இடைப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு: அ.தி.மு.க., கொடி கம்பத்தில் கறுப்பு கொடி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இடைப்பாடி பழனிசாமிக்கு எதிர்ப்பு: அ.தி.மு.க., கொடி கம்பத்தில் கறுப்பு கொடி

Added : பிப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ப.வேலூர்: இடைப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ப.வேலூரில், அ.தி.மு.க., கொடி தலைகீழாக பறந்ததும், பாண்டமங்கலம் அருகே, கறுப்புக் கொடி ஏற்றப்பட்டது.
நாமக்கல் மாவட்டம், ப.வேலூர் அண்ணாதுரை சிலை அருகே, நேற்று மதியம், 3:00 மணியளவில், அ.தி.மு.க., கொடிக்கம்பத்தில் அக்கட்சியினர், கட்சி கொடியை தலைகீழாக ஏற்றிவிட்டுச் சென்றனர். இது, பொதுமக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இடைப்பாடி பழனிசாமி, நேற்று மாலை, 4:30 மணியளவில், முதல்வராக பதவியேற்க உள்ளதாக வெளியான தகவல் அடிப்படையில், அ.தி.மு.க.,வினர் கொடியை தலைகீழாக ஏற்றிவிட்டு சென்றனர். இந்த தகவல், வாட்ஸ் ஆப் மூலம் பரவியதையடுத்து, கொடி மீண்டும் சரி செய்யப்பட்டது. இதுகுறித்து, கட்சியில் அடிப்படை உறுப்பினராக இருந்த முத்துசாமி, 72, கூறுகையில், ''எம்.எல்.ஏ.,க்கள் மக்களின் நலனுக்காக செயல்படுவதுபோல தெரியவில்லை. கட்சியின் நிலைமை தலைகீழாகிவிட்டது என்பது, தலைகீழாக ஏற்றிய கொடியை பார்க்கும்போதே தெரிகிறது,'' என்றார்.


* பாண்டமங்கலம் அடுத்த, கோப்பணம்பாளையம் ஊராட்சி, உரம்பூர் பஸ் நிறுத்தத்தில், அ.தி.மு.க., கொடிக்கம்பத்தில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டிருந்தது. இது, இடைப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்கும் விழாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஏற்றப்பட்டதாக கட்சியினர் தெரிவித்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை