63 ஆண்டுகளுக்கு பின் சேலத்தை சேர்ந்தவர் தமிழக முதல்வர்| Dinamalar

63 ஆண்டுகளுக்கு பின் சேலத்தை சேர்ந்தவர் தமிழக முதல்வர்

Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

சேலம்: ராஜாஜிக்கு பின், சேலம் மாவட்டத்தில் இருந்து, மீண்டும் ஒருவர், தமிழக முதல்வர் ஆகியுள்ளார்.
சுதந்திர இந்தியாவின் மூத்த மற்றும் முக்கிய தலைவராக விளங்கியவர் ராஜகோபாலாச்சாரி எனும் ராஜாஜி. அவர், 1878ல், அப்போதைய ஒருங்கிணைந்த சேலம் மாவட்டமாக இருந்த தொரப்பள்ளியில்(தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம்) பிறந்தார். ஓசூரில் பள்ளி படிப்பை முடித்து, சென்னையில் சட்டம் படித்து, அரசியலில் களமிறங்கினார். சேலம் நகராட்சி உறுப்பினர், தலைவராக பதவி வகித்தவர். காங்., சார்பில், வெள்ளையர்களுக்கு எதிரான போராட்டங்களில் தலைமை வகித்தார். சுதந்திரத்துக்கு பின், 1947 முதல், 48 வரை, மேற்கு வங்க கவர்னர், 1948 முதல், 50 வரை, இந்திய கவர்னர் ஜெனரல், 1951 முதல், 52 வரை உள்ளாட்சி அமைச்சர், 1952 முதல், 54 வரை தமிழக முதல்வராக பதவி வகித்துள்ளார். 1959ல், காங்., கட்சியில் இருந்து வெளியேறி, சுதந்திரா கட்சியை துவக்கி நடத்தி வந்தார். பின், தமிழகத்தில் அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜானகி, ஜெயலலிதா, பன்னீர்செல்வம் என, முதல்வர் பெயர் பட்டியல் நீண்டபோதும், சேலம் மண்டல பகுதியில் இருந்து சென்றவர்கள் பெயர், அதில் இடம்பிடிக்கவில்லை.

கடந்த, 63 ஆண்டுகளுக்கு பின், சேலம் மாவட்டத்தை சேர்ந்த இடைப்பாடி பழனிசாமி, தற்போது, தமிழக முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த காலங்களில், எம்.எல்.ஏ.,- எம்.பி., அமைச்சர் என, பல்வேறு பதவிகளில் இடம்பிடித்திருந்த அவர், தற்போது, தமிழக உயர் பதவியான முதல்வர் பதவியில் அமர்ந்துள்ளார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.