மணல் விலை கடும் உயர்வு: கட்டுமான பணிகள் பாதிப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மணல் விலை கடும் உயர்வு: கட்டுமான பணிகள் பாதிப்பு

Added : பிப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் பகுதியில், கடந்த ஒரு மாதமாக, மணல் விலை கடும் உயர்வை சந்தித்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்துக்கு கரூர், முசிறி, திருச்சி ஆகிய இடங்களில் இருந்து மணல் வருகிறது. ஒரு மாதத்தில் அதன் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த மாதம், இரண்டே கால் யூனிட் மணல், 6,000 ரூபாய் என இருந்தது. பத்து நாட்களுக்கு முன், 10 ஆயிரத்து, 700 ரூபாய்; ஐந்து நாட்களுக்கு முன், 12 ஆயிரத்து, 800 ரூபாய்; தற்போது, 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தொடர்ந்து, மணல் விலை உயர்ந்து கொண்டு செல்வதால், கட்டுமான பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நடுத்தர மக்கள் பணிகளை பாதியிலேயே நிறுத்திவிட்டனர். செங்கல் விலையும் உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, பள்ளிபாளையத்தை சேர்ந்த மணல் விற்பனையாளர் ஆனந்தன் கூறியதாவது: பள்ளிபாளையம் பகுதிக்கு, குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மணல் வருகிறது. இங்கு, ஐந்து நாட்களுக்கு ஒரு முறை தான் மணல் கிடைக்கிறது. ஐந்து நாட்களுக்கு லாரிகள் காத்திருக்கவேண்டிய நிலை ஏற்படுகிறது. அந்த நாட்களில் டிரைவர் சம்பளம், வாடகை போன்றவை கணக்கிட்டு தரப்படுவதால், மணல் விலை உயர்ந்து விட்டது. இதே நிலை நீடித்தால், கூடிய விரைவில், மணல் விலை, 20ஆயிரம் ரூபாயை தாண்டி விடும். விலையை சீராக வைக்க, அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை