கல்லறையில் இருக்கும்போதே இப்படி அடி விழுந்தால்... உயிரோடு இருந்த போது எப்படி விழுந்திருக்கும்: இளங்கோவன் கேள்வி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கல்லறையில் இருக்கும்போதே இப்படி அடி விழுந்தால்... உயிரோடு இருந்த போது எப்படி விழுந்திருக்கும்: இளங்கோவன் கேள்வி

Added : பிப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ஈரோடு: ''கல்லறைக்குள் இருக்கும்போதே, இப்படி அடி விழுந்தால், அவர் உயிரோடு இருந்தபோது எப்படி அடி வாங்கி இருப்பார் என்று சிந்திக்க வேண்டும்,'' என்று காங்., முன்னாள் தலைவர் இளங்கோவன் பேசினார்.
ஈரோட்டில் நடந்த, திருமண விழா ஒன்றில், தமிழக காங்., முன்னாள் தலைவர் இளங்கோவன் பேசியதாவது: தேசிய அளவில், தி.மு.க., பொதுச்செயலாளர் அன்பழகன், ஒரு வழக்கை தொடுத்து, மிகப்பெரிய தண்டனையை பெற்றுத்தந்துள்ளார். அயோக்கியத்தனம் செய்தால், தப்பிக்க முடியாது என்பதை உணர செய்துள்ளார். தவறு செய்தவர்கள், மக்களை ஏமாற்றியவர்கள் கல்லறை செல்ல வேண்டும் அல்லது சிறை செல்ல வேண்டும். இதை விடுத்து தப்ப முடியாது என, நிரூபிக்கப்பட்டுள்ளது. எல்லாவற்றுக்கும் ஒரு அளவு உண்டு. தமிழகத்தை முந்தானையில் முடிந்து வைத்துக் கொள்ளலாம் என நினைத்தால், சிறைக்குத்தான் போக வேண்டும். இந்த சம்பவத்தால், அரசியல்வாதி என, சொல்லிக் கொள்ள அவமானமாக உள்ள சூழல் ஏற்பட்டுள்ளது. எல்லாவற்றையும் ஜோதிடம் பார்த்துத்தான் செய்தனர். ஜோதிடர் சொன்னால் தான் வீட்டை விட்டு போவர். மகாமகத்துக்கு போவார். தோழியுடன் குளிப்பார். இத்தனையும் செய்தவர்கள், தப்பு செய்ததால் கல்லறைக்கும், சிறைக்கும் சென்றுள்ளனர். கல்லறைக்குள் இருக்கும்போதே, இப்படி அடி விழுந்தால், அவர் உயிரோடு இருந்தபோது எப்படி அடி வாங்கி இருப்பார் என, சிந்திக்க வேண்டும். கிராமத்தில் உள்ள மக்கள் சொல்கின்றனர், 'அடித்து கொன்றுவிட்டனர்' என்று, கல்லறையில் ஜெயலலிதாவுக்கு விழுந்த அடியை பார்த்தால், உண்மையிலேயே அடி வாங்கியவர், உயிரோடு இருக்க வாய்ப்பில்லை. எனக்கு யாரைப்பற்றியும் கவலை இல்லை. நாட்டை குட்டிச்சுவாராக்கினால் போதும் என நினைத்தால், சிறையில் போய்தான் நிம்மதியாக இருக்க முடியும். அங்கும் இவர்களுக்கு முதல் வகுப்பு வேண்டும் என்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

பின், நிருபர்களிடம் இளங்கோவன் கூறுகையில்,'' தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்திவிட்டு, நேரடியாக தேர்தலை நடத்துவது மட்டுமே, இத்தனை குழப்பங்களுக்கும் தீர்வு,'' என்றார்.தி.மு.க., பொதுச்செயலாளர் அன்பழகன், எஸ்.ஆர்.பாரதி, புகழேந்தி, மாவட்ட செயலாளர் முத்துசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை