கைகளே ஓங்கியிருக்கும். மக்களுக்கு நன்மை இருக்காது. வாக்கெடுப்பு நடத்தினால் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவிருக்காது. முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும் ஆதரவு இருக்காது. எனவே, ஆட்சியை கலைத்துவிட்டு, சட்டசபை தேர்தலை நடத்த ஆளுனர் உத்தரவிடவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை