ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஆய்வாளர் கைது| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஆய்வாளர் கைது

Added : பிப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில், பூந்தோட்டத்திற்கு மின் இணைப்பு வழங்க, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய அலுவலரை, லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர் அடுத்த பேகேபள்ளியை சேர்ந்தவர் லோகேஷ், 35. இவர் தனது நிலத்தில் பூந்தோட்டம் அமைப்பதற்காக, ஓசூர் சிப்காட், 1ல் அமைந்துள்ள மின்சார வாரிய அலுவலகத்தில், மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்தார். மின் இணைப்பு கொடுக்க வேண்டுமென்றால், 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என, அந்த அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வந்த சரவணன் கூறியுள்ளார். இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் லோகோஷ் புகார் செய்தார். இதையடுத்து, நேற்று பகல், 12:00 மணிக்கு, சரவணனிடம், 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., ஞானசேகரன் மற்றும் போலீசார், சரவணனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை