தம்பி அடித்து கொலை: அண்ணனுக்கு 7 ஆண்டு சிறை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தம்பி அடித்து கொலை: அண்ணனுக்கு 7 ஆண்டு சிறை

Added : பிப் 17, 2017 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அரியலூர்: அரியலூர் அருகே, தம்பியை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொன்ற அண்ணனுக்கு, ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு, இரண்டு மனைவியர். முதல் மனைவியின் மகன் பிரபாகரன், 26. இரண்டாவது மனைவியின் மகன் ராஜேஷ்குமார், 21. பிரபாகரன், 2016 ஜூலை 11ல், நண்பர்களுடன் அப்பகுதியில் கிரிக்கெட் விளையாடினான். அப்போது, ஏற்பட்ட தகராறில் பிரபாகரன், தம்பி ராஜேஷ்குமாரை கிரிக்கெட் மட்டையால் தாக்கினான். படுகாயமடைந்த ராஜேஷ்குமார் இறந்தார். வழக்கு, அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. விசாரித்த நீதிபதி லிங்கேஸ்வரன், பிரபாகரனுக்கு, ஏழு ஆண்டு கள் சிறை, 1,000 ரூபாய் அபராதம் விதித்து, நேற்று தீர்ப்பளித்தார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-பிப்-201709:39:38 IST Report Abuse
ரங்கன் 1000 ரூபாய் அபராதம்? பிச்சக் காசு... ஏதோ அம்மா கடை இட்லி விலை மாதிரி இருக்கு. ஒரு 10 லட்சம் அபராதம், 25 வருஷம் ஜெயில்னு போடணும். இந்தக் கொலைகாரனை உள்ளே வச்சுப் பாக்குற செலவ யார் குடுப்பா?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை