4 பேருக்கு கொடுத்த தண்டனை நாட்டுக்கு படிப்பினை: விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு விளக்கம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

ஈரோடு: 'உச்சநீதிமன்றத்தில், நான்கு பேருக்கு கொடுத்த தண்டனை, நாட்டுக்கு படிப்பினை' என்று, விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:சொத்து குவிப்பு வழக்கில், கீழமை நீதிமன்ற நீதிபதி குன்ஹா மிகத்தெளிவாக, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா, நான்கு ஆண்டு சிறை தண்டனை, அபராதம் விதித்தார். மேல் முறையீட்டு நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, நால்வரையும் விடுவித்து தீர்ப்பளித்தார். உச்சநீதிமன்றம், குமாரசாமி தீர்ப்பை நிராகரித்து, குன்ஹா வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. ஜெயலலிதா இறந்துவிட்டதால், தண்டனையில் இருந்து அவர் தப்பித்துக் கொண்டார். ஆனாலும், அபராதம் உள்பட அந்த நான்கு பேருக்கும் கொடுத்திருக்கும் தண்டனை, நாட்டில் உள்ளோருக்கு கிடைத்திருக்கும் படிப்பினையாகும். ஒரு பானை சோற்றுக்கு, ஒரு சோறு பதம் என்பதுபோல, ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகளின் நிலையை இந்த தீர்ப்பு விளக்கி உள்ளது. கரும்புள்ளி இல்லாத, பெரும் புள்ளியை அரசியலில் காண முடியாது. இதுபோன்ற தண்டனை கொடுப்பதன் நோக்கம், குற்றம் செய்தவர்கள் மீண்டும் இத்தகைய குற்றத்தை செய்யக்கூடாது என்பதற்காகவும், இதை பார்ப்பவர்கள், கேட்பவர்கள் உள்ளங்களில் இத்தகைய குற்ற எண்ணங்கள் வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் வழங்கப்படுகிறது. இதை நாட்டு மக்கள் வரவேற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்