நாளை(பிப்.,18) சட்டசபை கூட்டம்: இடைப்பாடி அரசு தப்பிக்குமா?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

நாளை(பிப்.,18) சட்டசபை கூட்டம்: இடைப்பாடி அரசு தப்பிக்குமா?

Added : பிப் 17, 2017 | கருத்துகள் (46)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
இடைப்பாடி பழனிச்சாமி, சட்டசபை கூட்டம்

சென்னை : முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சிக்கு, பெரும்பான்மையை ஆதரவு உள்ளதா என்பதை நிருபிக்க, நாளை, 18ம் தேதி, சட்டசபை கூடுகிறது.
முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்தை, கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்து, அந்தப் பதவியை பிடிக்க முற்பட்ட சசிகலா, சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை உறுதியானதால் சிறை சென்றார். இதையடுத்து, அ.தி.மு.க., சட்டசபை கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்ட இடைப்பாடி பழனிச்சாமி, நேற்று முதல்வராக பதவியேற்றார். அவர், 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என, கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
கூவத்தூரில் சிறை வைத்துள்ள, எம்.எல்.ஏ.,க்களை, அதிக நாட்கள் தங்கள் பிடியில் வைத்திருக்க முடியாது என்பதால், உடனடியாக சட்டசபையை கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க ஏற்பாடு செய்வது என, சசிகலா குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, சட்டசபை கூட்டம் நாளை நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை காலை, 11:00 மணிக்கு, சட்டசபை கூடுகிறது; அதில், புதிய அமைச்சரவை மீது, நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானம் எடுத்துக் கொள்ளப்படும் என, சட்டசபை செயலர் ஜமாலுதீன் நேற்று அறிவித்தார்.
சட்டசபையில், ஒரு காலியிடம் தவிர, அ.தி.மு.க.,விற்கு, 135; தி.மு.க.,விற்கு, 89; காங்கிரசுக்கு, எட்டு; முஸ்லிம் லீக்கிற்கு ஒன்று என, மொத்தம், 233 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களில், பன்னீர்செல்வம் உட்பட, 10 எம்.எல்.ஏ.,க்கள், தனி அணியாக உள்ளனர். மீதம், 124 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஆதரவு அளித்தால் மட்டுமே, இடைப்பாடி பழனிச்சாமி ஆட்சி நிலைக்கும்.- நமது நிருபர் -

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajasekaran - Vizg,இந்தியா
17-பிப்-201717:50:44 IST Report Abuse
Rajasekaran இதில் எடப்பாடி பழனிசாமி பெருபான்மையை நிருபிப்பார் ஏன் என்றால் அணைத்து சட்டசபை உறுப்பினர்களுக்கும் பணம் மட்டுமே குறிக்கோள் (ஆனால் உங்களுக்கு பணம் கிடைக்காது எத்தனை பேர ஆட்டைய போட்டிருக்கானுக நீங்கல்லாம் ஒரு பிஸ்கோத்து.) மக்கள் அல்ல ஆனால் இப்பொழுது இவர்கள் எல்லோரும் பணத்துக்காக எடப்பாடிக்கு ஆதரவு அளித்தாலும் ஒரு மாதத்திற்கு பிறகு ஒரு பத்து சட்டசபை உறுப்பினர்கள் வெளியே வந்து விட்டால் இந்த அரசு கலைக்கப்படும்
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-பிப்-201716:47:31 IST Report Abuse
Pugazh V இப்போ புலம்பி என்ன செய்வது. 2011 முதல் அதிமுக அரசு. அமைந்த 20 மாதங்களில் 18 முறை மாற்றி அமைக்கப்பட்டது அமைச்சரவை. இடையில் ஜெயலலிதா குற்றவாளி என்று நிரூபணம் ஆகி முதல்வர் எம் எல் ஏ பதவி எல்லாம் பறிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கண்ணீரும் கம்பலையுமாக ஒரு அமைச்சரவை பதவி ஏற்றதும் கோவில் குளம் என்று சுற்றி மண் சோறு, காவடி, தீச்சட்டி எடுத்தது அரசு மொத்தமும். அப்புறம் சிறையிலிருந்து மீண்டு வந்து கிடைத்த தேர்தல் உருவாக்கி அதில் ஜெய போட்டியிட்ட போது 71 % வாக்காளர்கள் குற்றவாளி என்று நிரூபணமான ஜெயாவை தேர்ந்தெடுத்தார்கள். மீண்டும் 6 முறை அமைச்சரவை மாற்றம்.அடுத்து 2016 இல் தேர்தல் வந்த போது, குற்றவாளி என்று நிரூபணம் ஆகி சிறை சென்ற அதே ஜெய மற்றும் கூட்டத்த்துக்கு வாக்களித்து தொடர்ச்சியாக இரண்டாம் முறையும் ஆட்சியை மக்கள் கொடுத்தார்கள். இதெல்லாம் தவறே இல்லை என்பது போல, பிற திமுக செய்திப் பக்கங்களில் எழுதவும் செய்கிறார்கள். இங்கே வந்து குய்யோ குறையோ என்று கூப்பாடு போட்டு என்ன பயன்? அடுத்த நாலு வருஷம் மாபியாவும் நிழல் ஆட்சி தான். வேறு வழியே இல்லை. சட்ட மகரத்தில் அமளி அடிதடி நடக்கப் போகிறது, திமுக வெளி நடப்பு செய்யும். உடனே திமுக வை எதிர்த்து நாலு நாலு வரி எழுதி சந்தோஸஹ்ப்பட்டுக்க வேண்டியது தான். தமிழன்டா
Rate this:
Share this comment
Cancel
Revathi Archana - madurai,இந்தியா
17-பிப்-201716:18:05 IST Report Abuse
Revathi Archana கட்ட துறைக்கு கட்டம் சரியில்ல ,கட்டத்தை விட இதுங்களோட திட்டம் சரியில்ல ,அதனால் இடையே இறங்கி ஊரை பார்த்து ஓடும் நிலை வரும் ,பட் இதில் என்ன ஒரு டுவிஸ்ட்டுன்னா இடைப்பாடி ஊர்ப்பக்கம் போக முடியாது
Rate this:
Share this comment
Cancel
Revathi Archana - madurai,இந்தியா
17-பிப்-201716:12:36 IST Report Abuse
Revathi Archana இடைப்பாடி ஆட்சி இடையிலேயே கலைக்கப்படும் .ஏன்னா கட்டம் அப்படி தான் சொல்லுது ,
Rate this:
Share this comment
Cancel
Maddy - bangalore,இந்தியா
17-பிப்-201714:04:12 IST Report Abuse
Maddy ஈ.பி.எஸ் 6 மாத முதல்வர் தான் அதற்க்கு பின்பு காட்சிகள் மாறும் கோலங்கள் மாறும்...
Rate this:
Share this comment
Cancel
nimmi - Dindigul,இந்தியா
17-பிப்-201713:28:10 IST Report Abuse
nimmi சிறந்த பாராளுமன்ற ஜனநாயக வாதியும், முதிர்ந்த அரசியல் தலைவருமான திரு க.அன்பழகன் அவர்கள் நேற்று திருப்பூர் செய்தியாளர்களுக்கு அளித்த பெட்டியில், "திமுக எந்த அணிக்கும் ஆதரவு அளிக்காது " என்று கூறிய அதே வேளையில் "சசிகலா அணியினர் வாக்கெடுப்பில் வெற்றி பெறுவது சந்தேகமே" என்று கூறியுள்ளது புரியாத புதிராக உள்ளது. திமுக ஏதேனும் திட்டம் வைத்துள்ளதோ என்ற ஐயத்தினை வரவழைக்கிறது. நாளை என்ன நடக்கப் போகிறதோ.
Rate this:
Share this comment
Cancel
rsudarsan lic - mumbai,இந்தியா
17-பிப்-201713:16:28 IST Report Abuse
rsudarsan lic யார் இந்த 124 MLA கூட்டம்? இவர்கள் தொகுதிகள் என்ன? இவர்களது குடும்பத்தாருக்கு விண்ணப்பங்கள் : ஜே மீதும் கட்சி மீதும் மதிப்பு வைத்திருந்தால் துணிந்து எதிரிவோட்டு போடுங்கள். தேர்தல் வரட்டும் அல்லது ஓ பி ஸ் வரட்டும். ஒரு சாதிக்கு (மன்னிக்கவும் சதிக்கு) உடன்போன பாவத்தை செய்யாதீர்கள்
Rate this:
Share this comment
Cancel
Aboobacker Siddeeq - Singapore,சிங்கப்பூர்
17-பிப்-201713:14:10 IST Report Abuse
Aboobacker Siddeeq பெட்டி பெற்றதற்கு கைக்கூலியாகவும், கூவத்தூர் ஹோட்டலின் சுகபோகங்களுக்காகவும் மற்றும் பயங்கர ஆயுதங்களின் மிரட்டல்களுக்கு பயந்தும் சசியின் ஆதரவு எம்.எல்.ஏ .க்கள் பயத்தினாலே வாக்களித்து பெரும்பான்மையை தற்சமயம் நிரூபித்து விடுவார்கள்... ஆனால் ஊருக்குள் இவர்களால் தலை வைத்து கூட படுக்கமுடியாத அவல நிலை இந்த வாக்களிக்கும் உறுப்பினர்களுக்கு கிடைக்காது. எப்போதும் போலீஸ் பாதுகாவலுடன் சபைக்கும் கூவத்தூருக்கும் வந்து போயி கழக பணியாற்ற வேண்டியது இருக்கும்....அரசு கவிழ்வதையே மக்கள் விரும்புகிறார்கள்....
Rate this:
Share this comment
Cancel
Radhakrishnan - Coimbatore,இந்தியா
17-பிப்-201713:03:57 IST Report Abuse
Radhakrishnan பாயிண்டு வரட்டும் பாயிண்டு வரட்டும் னு உக்காத்துராதிங்க
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
17-பிப்-201713:00:31 IST Report Abuse
இந்தியன் kumar அன்று ஜானகி அணிக்கு ஏட்பட்ட நிலை தான் இன்று எடபடியாருக்கு , எம் எல் ஏக்கள் மீது நம்பிக்கை இருந்தால் கூவத்தோரில் அவர்களை இன்னும் ஏன் தங்க வைத்திருக்க வேண்டும். சிலர் கட்டாயப்படுத்தப்பட்டு தங்க வைக்க பட்டிருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
Rate this:
Share this comment
Soosaa - CHENNAI,இந்தியா
17-பிப்-201714:42:12 IST Report Abuse
Soosaaசின்ன வித்தியாசம். அன்று நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலில் வென்று பிறகு ராஜிவ் காந்தி ஜானகிக்கு அரசியல் ஞானத்தை பிடிக்காமல் கலைத்து விட்டார். ஆனால் இன்று கூட்டணி ஆட்சி இல்லை. அ தி மு க mla க்கள் விசுவாசத்தை காட்டுகிறார்களா அல்லது வைட்டமின் ப வுக்கு அடிமையாகி இருக்கிறார்களா என்பதை பொறுத்து தான் நாளை முடிவு....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை