தொழிற்பேட்டை அமைக்கும் பணி 60 சதவீதம் நிறைவு: துணை மின்நிலையம் அமைக்க நிதி ஒப்படைப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொழிற்பேட்டை அமைக்கும் பணி 60 சதவீதம் நிறைவு: துணை மின்நிலையம் அமைக்க நிதி ஒப்படைப்பு

Added : பிப் 17, 2017
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

நாமக்கல்: நாமக்கல் அருகே, லாரி பாடி கட்டும் தொழிற்பேட்டை அமைக்கும் பணி, 60 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக, சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் லாரி பாடி கட்டும் தொழிலானது முதன்மையாக உள்ளது. இதை சார்ந்த பெரும்பாலான தொழில் நிறுவனங்கள், நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளதால், போக்குவரத்து நெருக்கடி இருந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு, தொழில் நிறுவனங்கள் அனைத்தையும், நகருக்கு வெளியே அமைக்க முடிவு செய்யப்பட்டது. நாமக்கல் அடுத்த, வேலகவுண்டம்பட்டி புத்தூர் கீழ்முகம் மற்றும் முசிறி கிராமங்களில், 52.23 ஏக்கர் நிலம், லாரி பாடிகட்டும் தொழில் சங்கத்தின் மூலமாக தேர்வு செய்யப்பட்டது. இந்த நிலத்தை தொழிற்பேட்டையாக உருவாக்க, 2011, நவ., மாதம் அரசு உத்தரவிட்டது. திட்ட மதிப்பீடு, 13 கோடியே, 67 லட்சம் ரூபாய் ஆகும். லாரி பாடி கட்டும் தொழில் சங்கம், ஒரு கோடி ரூபாயை தன் பங்களிப்பாக வழங்குகிறது. தொழிற்பேட்டையில் உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்கும் பொருட்டு, தமிழக அரசால், 12 கோடியே, 67 லட்சம் ரூபாய் சிறப்பு நிதியாக ஒதுக்கப்பட்டது. சாலைவசதி, தெருவிளக்கு, மழைநீர் வடிகால் வசதி, மேல்நிலை நீர் தேக்க தொட்டி ஆகிய இனங்களுக்கு, 4.99 கோடி ரூபாய், துணை மின் நிலையம் அமைக்க, 8.68 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டன. துணை மின்நிலையம் அமைப்பதற்கான உத்தேச மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, நாமக்கல், மின்வாரியம் மூலமாக, சென்னை, தலைமை மின்வாரிய அலுவலகத்துக்கு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொழிற்பேட்டையில் உள்ள மனைகளை ஒதுக்கீடு செய்யும் பணி, லாரி பாடி கட்டும் தொழில் முனைவோர் சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இச்சங்கத்தின் ஆலோசனை கூட்டம், நேற்று, தலைவர் வெள்ளியங்கிரி தலைமையில் நடந்தது.

கூட்டத்துக்கு பின், சங்க தலைவர் வெள்ளியங்கிரி, செயலாளர் புகழேந்திரன் ஆகியோர் கூறியதாவது: தொழிற்பேட்டையில், 60 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. துணை மின் நிலையம் அமைக்க, இரண்டு ஏக்கர், 7 சென்ட் நிலம் வழங்கியுள்ளோம். துணை மின்நிலையம் அமைக்க, முதல் கட்டமாக, அரசின் நிதி, 4.10 கோடி ரூபாயை மின்வாரியத்திடம் ஒப்படைத்துள்ளோம். அந்த பணிகளை அடுத்து, மனை ஒதுக்கீடு துவங்கும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை