கோபியில் நடந்த கு.க., முகாமில் ஒருவர் கூட சிகிச்சைக்கு வராத பரிதாபம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோபியில் நடந்த கு.க., முகாமில் ஒருவர் கூட சிகிச்சைக்கு வராத பரிதாபம்

Added : பிப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோபிசெட்டிபாளையம்: ஈரோடு மாவட்டம், கோபி அரசு மருத்துவமனையில் நேற்று நடந்த, ஆண்களுக்கான கருத்தடை முகாமில், ஒருவர் கூட சிகிச்சை பெற ஆர்வம் காட்டவில்லை.
குடும்ப நலம், மாவட்ட மக்கள் கல்வி மற்றும் தகவல் தொடர்பு பிரிவு மூலம், ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், சுழற்சி முறையில் ஆண்களுக்கான சிறப்பு கருத்தடை முகாம் நடக்கிறது. உயிர் அணுக்கள் செல்லும் பாதையில், விதைப்பையின் தோளில், கத்தியின்றி ரத்தமின்றி, சிந்தாமல் ஆண்களுக்கு குடும்பநல சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதேபோல் பெண்களுக்கு அடி வயிற்சில், வழியின்றி குடும்ப நல சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த சிகிச்சை பெற்ற ஆண்களுக்கு, 1,100 ரூபாய் ஊக்கத்தொகை, பெண்களுக்கு, 600 ரூபாய் வழங்கப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்தில், 2015ல், 108 ஆண்களுக்கும், 2016ல், 94 பேருக்கும் கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல் கோபி அரசு மருத்துவமனையில், கடந்த 2015ல், 326 பெண்களுக்கும், 2016ல், 345 பேருக்கும் கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோபி அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கான கருத்தடை சிகிச்சை முகாம் நேற்று நடந்தது. சுகாதார ஆய்வாளர்கள் ஞானப்பிரகாசம், சுப்பிரமணியம், வட்டார விரிவாக்க கல்வியாளர் ஜோதிராஜ் அடங்கிய குழுவினர் முகாமை வழி நடத்தினர். காலை, 9:00 மணி முதல், மதியம், 2:00 மணி வரை, நடந்த முகாமில், ஒருவர் கூட கருத்தடை சிகிச்சை மேற்கொள்ள முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை